"சார்பியல் எனும் சமுத்திரம்" ( பாகம் 3)





"சார்பியல் எனும் சமுத்திரம்".(அத்தியாயம் 3)


யாரும் கற்பனைக்கூட பண்ணி இருக்க முடியாத பல உண்மை கருத்துக்களை ஐன்ஸ்டைன் எழுதிய போது அவர் ஒரு பேடன்ட் காப்பக அலுவலகத்தில் சாதாரண க்ளர்க்.. (இங்கிரிமெண்டுக்கு எழுதி போட்டு நிராகரிக்க பட்டிருந்தார்)ஏதோ வார இதழ்க்கு கவிதை எழுதுவதை போல அலுவலக வேலைகளுக்கிடையே அவர் எழுதிய கட்டுரை..மஹா அறிவியல்..
அவர் எழுதிய 4 கட்டுரைகள் என நான் கடந்த கட்டுரையில் சொல்லி இருந்தேன் அதில்
முதலில் பிரவுனின் மோஷன் ஐ விளக்கும் ஒரு கட்டுரை....
 இது சார்பியல் கோட்பாடு அளவு சிக்கல் இல்லை...கொஞ்சம் எளிமையானது...

அரைகுறை இருட்டில் அமர்ந்து ஜன்னல் வழியே வரும் சூரிய ஒளியை கவனித்தால்..அதில் சின்ன சின்ன தூசி துகள்கள் ஒரு ஒழுங்கு இல்லாமல் அங்கும் இங்கும் அலைவதை பார்க்கலாம் இதுதான் பிரவுனின் எபெக்ட் ...
(அதை கண்டு பிடித்த அறிஞர் பெயர் பிரவுன்!) இந்த இயக்கம் திரவ மாலிக்கியுளிலும் நடக்கிறது.
.அன்றைய கால கட்டத்தில் அனு என்பது உறுதி செய்யப்படாத ஒரு சந்தேக கேசாக இருந்தது .ஐன்ஸ்டைன் அவ்ர்கள் "கைநடிக் தியரி அப் ப்ளுயண்ட்" என்னும் கோட்பாடு மூலம் துகள்கள் தன்னிச்சையாக மோதி கொள்வதை விவரித்த பின் அனு இருப்பது உறுதி செய்யப்பட்டது..

இரண்டாவது அவர் எழுதியது
 "போட்டோ எலக்ட்ரிக் எப்பக்கட்"..
நம் அன்றாட பயன் பாட்டில் உள்ள சோலார் பேணலில் மின்சார உற்பத்தி அகிறதே அதான் போட்டோ எலெக்ட்ரிக்..
ஓளி என்பது அலை வடிவில் பரவுகிறது என்ற கேட்பாட்டை இவர் மாற்றி அமைத்தார் அது துகள் வடிவில் இருக்கிறது என்பதை நிரூபித்து போட்டோ எலக்ட்ரிக்கை விளக்கினார்..அந்த துகளுக்கு பின்னாளில் 'போட்டான்' என பெயரும் வைத்தார்கள்..

 அவரது அடுத்த கட்டுரை தான் சார்பியல் கேட்பாடு...நாம் பார்க்க வந்த சமுத்திரம்....

ஸ்பெஷல் தியரி ஆப் ரேலெட்டிவிட்டியை புரிந்து கொள்ள ஏதுவாக அதன் முன்னுரையான கிளாசிக் தியரி அப் ரிலேடிவிட்டி யை விளக்குகிறேன் (இன்னும் எத்தன வகைய்யா இருக்கு??)
ஒரு எளிமையான உதாரணம்..ஒரு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் பேருந்தில் நீங்கள் இருக்கிறீர்கள்...அதன் டாப்பில்.. என வைத்து கொள்ளுங்கள்..உங்கள் கையில் ஒரு பந்து அதை நீங்கள் மெதுவாக முன்னோக்கி ஒரு 10 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறீர்கள் ...அப்போது உங்கள் பார்வையில் அந்த பந்து எவ்ளோ வேகத்தில் போகிறது? 10 கிலோமீட்டர் ..சிம்பிள்...
அதே பந்தை கீழே தரையில் நின்று கொண்டிருந்தவர் கவனித்தால் ..அப்போ அவர் அதை பேருந்தின் வேகம்80 கிலோ மீட்டரோடு சேர்த்து 90 கிலோமீட்டர் வேகத்தில் அல்லவா உணர்வார் ..உங்களுக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் தெரிந்த பந்து அவருக்கு மட்டும் 90 கிலோ மீட்டர் வேகத்தில் தெரிவது தான் கிளாசிக் தியரி ஆப் ரிலேடிவிட்டி...

  (அடடே ரிலேடிவிட்டி எளிமையாதான் இருக்கு!)..

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது...ஒரு பொருள் என்ன வேகத்தில் நகர்கிறது..அல்லது நகர்கிறதா இல்லயா..என்பதெல்லாம் அதை கவனிப்பவர் எந்த இடத்தில நிற்கிறார் என்ன வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை பொறுத்தே அமைகிறது..

 இப்போது இதை கொஞ்சம் வேற கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும் அதாவது பஸ் ..ரோடு ...என்று பார்க்காமல் பிரபஞ்சம் கிரகம் என....
இந்த பிரபஞ்சத்தில் நாம் கவனிக்கும் நகரும் பொருள்கள் எல்லாமே உண்மையிலேயே நாம் கவனிக்கும் வேகத்தில் தான் நகர்கிறதா...நீங்கள் உங்கள் பால்வெளியில் எந்த இடத்தில நிற்கிறீர்கள் என்ன வேகத்தில் நகர்கிறீர்கள் என்பதை பொறுத்து அது மாறும் அல்லவா...

இந்த பூமி கிட்டத்தட்ட 29 கிலோமீட்டர் வினாடிக்கு நகர்கிறது...சூரியன் 250 கி.  மி வினாடிக்கு...நகர்கிறது..நமது பால்வெளி திரளே இந்த பிரபஞ்ச வெட்ட வெளியில் 600 கி .மி வினாடி என்ற வேகத்தில் நகர்ந்து கொண்டு தான் உள்ளது..(இந்த உலகம் நிலை இல்லாததுன்னு கேள்வி பட்டிருக்கன்..பிரபஞ்சமே அப்படித்தானா)

ஒரு மைய அச்சில் சுழல கூடிய தட்டில் அங்கங்கே வெவேறு இடைவெளியில் சில எலுமிச்சை பழத்தை வைத்து ஒட்டி விட்டு தட்டை சுற்றி விட்டால் அது பார்க்க நம்ம சூரிய குடும்பம் போல தெரியும் ஆனால் அதில் ஒன்று கூட மையத்தை தானே சுற்றிவரவில்லை என்பதை கவனிக்கவும் இருந்த இடத்தை விட்டு அசைய கூட  இல்லை (அதான் ஒட்டியாச்சே...) சுழல்வது தட்டு தான் என்பதை போல வெறும் வெளி தான் சுழல்கிறதா..கிரகங்கள் நகர்வது ப்ரமையா உண்மையா அல்லது இரண்டும் கடந்து ஐன்ஸ்டைன் ஸ்டைலில் சார்புடையதா??(இப்ப தானயா எளிமையா இருக்கு னு சொன்னேன்)

சரி விடுங்கள் நாம திரும்ப அந்த 29 c பஸ்ஸுக்கே போவோம்..(ஒரு பேச்சுக்கு சொன்னேன்)..அனால் இம்முறை பேருந்து ஓடுவது மவுண்ட் ரோட்டில் அல்ல பிரபஞ்ச வான வெட்ட வெளியில் ..வேகம் ..கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் பாதி வேகம் (ஒளி வேகம் எனபது வினாடிக்கு 3 லட்சம்)எனவே நமது பேருந்து இப்போ கிட்ட தட்ட 1.5 லட்சம் வேகத்தில் ஓடுகிறது..(டீசல் விளையேற்றத்துல இது தேவையா) உங்கள் கையில் இருப்பது பந்து அல்ல டார்ச் ...இப்போது நீங்கள் பஸ் போகும் திசை நோக்கி ஒளியை வீசினால் உங்களுக்கு ஒளி 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்திலும் இதை கீழே நின்று கவனிக்கும் (கீழ எங்க நிப்பான்) நண்பருக்கு 3 லட்சம்+ 1.5 லட்சம் மொத்தம் 4.5 லட்சம் கி. மி  வேகத்திலும் தெரியவேண்டும் அல்லவா...
அனால் அப்படி நடக்க வில்லை என ஐன்ஸ்டைன் கண்டார்...அவருடைய ஸ்பெஷல் தியரி ஆப் ரிலேடிவிட்டி விவரிப்பது இதை தான்(ஹை ..!கடலுக்கு வந்துட்டமா)

                    ஒளி நின்று கொண்டு வீசினாலும் ஒளிக்கு எதிர் திசையில் நகர்ந்த வண்ணம் வீசினாலும் அல்லது ஒளியோடு சேர்ந்து நகர்ந்து கொண்டு வீசினாலும் ஏன் ஒளியோடே சேர்ந்து ஒளி வேகத்தில் ஓடிக்கொண்டு வீசினாலும் ...கவனிப்பவர் எங்க இருந்து கவனிதாலும் ஒளி கான்போருக்கு தனது வேகத்தை மாற்றி கொள்வதே இல்லை (ஒரு கற்பனைக்கு ஒளி யின் வேகம் மிக மிக மிக குறைந்து விட்டால் என்னாகும் என்று சொல்கிறேன் ..ரோட்டில் ஒரு ஃபிகர் போகும் நீங்கள் பின்னாலேயே போயி பார்த்தால் ...அங்க பிகர் இருக்காது உண்மையில் அது 3 மணி நேரம் முன்னாடி அங்க போனதை இப்போ தான் நீங்க பார்ப்பீங்க ...(விளைவு பயங்கரமா இருக்கு இல்ல)

இது எப்படி நடக்கும் என ஐன்ஸ்டைன் சிந்தித்தார் (ஃபிகரை இல்லை...).
அப்போது ஒளி வேகத்தில் நகரும் பொருளுக்கு என்ன நேர்கிறது என்ற உண்மையை ஆறாய்ந்தார்.
முடிவுகள் சொன்னால் நம்பும் படியாக இருக்காது என்றாலும் சொல்லத்தான் வேண்டும்..

ஒளி வேகத்தில் நீங்கள் நகர்ந்தால் நகரும் திசையை நோக்கி நீங்கள் தட்டையாக சுருங்குகிறீர்கள்...உங்கள் நிறை உங்கள் டயட்டை மீறி எக்கச்சக்கமாக அதிகரிக்கிறது...
எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் காலம்..அது நிலையா இருப்பவனை ஒப்பிடும் போது மிக குறைந்து விடு கிறது...

ஒளி வேகத்தில் நகரும் சாத்தியம் இருந்து நீங்கள் ஒளி வேகத்தில் எங்காவது டூர் கிளம்பி போய் ஒரு வருடம் கழித்து வந்து பார்த்தால் உங்களுக்கு ஒரு வருடம் மட்டுமே ஓடிய காலம் மற்றவருக்கு 5 வருடம் ஓடி விட்டிருக்கும் (அந்த ரோடு பிகருக்கு 2 குழந்தை இருக்கும் நீங்கள் இன்னும் வாஜ்பாயாக இருப்பீர்).

பிரபஞ்சத்தில் அதிக வேகமாக பாயும் ஒன்று ஒளி மட்டும் தான் அதை மிஞ்சும் வேகம் வேற ஏதும் இல்லை..
அப்படி மிஞ்சினால் காலத்தை தலைகீழகவே திருப்பும் அபாயம் உண்டு என்றாலும் ஒளி வேகத்தை நெருங்கும் பொருளின் நிறை முடிவிலியாக அதிகரிப்பதால் அது மிஞ்ச விடுவது இல்லை
இப்படி பட்ட கருத்தை எல்லாம் முதல் முதலில் சொன்ன போது நம்ம தல நிலமை எப்படி இருந்திருக்கும் யோசிச்சி பாருங்க...உலகம் அவரை பரிகாசம் செய்தது...
அந்த நேரத்தில் இருந்த ஒரு பெரிய அறிவியலாளர் இவர் கண்டுபிடிச்சது மகத்தான ஒண்ணுன்னு எடுத்து சொன்ன பின் தான் மக்கள் ஓரளவு நம்பினார்கள்...

இதுலாம் உண்மையா என சோதிக்க அப்போதைக்கு வழி இல்லாது போனாலும் பல ஆண்டுகள் கழித்து... பூமிக்கு அடியில் கிட்ட தட்ட 20 கி. மி சுற்றளவில் மிக பெரிய ஹைராஜன் கொளையிடர் என்ற பிரமாண்ட கருவியை கொண்டு சோதித்ததார்கள்.
இயற்கையாகவே மிக சில கணங்கள் மட்டுமே வாழ கூடிய மையான் துகளை கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் முடுக்கி விட்டு பார்த்த போது அதன் ஆயுட் காலம் 6 மடங்கு அதிகமானதை கண்டு அதிசையித்தார்கள் .
எந்த கருவியும் இல்லாமல் ஆய்வும் இல்லாமல் ஐன்ஸ்டைன் எனும் அப்பாடகர் இதை எப்படி கண்டு கொண்டார் என பிரமித்தார்கள்..உலக வரலாற்றில் தலை சிறந்த விஞ்ஞாணி என அவருக்கு புகழாரம் சூட்டினார்கள்...
சிந்திப்பதில் யாரும் தொடாத உயரத்தை அவர் தொட்டிருப்பதை உலகம் உணர்ந்து கொண்டது...

(தொடரும்...)

நண்பர்களே..

சார்பியல் என்னும் சமுத்திரத்தின் 3 ஆம் பகுதியை நிறைவு செய்கிறேன்..கடலின் ஒரு துளியை ருசி காட்டி இருக்கிறேன் ஈர்ப்புவிசையில் வின்வெளியே விளைகிறது..
.காலமும் வெளியும் வெவ்வேறு அல்ல அது காலவெளியாக செயல் படுவது..
மற்றும் நிறையும் ஆற்றலும் வெவ்வேறு அல்ல போன்ற ஆச்சர்யத்தை..வரும் கட்டுரைகளில் (general theory மற்றும் e=mc2)என்ற கட்டுரைகளில் விளக்குகிறேன்.


தொடரும்............





Comments

  1. Sir I have a doubt, nenga sonnenga 12b bus 80km per hour nu travel pannumbothu athula irunthu oru ball ah 10km per hour nu thooki pota tharaila irunthu pakaravanuku athu 90km per hour ah theriyum nu. Suppose 12b bus ku pakathula 12c bus 100km per hour nu travel pannumbothu antha bus la irunthu pakaravanuku ball oda speed negative la theriyuma?

    ReplyDelete
  2. உங்களுக்கு எழுத்துக் கலை கை வந்த கலையாக இருக்கிறது... வாழ்த்துகள் நண்பரே.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"