"வார்ம் ஹோல் பிராபஞ்சத்தின் ஷார்ட் கட்"






"வார்ம் ஹோல்  பிராபஞ்சத்தின் ஷார்ட்_கட்"

(கருத்தும் எழுத்தும்:ரா.பிரபு)

பிளாக் ஹோல் ஒரு அதிசய மாயா ஜாலம் என்றால் இன்று நான் சொல்லவிருக்கும் worm hole மஹா அதிசய மாயாஜாலம்..

இந்த worm hole அதாவது தமிழில் புழு துளை என்று சொன்னால் என்னையா பேரு இது என்று நினைப்பீர்கள் ஆனால் பின்னால் இதன் பெயர் காரணத்தை விவரிக்கும் போது ஏற்று கொள்வீர்கள்.

இந்த வார்ம் ஹோல் பிரபஞ்சத்தின் ஷார்ட் கட் என்று சொல்லலாம். ஓளி வேகத்தில் பாய்ந்தும் பல ஆயிரம் ஆண்டுகள் கடக்கும் காலத்தையும் வெளியையும் இதை பயன்படுத்தி வினாடிக்கும் குறைவான நேரத்தில் கடக்கலாம்.
இந்த worm hole ஐ புரிந்து கொள்ள எனது 'சார்பியல் எனும் சமுத்திரத்தில் '3 வது பாகத்தில் நான் சொன்ன அதே எடுத்துகாட்டை மீண்டும் பயன்படுத்து கிறேன்.

அதாவது நீங்கள் மயிலாப்பூரில் ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கிறது அந்த புள்ளியில் நீங்கள் தலையை விட்டால் மாயாஜால படத்தில் வருவதை போல நாகர்கோவிலில் எட்டி பார்ப்பீர்கள் அந்த புள்ளிக்கு பெயர் தான் worm hole .
இயற்கையில் இது மயிலாப்பூரில் இல்லை ஆனால் பிரபஞ்சத்தில் நிறைய இடத்தில உள்ளது .இதை வைத்து பல ஒளி ஆண்டு தொலைவை ஒரே வீநாடிக்கும் குறைவான நேரத்தில்  கடக்கமுடியும்.
அப்படி வெளியை கடந்தால் இன்னொன்றையும் தானாகவே நாம் கடக்க வேண்டிவரும் அதுதான் காலம்..

உதாரணமாக நமக்கு மிக அருகில் இருக்கும் அடுத்த காலக்சி  பெயர் ஆன்றோமீடா இதை நாம் சென்றயடைய 25 ஒளி ஆண்டுகள் ஆகும் . ஆனால் இவ்வளவு பெரிய தூரம் மற்றும் வெளியை worm hole பயன்படுத்தி ஒரே வினாடியில் சென்று வரலாம்.

இது எப்படி வேலை செய்கிறது இந்த கோட்பாட்டின் அடிப்படை என்ன என்பதை புரிந்து கொள்ள நாம் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டை புரிந்தது கொள்ள வேண்டும்..(விரிவாக தெரிந்து கொள்ள சார்பியல் பற்றிய நான் எழுதிய 5 பாக கட்டுரையை படித்து பாருங்கள்)

ஐன்ஸ்டைன் கூற்றுப்படி வெளியை சுருட்ட.. வளைக்க ..விரிக்க முடியும்..அப்படி சுருட்டி ஒண்ணா பின் போட்ட புள்ளி தான் வார்ம் ஹோல்.. புரியலயா? சரி விடுங்கள்.

 ஒரு வெள்ளை தாளை எடுத்து கொள்ளுங்கள்... இப்போது இது பேப்பர் அல்ல இதான் வானம் அல்லது வெளி என்று நினைத்து கொள்ளுங்கள் இதில் இடது பக்கத்தில் தொடக்கத்தில் ஒரு புள்ளியை வையுங்கள் இதுதான் நாம் இருக்கும் பால் வெளி திரள் நமது galaxy... இப்போது வலது பக்க கடைசில ஒரு புள்ளி வையுங்கள் .இதுதான் ஆந்திரா... சாரி ஆண்ட்ரோமிடா.. நமது பக்கத்துக்கு galaxy.. இப்போது இந்த ரெண்டு பள்ளியையும் பென்சிலை கொண்டு இணையுங்கள்... இந்த கோடுதான் 25 ஒளி ஆண்டுகள் .அதாவது இந்த புள்ளியிலிருந்து அந்த புள்ளியை அடைய நீங்கள் இந்த கோடு வழியாக தான் சென்றாக வேண்டும் (அவ்வளவு காலம் மற்றும் தூரம்)

இப்போது அந்த பேப்பரை அப்படியே சுருட்டி அந்த ரெண்டு புள்ளியை இணையுங்கள் ... சந்திக்கும் இடத்தில ஒரு குண்டு ஊசியை குத்துங்கள் ...அந்த புள்ளிதான் வார்ம் ஹோல்..

இப்போது இரு புள்ளிகளுக்கிடையான கால மற்றும் வெளி இடைவேளை எவ்வளவு... அது கிட்ட தட்ட zero .. இந்த புள்ளி முடியும் அதே புள்ளியில் அந்த புள்ளி தொடங்குகிறது. .
இரு வானங்களை இணைக்கும் இந்த சுரங்கம் மாதிரியான அமைப்பை கொண்டு நாம் விண்வெளியில் கற்பனை பண்ண முடியாத தூரம் பயணம் பண்ணலாம் .

இரண்டு ப்ரபஞ்சகளுக்கு இடையிலான கதவு தான் இந்த worm hole இதை பயன் படுத்தி சென்று விட்ட உங்களை பிடிக்க பூமியிலிருந்து அதிவேக ராக்கெட் எடுத்து கொண்டு கிளம்பும் உங்கள் நண்பர் உங்களை பிடிக்க பல லட்சம்...கோடி ஆண்டுகள் ஆகும்.(Thore படத்தில் இந்த worm hole ஐ பயன்படுத்தி தான் நமது பூமிக்கு வந்து சேருவார்.. சுத்தி மன்னன் தார்..)

ஒரு ஆபிளில் மேல் தட்டையான இரண்டு புழுக்கள் அமர்ந்திருந்தன..
அவைகளின் பார்வையில் ஆப்பிள் ஒரு தட்டை பரப்பு 2d வடிவம் என நம்பி கொண்டிருந்தன... (நாம் நீண்ட காலமாக பூமியை நம்பிக்கொண்டிருந்தை போல) அதில் ஒரு புழு ஆப்பிலின் அடுத்த முனையை தேடி புறப்பட்டது..
அது நகர்ந்து செல்ல செல்ல ஆப்பிள் வளைவில் மறைவதை புழு நம்பர் ஒன் கவனித்தது(கடலில் செல்லும் கப்பல் கடற்கரையிலிருந்து கவனிக்கும் போது பூமி வளைவு காரணமாக குறிப்பிட்ட தூரம் சென்ற பின் வளைந்து மறைவதை போல)... அடடா இவ்ளோ நாளா நாம நம்பி வந்தது மாதிரி ஆப்பிள் ஒரு 2d அமைப்பு அல்ல அது வளைந்து உருண்டையாக 3d வடிவத்தில் உள்ளது என்பதை அது கண்டு கொண்டது ...எனவே அந்த ஆப்பிளை அப்படியே துளையிட்டு அடுத்த முனைக்கு தனது நண்பணை விட வேகமாக சென்றடைந்து லேட்டா வந்த நண்ப புழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது...

Worm hole கு என்னடா பேர் வைக்கலாம் என்று விண்ஞாணிகள் குழம்பி கொண்டிருந்த போது இந்த எடுத்து காட்டை சொல்லி விட்டு ஜான் அர்ச்சிபால்ட் வீலர் என்பவர் அந்த துளைக்கு புழு துளை( worm hole) என பெயரிட்டார்.

வாரம் ஹோல் எங்கே இருக்கு அதை கண்டு பிடித்து விட்டார்களா என்றால் அது இருக்கு ஆனா இன்னும் பயன்படுத்தும் விதமா இல்ல மற்றும் கண்ணுக்கே தெரியாத மிக சின்ன வடிவில் இருக்கு .... அது கணிக்கவே முடியாத மிக குறுகிய காலத்தில் உண்டாகி மறைகிறது ...இப்படி பல கதைகளை சொல்கிறார்கள்...
எது எப்படியோ எதிர்காலத்தில் நாம் ஸ்பேஸ் டிராவல் பண்ண வேண்டும் என்றால் இந்த நேஷனல் ஹைவேசை பயன்படுத்தினால் தான் முடியும்..

உங்கள் அன்பு நண்பன் அறிவியல் காதலன் ரா.பிரபு


Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நீங்கள் சொன்ன பிறகுதான் வார்ம்ஹோல் - புழுதுளை புரியுது. நன்றி. தொடரட்டும் தங்கள் தமிழ் பணி.

    ReplyDelete
  3. அருமை நட்பே 👏👏👌👌👍👍

    ReplyDelete
  4. THE DISTANCE TO ANDREOMEDA IS NOT 25 LIGHT YEARS
    THE MILKYWAY TOTAL DISTANCE WAS 1 LAKH LIGHT YEARS
    THE DISTANCE TO ANDROMEDA GALAXY FROM EARTH IS :2.537 MILLION LIGHT YEARS

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"