"ஆர்வத்தின் பிள்ளை"

           

           "ஆர்வத்தின் பிள்ளை"

(கருத்தும் எழுத்தும் :ரா.பிரபு)



ஒரு சின்ன செயல்..ஒரு நடத்தை..ஒருவரை இன்னார் என அடையாள படுத்தி விடும்...அவனுக்குள் இருப்பது என்ன என்பதை காட்டி விடும்...
கட கட ஓசை உடன் அந்த பைக் வண்டி அந்த ஊருக்கு வந்தது....                                             இது கிட்ட தட்ட ஒரு நூற்றாண்டுக்கும் முன் நடந்த ஒரு சம்பவம்.அந்த ஊருக்கு வந்த முதல் பைக் என்பதால் ஊர் மக்கள் அதை ஆச்சர்யமாக பார்த்தது ஆச்சர்யமான விஷயம் இல்லை தான்...
ஆனால் அந்த சிறுவனிடம் இருந்தது வெறும் ஆச்சர்யம் இல்லை..இந்த பொருள் எப்படி ஓடுகிறது ..என்று மலைத்த அவனிடம் இருந்தது நம் page இன் tittle ஆகிய curiosity அதாவது எதையும்அறிந்து கொள்ள துடிக்கும் ஆர்வம்....
அந்த வெள்ளைக்கார துரை யிடம் போய் கேட்டான் "ஐயா இந்த பொருள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இது என்ன விலை ஆகும் ஐய்யா ..இதை எனக்கு தர முடியுமா"(பாவம் அவனுக்கு விலை தெரிந்திருக்க நியாயம் இல்லை..உண்டியல் காசை வைத்து வாங்கி விடலாம் என்று நினைத்திருப்பான்)
துரை சிரித்து விட்டு சொன்னார் "தம்பி இத நான் விக்கறாப்ல இல்ல தந்தாலும் உன்னால வாங்க முடியாது இதன் விலை 400 ருபாய்"
பாவம் நம்ம தம்பிக்கு வண்டியை மேல விட்டு ஏத்தின மாதிரி ஆகிவிட்டது...
கொஞ்ச நாள் அதற்கு வருத்த பட்டுவி்ட்டு ..அவன் அதை மறந்து போக வில்லை அவன் கொண்ட தேடல் அவனை தூங்க விடவில்லை எப்படி ...?எப்படியா..அந்த வண்டி  வேலை செய்கிறது...?

ஆர்வத்தின் குழந்தையாக பிறந்து விட்ட அவன் கோயமுத்தூர் சென்றான்..அங்கு சர்வர் வேலை செய்தான் மாதம் 3 ருபாய் சம்பளம்...கர்ப்பம் காக்கும் பெண்ணை போல ஆர்வத்தை மனதில் தரித்து கருவாக வளர்த்து கொண்டு அந்த 3 ரூபாயை குருவி போல சேர்த்து சேர்த்து வைத்தான் ....அது 400 ரூபாயை எட்டும் வரை...அதற்குள் 3 ஆண்டுகள் கழிந்திருந்தது...கால ஓட்டதால் அவன் ஆர்வத்தை அவனிடமிருந்து பிரித்துவிட முடியவில்லை..3 ஆண்டுகள் கழித்து அந்த வெள்ளைக்கார துறையை தேடி சென்று 400 ரூபாயை நீட்டினான" ஐய்யா என்ன நினைவிருக்கா"
அவனை ஆச்சரியத்தோடு நோக்கிய துரை "தம்பி நான் விக்கற ஐடியால இல்லைனு சொன்னேனே பா "
என்றார் ..சற்றும் மனம் தளராத அந்த சிறுவன் உடனே சொன்னான் பரவாயில்லையா எப்ப விற்பீங்கன்னு சொல்லுங்க.  எத்தனை வருடமானாலும் காத்திருக்கேன்..."அவன் curiocity இல் கவர பட்ட துரை அதே நொடி அந்த வண்டியை அவனுக்கு விற்றார்

மிக உற்சாகமாய் அதை வீட்டுக்கு கொண்டு போன அவன் செய்த முதல் காரியம் அதை அக்கு வேர் ஆணி வேராகியது தான்..."ஏன்டா இதுக்காடா இவ்ளோ கஷ்ட பட்ட என கேட்டவர்களை பார்த்து சிரித்து விட்டு சொன்னான் இப்போ இத நான் முழுசா புரிஞ்சிகிட்டேன் இது எப்படி வேலை செய்துன்னு இப்ப எனக்கு தெரியும்...ரொம்ப திருப்தியா இருக்கு இது போதும்"அவன் ஆசை பட்டு பைக் வாங்கியது சொகுசாய் ஓட்டி சீன் காட்ட அல்ல அதை பற்றி அறிந்து கொள்ள ..அது வேலை செய்யும் விதத்தை புரிந்து கொள்ள ..

அந்த அக்குவேர்களை மீண்டும் முன் போல் இணைத்து அதை ஓடவைத்து காட்டியதும் இல்லாமல் சைடில் ஒருவர் அமரும் வண்ணம் ஒரு பொட்டிய அட்டாச் பண்ணிட்டா இன்னோருதரும் ஓக்காரலாம் (நாம் சில படத்தில் பார்த்திருப்போம்) என முதல் முதலில் ஐடியாவும் சொன்னான்...
அந்த ஆர்வத்தின் குழந்தை...
அவர் வேறு யாரும் இல்லை தமிழ் நாட்டின் தலை சிறந்த விஞானிகளில் ஒருவரான ஜி.டி நாயுடு. .
இது போன்ற ஆர்வம் தீயாய் எரியும் மனிதர்களால் தான் உலகமே மாறி இருக்கிறது...
தேடலும் அறிந்து கொள்ளும் ஆர்வமும் மனிதனுக்கு மூச்சு போல விடாது மரணம் வரை இயங்க வேண்டியவை  அல்லவா...


அறிவியல் காதலன் ரா.பிரபு



Comments

  1. உத்வேகம் அளிக்கும் உண்மை கதை.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"