"சார்பியல் எனும் சமுத்திரம்( பாகம் 2")




"சார்பியல் எனும் சமுத்திரம்":(பாகம் 2)


உலக வரலாற்றின் மிக பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவமும் (theory of relativity) ..
மேலும் அவர் கண்டு பிடித்த சில கோட்பாடுகளும் ..மற்றும் அவரது trade மார்க் formula  E=MC2 உம் அறிவியல் உலகின் அஸ்திவாரத்தை ஆட்டி பார்த்த சங்கதிகள்.
நம் புருவத்தை உயர்த்த செய்து ..நம்மை அச்சயர்யத்தில் ஆழ்த்தி பிறகு பிரமிப்பை கொடுக்க கூடியவைகள்...அவரது சில கண்டுபிடிப்புகளை கோட்பாடுகளை அவர் கண்டறிந்த உண்மைகளை ..எளிமையாக ஆனைவருக்கும் புரியும் படி விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம்..

சமுத்திரதுக்குள் மூழ்கும் முன்:

நான் அழைத்து செல்ல இருக்கும் சார்பியல் எனும் சமுத்திரத்தை அணுகும் முன் சில முன்னெச்சரிக்கைகளை முன்னேற்பாடுகளை நான் செய்தாக வேண்டும்...

1) இக்கட்டுரையின் நோக்கம் அறிவியலை மிக எளிமையாக விளக்க வேண்டும் என்பது.. எனவே சில இடங்களில் குழந்தை தனமான எடுத்துகாட்டுங்கள்....விளையாட்டு தனமான விளக்கங்கள் இருக்கலாம் ..இந்த subject பற்றி நன்கு தெரிந்தவர்கள்..கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள்..(.சுத்தமாக ஒன்னும் தெரியாதவனை மனதில் கொண்டே நான் அறிவியல் எழுதுகிறேன்)

2) இந்த தலைப்பு உண்மையிலேயே பல பேர் ஆராய்ந்து கொண்டிருக்கும் ஒரு சமுத்திரம்...நான் அறிமுகம் செய்ய போவது சில துளிகளை தான்...விரிவாக கடலை ஆராய விருப்பம் உள்ளவர்கள் அறிவியல் அறிஞர்களின் கட்டுரையை தேடி படியுங்கள்...நான் வெறும் ஆச்சர்யத்தை பகிர்ந்து கொள்ளும் சக பயணி....
உலகை வியந்து நோக்கும் குழந்தை....
சரி தயாரா இனி சார்பியல் கோட்பாடு என்னும் சமுத்திரத்தில் இறங்குவோமா....

சார்பியல் எனும் சமுத்திரம்:

முதலில் ஒரு சாதா உண்மைக்கும் சார்பியல் உண்மைக்கும் உள்ள வேறுபாடு என்ன வென்பதை தெரிந்து கொள்வோம்...
மற்ற அறிவியலாளர்கள் சாதா உண்மையை விளக்கும் போது ஐன்ஸடீன் சார்பியல் உண்மையை பேசுவதுதான் அவரை மற்றவர்களிடமிருந்து வேறு படுத்துகிறது...

உதாரணமாக உங்கள் கைகளில் நான் ஒரு பணிகட்டியை வைத்துவிட்டு இது குளிரான பொருளா இல்லை சூடான பொருளா என கேட்டால் என்ன சொல்லுவீர்கள்...??
இதற்க்கு என்ன ஆராய்ச்சி வேண்டி கிடக்கு..இது குளிர்ச்சியான பொருள் தானே..என்பீர்கள்...உங்களுக்கு இந்த கேள்வி கொஞ்சம் முட்டாள் தனமாக கூட தெரிந்திருக்கும்.
ஆனால் உஷார்...ஐன்ஸ்டைன் போன்ற மாமேதைகளுடன் பழகும் போது முதலில் முட்டாள் தனமாக தெரிவது எல்லாம் பிறகு அதிமேதவி தனமாக தெரியும் ..

காரணம் இந்த கேள்வியை ஐன்ஸ்டைனிடம் கேட்டால் அவர் அது குளுர்ச்சியா இல்லை சூடா என்பது சார்புடையது என்பார்...
அதாவது பணிகட்டியை நீங்கள் குளுமையாக உணர்வதற்கு காரணம்...நீங்கள் சூடாக இருப்பது ....உங்கள் கை கிட்டத்தட்ட 30 டிகிரி இருப்பது தான்..
ஒரு பேச்சிற்கு இப்படி வைத்து கொள்ளுங்கள் நீங்கள் இயற்கையில் சூடானவர் இல்லை...குளிர்ச்சியான.. மிக மிக குளிர்ச்சியானவர் ..உங்கள் கைகளில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரி...இப்போ உங்கல் கைகளில் 0 டிகிரி வெப்பத்தில் இருக்கும் பனிகட்டி வைக்கப்பட்டு அதே கேள்வியை கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள் ?

கண்டிப்பாக சூடா இருக்கு என்று தான் சொல்வீர்கள்..இதாங்க...சார்பியல் தத்துவத்தின் எளிய எடுத்துக்காட்டு..

ஒரு உண்மையை நீங்கள் அவ்ளோ சீக்கிரம் உண்மை என்று சொல்லிவிட முடியாது...காரணம் அந்த உண்மை பார்க்க படுவர் மற்றும் பார்க்க  படும் பொருளின் பல்வேறு நிலைகலை பொறுத்து சார்ந்து உள்ளது...(நம்ம வீட்டுப் பெண் நெறய பேசினா சுட்டி...பக்கத்து வீட்டுப் பெண் அதிகம் பேசினால் வாயாடி ...அப்படிதான்)

 சரி இப்போ நான் சொல்வதை கொஞ்சம் யோசித்து பாருங்கள்... ஒரு இருட்டில் அழைத்து போய் இது இருட்டா என கேட்டால் நமக்கு இருட்டுதான் ஆனால் நாமே ஒரு பாம்பாக பிறந்திருந்தால் அங்கே அகசிவப்பு ஒளி யில் எல்லா உயிரையும் பார்க்கலாம் அப்போ அங்கே இருப்பது இருட்டு என அறுதி இட்டு சொல்வது தவறு அல்லவா...?

ஒரு அமைதியான நிசப்தமான இடம் உண்மையிலேயே நிசப்தமா? ..
அங்கே பரவி இருக்கும் மீயோலியை நாய் டால்பின் வௌவால் கேட்டக முடியும் நம்மால் முடியாது...
இப்படியே யோசித்து பார்த்தால் இந்த பிரபஞ்சத்தை நாம் புரிந்து கொண்டுள்ள படி நாம் உண்மைகள் என சொல்லி கொண்டிருக்கும் படி தான் இந்த பிரபஞ்சம் இருக்கிறதா...இல்லை இல்லவே இல்லை ..
பிரபஞ்சம் இப்படியானது என்ற உண்மையை நம்மால் சொல்லவே முடியாது...காரணம் அது நம்மை சார்ந்து மாறுபடும்...

நாம் உணர்வதை நமக்கு தெரிந்ததை தான் நாம் சொல்லுகிறோம்..
ஒரு மைக்ரோ செகண்ட் நமக்கு மிக குறைவு ஆனால் ஒரு மைக்ரோ சேகண்டுக்கு மட்டும் தோன்றி அழியும் நுண்ணுயிரியை என்ன சொல்ல.. அதன் வாழ்நாள் அதை பொறுத்தவரை நாம் 100 ஆண்டு வாழ்நததை போல.... 500 கோடி ஆண்டு என்று சொன்னால் நமக்கு மிக மிக மிக பெரிய காலம்...
ஆனால் ஒரு விண்மீனுக்கு அது மனிதனின் 40 வயதை கடந்தது போல...(நமது சூரியன் ஆயுட் காலம் மொத்தம்1000 கோடி ஆண்டுகள் அதில் 500 கோடியை அது கடந்து விட்டது)..

ஐன்ஸ்டைனுக்கு முன் நாம் சில விஷயங்களை மாறாத ஒன்றாக கருதினோம்..
உதாரணமாக நியூட்டன் போட்ட சமண்பாடுகளில் நிறை மாற கூடியது... தூரம் மாற கூடியது... ஏன் ஈர்ப்பு விசைகூட மாற கூடியது தான் (ESCAP velacity ஒவ்வொரு கிரகத்துக்கு அளக்கும் போது ஈர்ப்பு விசை பூமியில் செய்ததை போல 9.8 per செகண்ட் ஐ பயன் படுத்த முடியாது) ஆனால் அவருடைய சமன் பாடுகளில் ஒன்றே ஒன்று மட்டும் மாறாமல் இருந்தது...அது தான் காலம்..ஆமாம் அது என்ன செய்தாலும் மாற போவது இல்லை தானே...நாம் முந்தை எடுத்து காடுகளில் பார்த்ததை போல ஒருவன் மைனஸ் 20 டிகிரி காரனாக இருந்தாலும்...அல்லது பாம்பு போல அக சிவப்பு பார்வை கொன்டிருந்த்தாலும் ..நாயாக இருந்தாலும் நரியாக இருந்தாலும் நெட்டையாக இருந்தாலும் குட்டையாக இருந்தாலும் ஒருவனுக்கு அரைமணி நேரம் என்பது எல்லாருக்கும் அரை மணி நேரம் தானே...காலம் மட்டும் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் ஒன்று தானே...
அதான் இல்லை என்கிறார் ஐன்ஸ்டைன்..

உங்களுக்கு ஒரு மணி நேரம் ஓடிய காலம் உங்கள் நண்பருக்கு மட்டும் 15 நிமிடம் ஓட முடியும்...5 வருடம் கழித்து அவரை நீங்கள் சந்திக்கும் போது நீங்கள் 5 வருடம் கழிந்தவராகவும் அவர் மட்டும் 2 வருடம் கழிந்தவராகவும் இருக்க முடியும்...
அனால்  என்ன ...அதற்கு அவர் ஒளி வேகத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்க வேண்டும்...ஒளி வேகத்தில் பயணம் செய்யமுடியும் போது என்ன நடக்கும் ..?

ஒரு ட்ரெயின் வேகமாக ஓடுவதை நீங்கள் நின்ற இடத்தில இருந்து பார்க்கும் போது ஒரே கோடு போல பூசி மெழுகினாற்போல தெரியும் ஆனால் அந்த ட்ரெயின் வேகத்தில் நீங்களும் பக்கத்தில் பயணம் செய்து கொண்டு அந்த ட்ரைனை பார்த்தால் அதில் எந்த மாறுதலும் தெரியாது அல்லவா...
அதே போல ஒளி பரவும் போது நாமும் ஓளி யுடன் சேர்ந்து ஒளி வேகத்துலயே..பயணித்து கொண்டு அந்த ஒளி யை பார்த்தல் அது எப்படி தெரியும்....இவ்ளோ வேகத்தில் (வினாடிக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் கிலோமீட்டர்) ஒளியாக தெரியும் அது அப்போது எப்படி தெரியும்...இந்த சிந்தனை வரும் போது அவருக்கு வயது 16...
ஐன்ஸ்டைனுக்கே சந்தேகம்னா அவர் யாரை போய் கேட்பது...நிலமை கொஞ்சம் கஷ்டம் தான்...அதனால் பின்னாளில் விடையை அவரே கண்டுகொண்டார்..

ஜேர்மன் ஆராய்ச்சி மாத இதழில் அவர் மொத்தம் 4 கட்டுரை களை எழுதினார் அந்த தம்மாம்துண்டு கட்டுரைகள்..உலகை புரட்டி போட்டன...பின்நாளில் குவாண்டம் கொள்கை உருவாக விண்வெளியை ஆராய நட்சத்திரத்தை புரிந்து கொள்ள காலம் மற்றும் வெளியை உணர்ந்து கொள்ள அந்த கட்டுரைகள் தான் அடிகோலிட்டன.
உங்களை சமுத்திரம் காட்டுவதாக அழைத்து வந்த நான் மன்னிக்கவும் இப்போ தான் கடற்கரைகே அழைத்து வந்திருக்கிறேன்

 உண்மையான கடல் ஆரம்பிப்பது ...அந்த கட்டுரைகளில் இருந்து தான் ...நான் உங்களிடம் இவ்ளோ நேரம் காட்டியது..வெறும் கடற்கரை மணல் தான்
அந்த கட்டுரைகள்...

1)முதல் கட்டுரை :ப்ரவுனியின் மோக்ஷன் சார்ந்தது..

2) ரெண்டாவது கட்டுரை :போட்டோ எலக்ட்ரிசிட்டி பற்றியது

3) மூன்றாவது கட்டுரை :   ஸ்பெஷல் தியரி ஆப் ரிலேடிவிட்டி..

4)நான்காவது :         ஜென்ரல் தியரி ஆப் ரிலேடிவிட்டி..

கடைசியாக அவரது trade mark equation...
E=MC2

கட்டுரையின் இரண்டாவது அத்தியாயத்தை இங்கே நிறைவு செய்கிறேன் ...இனி வரும் கட்டுரைகளில்..மேலே சொன்ன நாலு பாய்ண்டை கொண்டு அறிவியலை கொஞ்சம் ஆழமாக அலசுவோம்..



தொடரும்...........

Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"