" மாய வண்ணங்கள்"







"மாய வண்ணங்கள்"

(கருத்தும் எழுதும் ரா.பிரபு)


இது ஒரு மாய உலகம்...
இருங்க இது ஒன்னும் ஆன்மீக கட்டுரை அல்ல வழக்கம் போல அறிவியல் கட்டுரை தான்..

நீங்கள் பார்க்கும் பல விஷயங்கள் உண்மையில் நீங்கள் பார்ப்பதை போல அல்லாதவை ..

இன்றைக்கு உதாரணத்திற்கு ஒன்று...
நிறங்கள்...

ஒரு குறிப்பிட்ட நிறம் எனபது நீங்கள் எந்த நிறத்தை பார்கிறீரோ அந்த நிறம் தவிர உண்மையில் மற்ற எல்லாம் நிறமும் கொண்டது அது.

கொஞ்சம் குழப்புகிறதா?..
அதை விளக்கும் முன் வாங்க வானத்திற்கு சென்று வருவோம்.

வானத்தின் நிறம் என்ன என்றால் நீலம் என்போம்.உண்மையில் வானத்திற்கு நிறம் கிடையாது...அல்லது கருப்பு நிறம் ..
நமது வலிமண்டலதில் ஏற்படும் ஒளி சிதறல் காரணமாக  உண்டாகும் ஒரு மாயை.
நமது வலிமண்டலத்தை தாண்டி சென்று விட்டால் பட்ட பகலில் (அங்கே ஏது பகலும் இரவும்) வானம் வெளிச்சமாக இருக்கும் ஆனால் அண்ணாந்து பார்த்தால் அட்டை கருப்பு.
ஏதாவது ஹாலிவுட் படத்தில் நீல கலர் காட்டி இருந்தால் அது மொக்க மூவி என்று நினைத்து கொள்ளுங்கள்...
ஹாலிவுட் காரனுக்கு அது கூடவா தெரியாது என்று நீங்கள் கேட்டால் ....உங்களுக்கு ஒரு கேள்வி...
Alian... riddik போன்ற படத்தில் விண்வெளியில் வின் ஓடங்கள் பெரும் சத்தத்துடன்  வெடித்து சிதருவதை பார்த்திருப்பீர்கள்...
அனால் வான்வெளியில் எவ்வளவு பெரிய வெடிப்பு ஏற்பட்டாலும் துளி சத்தம் கெட்காது காரணம் ஒலி பரவ ஊடகம் தேவை.என்பதை எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?

க்ராவிடி மற்றும் இன்டெர்ஸ்டெலர் போன்ற சில படங்களில் சத்தம் இல்லாமல் வெடிப்தை சரியாக காட்டி இருப்பார்கள்...இவைகள் அவார்ட் வின்னிங் படங்கள்..

சரி வானம் தான் இப்படி மாயா என்றால் இந்த பூமியில் நீங்கள் காணும் நிறங்கள் என்ன தெரியுமா.?
உண்மையில் நீல கலர் பொருள் என்றால் நீல கலரை தவிர மற்ற அணைத்து கலரையும் உள்வாங்கி கொண்டு நீலத்தை மட்டும் பிரதி பலிக்கிறது அதை தான் நாம் பார்க்கிறோம்.

ஒரு பொருள் அணைத்து நிறங்களையும் உள்வாங்கி கொண்டால் அது கருப்பு...
எதையும் உள்வாங்காமல் எல்லாவற்றையும் பிரதிபலிதால் அது வெள்ளை நிறம்.(அணைத்து வண்ணங்களும் வரிசையாக அடிக்க பட்ட  சக்கரத்தை வேகமாக சுற்றினால் தெரிவது வெள்ளை நிறம் என்ற பள்ளி பரிசோதனை நினைவு வருகிறதா?)

எனவே.
ஒரு குறிப்பிட்ட நிறம் எனபது நீங்கள் எந்த நிறத்தை பார்கிறீரோ அந்த நிறம் தவிர உண்மையில் மற்ற எல்லாம் நிறமும் கொண்டது அது.

Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"