''வாய்ப்பு எனும் எரிக்கல்..''



         'வாய்ப்பு எனும் எரிக்கல்..''

(கருத்தும் எழுத்தும்:ரா.பிரபு)

வானிலிருந்து விழும் "எரிக்கல்" பார்த்து இருக்கிறீர்களா..
ஒருவேளை இன்று நான் எரிக்கல் எப்படி உண்டாகிறது என்ன ஏது என்று விளக்க போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு...
ஏனென்றால் வானில் நாடோடி போல சுற்றி திரியும் அஸ்டராய்டு என்னும் வின் கற்கள் பூமியின் வளி மண்டலத்திற்குள் வந்தால் ஈர்ப்பு விசையால் மிக வேகமாக அதே சமயம் காற்றுடன் கொண்ட உராய்வால் மிகுந்த வெப்பட்டதுடன் எரிந்து கொண்டு பூமியில் விழும் கல் என்பது ....சிறு குழந்தைக்கு கூட தெரியும்...சரி இப்போது இரண்டு குட்டிக்கதைகளை சொல்ல போகிறேன்...
ஒன்று:   ) =
  அது ஒரு shoue தயாரிக்கும் கம்பெனி ..அவர்களுடைய ஷு கம்பனிக்கு ஆப்ரிக்காவில் ஒரு தீவில் குட்டி ஊரு ஒன்றை தேர்வு செய்து அங்கு இவர்களுடைய தலைமை மார்க்கெட்டிங் மேனேஜர் ஐ அனுப்பி அங்க நிலவரம் எப்படி நம்ம ஷு அங்க விற்குமா விற்காதா என பார்த்து வர சொன்னார்....அங்கு சென்ற மேனேஜர் கொஞ்ச நாள் கழித்து தலை தொங்க போட்டு கொண்டு வந்தார்..வந்து சொன்னார் "அங்க ஒரு ஷு கூட விற்க முடியாது...ஏன்னா அங்க எவனுமே ஷு வே போடறது இல்ல...

இரண்டு )=

முதல் நாள் வேலைக்கு சென்ற பத்திரிக்கை நிருபர் அவன்....ஒரு கப்பலில் நடக்கும் அரசாங்க விழாவை புகை படம் எடுக்க அனுப்ப பட்டிருந்தான் ஆனால் இவன் நேரமோ எவன் நேரமோ தெரியவில்லை கப்பலே விபத்துக்குள்ளாகி எரிந்து கொண்டு இருந்தது....
மனம் நொந்து போனவணாய்..உட்கார்ந்து அழ தொடங்கினான்....

இப்போது இந்த கதை களின் இரண்டாம் பாகத்தை சொல்கிறேன்...
1) ஷு கம்பெனி முதலாளி இன்னொரு புது மேனேஜரை அனுப்பினார்...
அவன் போய் பார்த்து விட்டு வெகு உற்சாகமாய் வந்தான்...கேட்டதற்கு சொன்னான்...."நம்ம ஷு அங்க 100 சதம் விற்க வாய்ப்பு உள்ளது ஏனென்றால் அங்கு இன்னும் ஒருத்தனும்  ஷு போடவே அரம்பிக்கல.."

2)அழுது கொண்டிருந்த அந்த பத்திரிக்கை காரனை அவன் நண்பன் ஒருவன் சந்தித்தான் "நண்பா நான் ஒரு துரதிர்ஷ்ட காரன் டா நான் படம் எடுக்கணும்னு வந்தன் அட்லீஸ்ட் 3 வது பக்கத்துலயாவது வந்திருக்கும் ஆனா என் நேரம்........
நிமிர்ந்து பார்த்த போது நண்பனை காண வில்லை....."போடா முட்டாள் முதல் பக்கத்துக்கு செய்தியே இதான் டா..." அவன் நண்பன் கேமராவை தூக்கி கொண்டு ஓடி கொண்டிருந்ததான்....

இரண்டு சம்பவங்களிலும் நிகழ்ச்சி ஒன்று தான் அனால் அதை ஒருவர் வாய்ப்பாக பார்த்தார் இன்னொருவர் பிரச்சனையாக....
ஒரு நிகழ்வு பிரச்சனையா அல்லது வாய்ப்பா எனபது நிகழ்வில் உள்ளதா அல்லது நாம் எடுத்து கொள்ளுவதிலா...

மேலே சொன்ன இரண்டும் கற்பனை கதைகள் ....அனால் இப்போது சொல்ல போவது நிஜத்தில் நடந்தது....

1980 ஆம் ஆண்டு 18 வயது மிகளே நாப்
எனும் சிறுவனது வீட்டில் மேலே ஒரு எரிக்கல் மோதியது...அதன் திசைவேகம் மற்றும் வெப்பம் மிக அதிகமாக இருந்தாதால் கட்டிட கான்க்ரீடை துளைத்து உள்ளே கராஜ் இல் நிறுத்த பட்டிருந்த கார் பானெட்டை துளைத்து தரை டைல்ஸ் ஐ பேர்த்த பின் நின்றது.....கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் 300 $கு அந்த காரை வாங்கி இருந்தான் நாப்....அவனிடத்தில் யார் இருந்தாலும் அழுது அங்களாத்திருப்பார்கள்....அவன் அந்த புத்திசாலி சிறுவன் என்ன செய்தான் தெரியுமா வான் வெளி நிகழ்வுகளை விரும்பும் வானத்திலிருந்து விழும் பொருளை சேர்த்து வைக்கும் ஒரு ஐரிஸ் காரனை தேடி பிடித்தான் வெறும் 300$கு வாங்கிய காரை 10000 $ க்கு எரிகல்லோடு சேர்த்து விற்றான்...
வண்டி வீனா யிடிச்சே என வேதனை படாமல்
அதை வானத்தில் இருந்த்து வந்த வாய்ப்பாக மாற்றினான்  வாழ்க்கை இப்படி தான் பல வாய்ப்புகளை எரிகற்களாக வீசி கொண்டே இருக்கிறது....அதை வெறும் கல்லாக பார்ப்பதும் அதிர்ஷ்டம் தரும் அதிர்ஷ்ட கல்லாக பார்ப்பதும் அவர் அவர் பார்வையில் உள்ள விஷயம் தான்..



Comments

  1. சார் எரி கற்கள் காற்றோடு உராய்ந்து எரிந்து பூமிக்கு வருகிறதென்றால் எரி கற்களின் திசை வேகம் என்னவாக இருக்கும்...?

    ReplyDelete
  2. அருமையான, தேவையான கருத்து நண்பரே........

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"