( "9.8" m/s )



           

                       ( "9.8" m/s )

(கருத்தும் எழுத்தும் :ரா.பிரபு)

இன்றைய தலைப்பு என்ன வித்தியாசமா 9.8 னு வச்சிருக்காங்க என ஆச்சர்ய படாமல்....
அங்கே கொஞ்சம் வேடிக்கை பாப்போம் வாங்க..
அந்த பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தில் மேலே ஏறி ஒரு உருவம் கல்லை கீழே நழுவ விட்டு விளையாடி கொண்டிருந்தது முதலில் சின்ன கல் அப்புறம் பெரிய கல் அப்புறம் ரெண்டு கல்லையும் ஒன்றாக என என்ன விளையாட்டோ புரியவில்லை ...

அவர் விளையாட்டை புரிந்து கொள்ளும் முன் உங்களுக்கு ஒரு கேள்வி..
100 கிலோ எடை உள்ள ஒரு இரும்பு குண்டு...  வெறும் 50 கிராம் எடை உள்ள ஒரு பஞ்சு துண்டு...
இது இரண்டையும் ஒரே நேரத்தில் ஒரு கட்டிட உச்சியில் இருந்து விட்டால் எதை பூமி வேகமாக தன்னை நோக்கி இழுக்கும் ..எது பூமியை முதலில் வந்து அடையும்...?

விடையை கட்டுரை கடைசியில் சொல்கிறேன் என்றெல்லாம் சொல்லாமல் இப்போதே சொல்லிவிடுகிறேன் விடை இரும்பு என்றாலும் தவறு பஞ்சு என்றாலும் தவறு ..பூமி எல்லா பொருளையும் ..அது ..சின்னதோ பெரிசோ ஒரே வேகத்தில் தான் இழுக்கிறது. அந்த வேகம் தான் 9.8 மீட்டர் /வினாடி .

அதை தான் அந்த உருவம் ஆராய்ந்து கொண்டிருந்தது அந்த உருவத்தின் பெயர் கலிலியோ .

இல்லயே.. இரும்பு குண்டு தான முதலில் வரும் என தோன்றலாம் ஆனால் அதற்கு காரணம் எடை குறைவான பொருளில் காற்று தடையினால் உண்டாகும் தடுப்பு விசை தான் .
எந்த தடையும் இல்லாமல் இரண்டையும் பரிசோதனை செய்தால் இரண்டும் ஒன்றாக விழுவதை பார்க்கலாம்.

வெறும் புவி ஈர்ப்பு வேகத்தை வைத்தே இயங்கும் ஒரு கற்பனை வண்டி பற்றி ஒரு கோட்பாடு உள்ளது அதாவது அது எங்கே உள்ளது என்றால் இந்த பூமியை கீழே கீழே தோண்டி கொண்டே போயி அடுத்த முனை வரை சுரங்கம் செய்யவேண்டியது (அதாவது 23000 கிலோமீட்டருக்கு ) அப்புறம் இந்த முனையிலிருந்து ஒரு லிப்ட் போன்ற வண்டியை ஓட்டையில் நழுவ விட்டால் அது ஈர்ப்புமையம் அமைந்த நடு பகுதியெல்லாம் தாண்டி அடுத்த முனையை அடைய 42 ...சரியாக 42 நிமிடம் எடுத்து கொள்ளும் ..(total recall என்ற படம் ரெண்டு version இல் உள்ளது அதில் லேட்டஸ்ட் version இல் இப்படி ஒரு வண்டியை காட்டி இருப்பார்கள்) சரி ஓட்டையை கொஞ்சம் கிராஸா போட்டு நேருக்கு நேரு இல்லாமல் பூமி இந்த பக்கம் நுழைந்து அப்படியே ஒரு ஓரமா ஒரு 15000 கிமி ல வெளியேறுகிரோம் என வைத்து கொள்ளுங்கள்.... இந்த ஈர்ப்பு விசையில் ஓடும் வண்டியானது கோட்பாட்டின் படி அப்போதும் மிக சரியாக 42 நிமிடம் தான் எடுத்து கொள்ளும் ..காரணம் வழியை வளைத்து விட்டதால் ஏற்பட்ட ஈர்ப்புவேக குறைபாடு..

பூமியில் எங்கே நுழைந்து எங்கே வந்தாலும் சரி .. ஈர்ப்பு விசையை பயன்படுத்தி வண்டியை ஓட்டினால் உங்களுக்கு அதே 42 நிமிடம் தான்.

இந்த...எல்லா பொருளையும் ஒரே வேகத்தில் இழுப்பதை கோட்பாடு ரீதியில் தெரிந்து கொண்ட பின் எந்த தங்கு தடையும் இல்லாம இருக்கிற இடத்துல ஆதார பூர்வமா ஒரு வாட்டி செக் பண்ணிடனும் மச்சான் என விஞானிகள் பேசி கொண்டு கால போக்கில் நிலாவுக்கு சென்ற பொது அப்போலோ 15 இல் சென்ற davit scatt என்பவர் மறக்காமல் ஒரு சுத்தியையும் ஒரு மெல்லிய இறக்கையையும் கொண்டு சென்று கையிலிருந்து நழுவ விட்டு பரிசோதனை செய்ததில் இரண்டும் ஒரே வேகத்தில் பூமியை சாரி நிலாவை தொட்டது (ஈர்ப்பு விசையின் இந்த ஒரே வேகத்தில் இழுக்கும் இந்த விதி நிலவுக்கும் பொருந்தும்)

அவர் கஷ்ட பட்டு நிலவுக்கு போய் பண்ணத நாம இங்கயே பண்ணி பார்க்கலாமா?

ஒரு கையில் புத்தகத்தை எடுத்துக்கொள்ளுங்கள் (கையில் புத்தகம் எடுப்பது கொஞ்சம் கஷ்டமான வேலைதான் சோதனைகாக எடுத்து கொள்ளுங்கள்)
இரண்டாவது கையில் ஒரு மெல்லிய இறகு.. இரண்டையும் ஒன்றாக ஒரே நேரத்தில் நழுவ விடுங்கள் .. சந்தேகம் இல்லாமல் புத்தகம் முதலிலும் காற்று தடையால் இறகு சுற்றி சுற்றி பொறுமையாகவும் தான் வரும்..
சரி இப்போ அந்த சிறகை புத்தகத்தின் மேலே வையுங்கள் இப்போ தூக்கி பிடித்து நழுவ விடுங்கள் புத்தகம்  இறகு இரண்டும் ஒட்டி கொண்டார் போல ஒன்றாக பயணம் செய்து தரையை அடைவதை பார்க்கலாம் ..இந்த முறை நீங்கள் இறகின் காற்று தடையை நீக்கி விட்டது தான் காரணம்..



Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"