" ஒரு தொட முடியாத ரகசியம்"






   "  ஒரு தொட முடியாத ரகசியம்"

(கருத்தும்_எழுத்தும்: ரா.பிரபு

உங்களால் தொட முடியாத விஷயங்கள் என்று ஒரு நான்கு சொல்லுங்கள் என்றால் மின்காந்த அலைகள்... புவிஈர்ப்பு,  ...இப்படி எதையாவது சொல்லுவீர்கள் .

ஆனால் உங்களால் எந்த பொருளையும் தொட முடியாது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா..

உங்கள் கையில் ஒரு பேனாவை பிடித்திருந்தால் பிடிக்க பட்டதாக உணர்வது ஒரு மாயை என்று சொன்னால் எப்படி இருக்கும்?.

நீங்கள் பொருளை பிடித்திருக்கும் இடத்தில உற்று பார்க்க வேண்டும்... ஆனால் சாதாரணமாக அல்ல அனு லெவலுக்கு இறங்கி பெரிது பண்ணி...

ஒரு அணுவை நீங்கள் பார்த்தால் அதில் மைய்ய பகுதியில் உள்ள உட்கரு வை எலெக்ட்ரான்ஸ் கள் பல அடுக்குகளில் சுற்றி வருவது தெரியும்..

நீங்கள் ஒரு பொருளை தொட நெருங்கும் போது முதலில் தொடர்புக்கு வருவது அந்த வெளிப்புற எலக்ட்ரான் தான்
 .ஆனால் நெருங்கும் பொருளில் உள்ள அதே போன்ற எலக்ட்ரான்கள் தொட எத்தனிக்கும் போது இருவருமே எதிர் மின் சுமை தான் என்பதால் ஒன்றோடு ஒன்று பலமாக எதிர்க்கின்றன .
பொருளை பிடிக்கும் போது நாம் உணரும் க்ரிப்னஸ்... இந்த எதிர்க்கும் விசை தான்.
மற்றபடி நாம் எவ்வளவு நெருக்கினாலும் அதன் அணுவை தொட முடியாது...

எனவே அனு நிலைக்கு  இறங்கி பார்த்தால் எந்த ஒரு பொருளும் மற்ற பொருளை தொடுவதே இல்லை (பக்கா தீண்டாமை) .
இன்று சொன்னது சின்ன தகவல் என்றாலும் ஆச்சர்யதில் பெரிய தகவல் தான் இல்லயா??


Comments

  1. அப்பட்டமான ஆச்சரியம்.. மற்றும் புதியது 👌👌👌👍👍👍👍👏👏👏👏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"