#டீ_கடை_பெஞ்ச் (16.7.16) மணல் துகள் பிரபஞ்சம்:

#டீ_கடை_பெஞ்ச் (16.7.16)

        மணல் துகள் பிரபஞ்சம்:

"வியந்து பார்க்கும் ஒரு அதிசய அறிவியல் உண்மை"
என்று யாராவது சொன்னால்..உடனே நம் கற்பனைக்கு சூரியன் வானம் பறந்து விரிந்த பிரபஞ்சம்...அல்லது ஐன்ஸ்டைன் போன்றோர் சொன்ன கோட்பாடுகள் இப்படி பட்ட விஷயங்கள் தான் வரும்..ஆனால் வியந்து நோக்கும் அறிவியலுக்கு நாம் வானத்திற்கு போக தேவை இல்லை.
நாம் நடந்து செல்லும் போது வழியில் கிடக்கும் ஓரு மணல் துகளை எடுத்து கொள்வோம்...
இதை அதாவது ஒரு குண்டூசி யில் ஒட்டி எடுத்தால் முனையில் நான்கு ஐந்து ஒட்டிக்கொள்ளும் சின்ன சிறிய துகளை மனித குலத்தின் மொத்த விஞ்சானிகள் சேர்ந்து கூட முழுசாய் புரிந்து கொள்ள முடியாது தெரியுமா...
நான் இந்த பகுதிக்கு டீ கடை பென்ச் என்ற பெயர் வைத்ததற்கு..ஒரு காரணம் உண்டு...டீ கடையில் நாம் பேசும் பேச்சுகல் முன் தயரிப்போடு பேச படும் பேச்சு அல்ல அந்த நேரத்துக்கு தோன்றும் உலக நடப்பை நாம் பகிர்ந்து கொள்வதை போல தான் இந்த பகுதியில் நான் பகிர்ந்து கொள்ள போகும் விஷயங்கள். இதுநான் எழுதும் கட்டுரை போல முன் தயாரிபோடு எழுத படுவது அல்ல...அது அவ்வபோது உங்களுடன் பகிர்ந்து கொள்ள தோன்றும் சிறு சிறு பதிவுகள்...
தினம் உங்களுடன் 'டச்' சில் இருக்க உதவும் ஒரு யுக்தி..
என்ன அந்த டீ கடையில் வெட்டி தனமாக கதைகள் அடிக்க கூடும் ஆனால் நாங்கள் நடத்தும் இந்த கடையில் ...டீ கடை பென்ச் பகுதியில் நான் பகிர்ந்து கொள்ள போவது கண்டிப்பாக வெட்டி விஷயங்கள் கிடையாது...
இது...
 உங்கள் வியப்புக்கும் ,விருப்பதுக்கும் ...
அறிவுக்கும் ,ஆர்வத்துக்கும்...
ரசனைக்கும் ,யோசனைக்கும்..தீனி போட போகும் ஒரு சிறு பகுதி...
சரி..
இப்போது அந்த மணல் துகள்...
இந்த பிரபஞ்சத்தில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கிறது தெரியுமா...ஒன்று எழுதிவிட்டு அதன் பின் உங்கள் வாழ் நாளில் எத்தனை சைபர் போட முடியுமோ அதனை போட்டால் வரும் எண்ணிக்கையை எடுத்து அதை அந்த எண்ணிக்கை மடங்காகவே ஆக்கினால் கூட அதைவிட அதிகம் என சொன்னால் கற்பனை பண்ண கஷ்டமாய் இருக்கும் என்பதால் வேறு எளிமையான எடுத்துகாட்டு சொல்கிறேன்...
இந்த உலகில் மொத்தம் எவ்ளோ மணல் அதாவது கடல் கிடல் எல்லாம் சேர்த்து...அதில் உள்ள மொத்தம் மணல் துகள் எத்தனையோ ...அதை விட அதிகம் நட்சத்திரங்களை கொண்டது இந்த பிரபஞ்சம். (மொத சொன்ன எடுத்து காட்டே தேவலாம்)
இருங்கள் அவசர பட்டு ஆச்சரிய படாதீர்கள் நான் சொல்ல போகும் அடுத்த விஷயம் அதைவிட ஆச்சர்யமாய் இருக்க போகிறது...
இந்த பிரபஞ்சதில் உள்ள மொத்த நட்சத்திரதின் எண்ணிக்கை எவ்வளவோ...அதை விட அதிகமான எண்ணிக்கையில் அணுக்கள்...ஒரே ஒரு மணல் துகளில் இருக்கிறது...
அடுத்த முறை மணல் துகளை பார்த்தால் ப்பூ.. தூசு என எண்ணாதீர்கள்....
(ஒரு துகள்ள இத்தனை அணுக்கல்னா மொத்த பூமில .??...மொத்த சூரிய குடும்பத்துல...??..பிரபஞ்சத்துல.??..சரி விடுங்க உங்க தூக்கத்தை கெடுக்க விரும்பல)
இந்த சின்ன துகளில் அடங்கியுள்ள பெரிய ஆச்சரியத்தோடு இன்றைய டீ கடை பென்சை நிறைவு செய்கிறேன்..
எனது சார்பியல் எனும் சமுத்திரத்தின் மூன்றாவது பகுதியை விரைவில் வெளியிடுகிறேன்.
தொடர்ந்து எங்கள் பக்கத்தை பார்வையிடுமாறு வேண்டுகிறோம்.
மேலும் உங்கள் மேலான கருத்துகளை எதிர்பார்க்கிறோம்..

உலகை வியந்து நோக்கும் குழந்தைகள் ..
ரா.பிரபு மற்றும் நாகேந்திரன்..
நன்றி..

Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"