"#நியூட்ரினோ ஒரு அடங்காத துகள்"

"#நியூட்ரினோ_ஒரு_அடங்காத_துகள்"

(கருத்தும் எழுத்தும்: ரா.பிரபு)

"அடக்கினா அடங்கற ஆளா நீ" ...கபாலி பாட்டு யாருக்கு பெருந்துகிறதோ இல்லையோ நியூட்ரினோவுக்கு கண்டிப்பாக பொருந்தும்...
இது ஒரு மாய துகள் என்று அறிவியல் அறிஞர்களாலேயே அழைக்க படுகிற அளவிற்கு தனித்தன்மை வாய்ந்தது
இந்த நியூட்ரினோ .

ஐன்ஸ்டைன் எனும் அப்பாடக்கரையும் அவரது அசகாய சூர கோட்பாடுகளை சவால் விட்டு தோற்கடிக்க கூடிய சாத்திய கூறு கொண்ட ஒரே சக்தி இந்த நியூட்ரினோ மட்டும் தான் அது எப்படி என்பதை கால போக்கில் (கட்டுரை போக்கில்) விவரிக்கின்றேன் முதலில் இந்த ஐட்டம் என்ன ஏது என்பதை தெரிந்து கொள்வோம்.

இந்த நியூட்ரினோ என்ற பெயரை அடிக்கடி நீங்கள் தமிழ்நாட்டில் கேள்விப்பட்டிருபீர்கள். நியூட்ரினோ ஆய்வு தேனீ மலை பகுதியில் செய்ய பட இருப்பதாகவும் அது நம் இயற்கை வளத்தை அழிக்கும் என்று ஒரு குழு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டு இருப்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் (என்ன தான் அறிவியல் காதலனாய் இருந்தாலும் இந்த விஷயத்தில் அந்த ஆய்வை கடுமையாக எதிர்பவர்களில் நானும் ஒருவன் அதற்கான நியாயமான காரணத்தை வேறு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்)
இப்போது நியூட்ரினோ...

இதை பற்றி விளக்க நான் கதையை வேறு இடத்தில தொடங்கி விவரிக்க வேண்டியிருக்கிறது.
அதாவது அணுவில் இருந்து..
அணுவில் புரோட்டான் எலக்ட்ரான் நியூட்ரான் தவிர இன்னும் நுணுக்கமாய் பார்த்தால் பல sub attamic துகள்கள் இருப்பது தெரியும் (அதன் பெயர்களெல்லாம் மியுவான் டவுவான் என செம காமெடியாக இருக்கும்)
1789 இல் ஆண்டான் வான் லவாய்ச்சியர் (கேள்வி பட்ட பெயராக இருக்கிறதா? உங்கள் படபுத்தகத்தில் படித்தது) தான் முதன் முதலில் அனு என்ற ஒன்று இருக்கும் போல இருக்கே பா என்று யூகித்து சொன்னவர்.
அதன் பிறகு அது பல பெயரால் உறுதி செய்யப்பட்டது...மேலும் அதன் பின் வந்தவர்கள் அதில் என்னவெல்லாம் அடங்கி உள்ளது என்று ஒவ்வொன்றாக கண்டு பிடிக்க தொடங்கினார்கள்..

 1897 இல் j.j தாம்சன் அணுவில் அடங்கி உள்ள எலக்ட்ரானையும் அதனை தொடர்ந்து ரூதர் போர்ட் புரோட்டான் மற்றும் நுற்றானையும் கண்டு பிடித்தார் அதன் பின் அனு உடைக்க முடியாதது என்ற கருத்தை உடைத்து விட்டு அதற்குள் இன்னும் என்ன இருக்கு என்று டார்ச் அடித்து பார்த்து..பல நுண் துகள்கள் இருப்பதை கண்டு பிடித்து விட்டார்கள்

அந்த நுண்துகளில் இரண்டு கோஸ்டி இருக்கிறது ...ஒன்று அடிப்படை துகள் என்று அழைக்க படுகிறது அவைகள் மேலும் சிறிய துகள்கள் எதனாலும் கட்டமைக்க படாதது...இன்னொன்று கூட்டு துகள் இது பல வகை கூட்டு துகள்கலால் ஆனது....இதை விவரிக்க தான் இரண்டு அறிவியல் பிரிவுகள் தேவை படுகிறது...ஒன்று partical physics (துகள் இயற்பியல்)..இனோன்று atom physics (அனு இயற்பியல்)

இதை போன்ற ஒரு Sub attamic partcals களின் லெப்டான் என்ற கொத்தில் உள்ள ஒரு சிறிய துகள் தான் நியூட்ரினோ....
இது ஒரு அதிசய மந்திர துகள்..
மனிதன் கண்டுபிடித்ததிலேயே மிகவும் லேசான ...எடை குறைந்த ஒன்று என்றால் (யாருப்பா அங்க பின்னால பஞ்சு னு சொன்னது)அது இந்த நியூட்ரினோ துகள் தான் .அறிவியலாளர்கள் கண்ணில் சிக்காமல் சுத்தி கொண்டிருந்த இதை கண்டுபிடித்ததே ஒரு தற்செயல் நிகழ்வில் தான்....

1903 ஆம் ஆண்டு வொல்ப் கேங் பாளி என்ற அறிஞர் பீட்டா துகளை ஆராய்ந்து கொண்டிருந்தார் ஒரு நியூட்ரானை புரோட்டான் மற்றும் எலக்ட்ரானாக பிரித்து கொண்டிருந்தார்...பக்கத்து வீட்டு சிறுவனிடம் 4 வாழை பழம் வாங்கி கொடுத்து இருந்தீர்கள் அவன் வீட்டில் சென்று கொடுக்கும் பொது 3 தான் கொடுத்தான் என்றால் வாழை பழம் எப்படி குறைந்தது என்று நீங்கள் சரியாக கண்டு பிடித்து விடுவீர்கள் அவன் தான் culprit என்று....

ஆனால் நம்ம வொல்ப் ..நியூட்ரானை எலக்ரானாகவும் புராட்டானாகவும் பிரிக்கும் முன் இருந்த ஆற்றல்  அதை பிரித்த பின் குறைந்து போய் இருந்ததை கவனித்தும் குற்றம் ...நடந்தது என்ன என்பதை கண்டு பிடிக்க முடியாமல் குழம்பினார் (ஆற்றல் அழிவின்மை விதி படி அப்படி அற்றல் அழிய முடியாது)  எங்க தான் போச்சு அந்த ஆற்றல் என்று மண்டையை சொரிந்து கொண்டு போய் விட்டார் ...அதன் பின் மூன்று ஆண்டுகள் கழித்து வந்த என்றிகொ பெர்மி என்பவர் அந்த ஆற்றல் ஒரு மாய துகளால் கடத்த பட்டிருக்கிறது என்றார் அந்த மாய துகள் தான் நியூட்ரினோ..

இதன் எடை ஒரு மில்லி கிராம் இல் கோடி கோடி கோடி கோடி(ஆம் 4 முறை தான்) மடங்கு சிறியது....இதன் எடையை இருக்கிறது என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலும் பெரிதாக வித்தியாசம் இருக்காது .அவ்வளவு சிறிய துகள் இவை.... இந்தளவு குறைந்த துகள் என்பதால் இதனால் சில மாயஜாலத்தை செய்ய முடியும்...

நீங்கள் பேய் படங்களில் வரும் ஆவிகள் அப்படியே சுவற்றை ஊடுருவி செல்லும் காட்சி பார்த்திருப்பீர்கள் ...உண்மையில் ஒளியால் கூட சுவற்றை ஊடுருவ முடியாது ஆனால் இந்த மாய துகள் ஒவ்வொரு வினாடியும் பல பில்லியன் கணக்கில் உங்கள் சுவற்றை அல்ல முழு பூமியையே இந்த அப்படியே இந்த பக்கத்திலிருந்து நுழைந்து அந்த பக்கம் வெளியேறி போயி கொண்டே இருக்கிறது...
ஒவ்வொரு வினாடியும் உங்கள் உடலை பல கோடி நியூட்ரினோ கடந்து சென்று கொண்டிருக்கிறது...

இந்த துகள்கள் சுத்தமாக மின்சுமை அற்றது என்பதால் எத்தனையோ துகளை கட்டுப்படுத்த உதவும் எலெக்ட்ரோ மாக்னடிக்கின் பாச்சா இதன் முன் பலிப்பது இல்லை..(தனது இந்த தன்மையால் தான் இதற்கு இந்த பெயரே..நியூட்ரான் என்றால் மின்சுமை அற்ற..).சரி இது எப்படி பட்ட துகள் என்பதை ஆராயலாம் என்றால் அதில் ஒரு சிக்கல் எந்த ஒரு துகளை பற்றிய கேரக்டர்களை நாம் தெரிந்து கொள்வது அது மற்றவற்றுடன் வினை படுவதை வைத்துதான்...ஆனால் நியூட்ரினோ எதனுடனும் வினைபுரிவது இல்லை...அது மதிக்காத போக்கிரி பையனை போல் ஒரு அடங்காத துகள் .அதை ஆராயவும் முடியாமல் விஞாணிகள் தினறினார்கள்..

அராய்ச்சியாளர்களுக்கு நியூட்ரினோ ஓரு அடங்காத துகளாகவே இருந்து வந்தது  என்றாலும் 1956 இல் ஒருவழியாக ப்ரெட்ரிக் ரெய்ஸ மற்றும் கெய்ல் கவன் இதை ஆதார பூர்வமாக கண்டு பிடித்து சொல்லி நாப்பது வருடங்களுக்கு பின் நோபல் பரிசை தட்டி சென்றார்கள்....

இப்போது இவர்கள் இதை கண்டு பிடித்தது எப்படி என்பதை விளக்க முயற்சிக்கிறேன்...
அதாவது நீரில் இவர்கள் பொருத்தி இருந்த ஒரு கருவி ..காமா கதிர் வந்து மோதினால் ஒளிர கூடியது....அந்த காமா ....பாசிடிரான்களால் உற்பத்தி செய்யப்பட கூடியது.... அந்த பாசீட்ரான..நீரின் புரோட்டானில் நியூட்ரினோ வந்து மோதினால் உண்டாக கூடியது ஆக மொத்தம் நியூட்ரினோ தண்ணீர் வழியே கடந்து சென்றால் இவர் கருவி ஒளிரும்...

இப்போது உலகம் எங்கும் நடத்த படும் நியூட்ரினோ ஆய்வுகளின் ஆய்வு கூடங்கள் மகா பிரமாண்டமானவை எல்லாமே பூமிக்கு அடியில் சுரங்கத்தில் செய்யப்பட கூடியவை....காரணம் தரை தளத்தில் உள்ள காஷ்மிக் கதிர்கள் நூற்றினா போன்ற விளைவை ஏற்படுத்த கூடியவை என்பதால் செய்ததது நியூட்ரினோ வா இல்லை காஸ்மிக் கதிரா என்று தெரியாமல் போய் விடும் .
இதற்காக இவர்களுக்கு உள்ளேயே ஒரு லாரி ஓடும் அளவு சுரங்கம் பூமி அடியில் தேவை
இதற்காகவே இவர்கள் உலகில் பல்வேறு காரணங்களுக்காக தோண்ட பட்ட ச சுரங்கங்களை பயன்படுத்தி கொள்கிறார்கள் k.g.f ..kolaar gold field இல் இவர்கள் பல வருடங்கள் இதை செய்தார்கள்.

அமாம் இவ்வளவு கஷ்ட பட்டு அந்த மர்ம துகளை மனிதன் எதற்கு ஆராய வேண்டும்..? காரணம் மனிதன் இது வரை பிரபஞ்சத்தை புரிந்து கொண்டிருக்கிறான் என்றால் அது அங்கேயிருந்து வரும் ஒளியை வைத்துதான்....அதே போல இந்த நியூட்ரினோ துகள் பல கேலக்சிகளை தாண்டி பயணம் செய்ய கூடியவை....பல அணுக்கரு வெடிப்பில் நட்சத்திர அழிவில் இருந்து பிறந்து வர கூடியவை....எனவே இந்த துகளை  நாம் புரிந்து கொண்டால் பல பிரபஞ்ச ரகசியங்களை தெரிந்து கொள்ளலாம்...

கடைசியாக ஒன்று...இதற்கு எடை உண்டா இல்லையா....என்பது தான் இப்போ பெரிய கேள்வி காரணம் இதற்கு கொஞ்சமே கொஞ்சமாயினும் எடை இருந்ததால் கூட இதால் ஓளி வேகத்தை மிஞ்ச முடியாது....அப்படி ஒருவேளை எடை இல்லை என்றால் இது ஒளி வேகத்தையே மிஞ்சிவிடும் அப்படி மிஞ்சினால் ஐன்ஸ்டைன் சொன்ன கோட்பாடுகள் கேள்விக்குரியவைகள் ஆகிவிடும்...

இதை ஆய்வு செய்ய புறப்பட்ட குழு ஒன்று2012 ஆம் ஆண்டு ஆய்வின் போது இந்த துகள்கள் ஒளி வேகத்தை மிஞ்சியதை கண்டு குதித்து எழுந்தனர் நாங்கள் புது கண்டு பிடிப்பை கண்டு பிடித்து விட்டோம் என உற்சாகமாய் கூவினார் ஆனால்...
மீண்டும் அதை பரிசோதனைக்கு  ஆளாக்கி பார்த்தவர்கள் அவர்கள் அளந்த கருவியின் துல்லிய குறைபாட்டால் வந்த விளைவு என்பதை கண்டனர் ...இன்று வரை மிக சரியாக நிரூபிக்க பட வில்லை என்றாலும் எந்த கணத்திலும் எந்த ஆய்விலும் தான் ஒளியை மிஞ்சும் கில்லாடி என்று நியூட்ரினோ எனும் அடங்காத துகள் தன்னை நிரூபிக்கலாம்.

உங்கள்  நண்பன் அறிவியல் காதலன் ரா.பிரபு
<<<

Comments

  1. நன்றிகள், வாழ்த்துகள், தொடருங்கள்.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"