"முதலில் வந்தது முட்டை தான்"




        "முதலில் வந்தது முட்டை தான்"

(கருத்தும் எழுத்தும் :ரா. பிரபு)

இன்று ஒரு உலகமகா கேள்வி(?)கு விடை காண இருக்கிறோம் வாருங்கள்...

முட்டாள் தனமான கேள்வி என்பது அறிவியலை பொறுத்த வரை இல்லை.
நீங்கள் முட்டாள் தனமான கேள்வி என நினைத்து கொண்டிருக்கும் பல கேள்விக்குள் பல அறிவியல் உண்மை அடங்கி இருக்கலாம்.

உதாரணமாக 16 ஆம் நூற்றாண்டில் நியூடனுக்கு முன் யாராவது ஒரு குழந்தை தன் அப்பாவிடம் பந்தை மேலே தூக்கி போட்டு ..."அப்பா மேல போட்டா பந்து என்பா கீழ வருது" என கேட்டிருந்தால் இதென்ன முட்டாள் தனமான கேள்வி..மேல போட்டால் கீழ வரத்தானே செய்யும்..என்றிருப்ப்பார்.
அதான் ஏன் பா வருது என்று மீண்டும் நோண்டி இருந்தால் முட்டாள் தனமா கேக்காத முட்டாள் என்றிருப்ப்பார்.

ஆனால் இன்று நமக்கு அதில் அறிவியல் இருப்பது தெரியும்.
நாம் காலம் காலமாக கேட்டு கொண்டு வரும் ஒரு  விளையாட்டு தனமான கேள்வி ஒன்று உண்டு .அது கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா?

யாரவது முட்டை என்றால் அந்த முட்டை எங்கிருந்து வந்தது கோழி தானே போட்டிருக்க வேண்டும்! என்பார்கள்.யாராவது கோழி என்றால் அந்த கோழி எப்படி வந்தது என கேட்பார்கள்.
உண்மையில் இந்த கேள்விக்கு அறிவியலால் பதில் சொல்ல முடியுமா?

அறிவியலால் முடியாதது ஒன்று உண்டா? (எவ்வளவோ பண்ணிடோம்...இத பண்ண மாட்டோமா.?)

அதற்கு விடை தெரிந்து கொள்ள நீங்கள் டார்வின் பரிணாம வளர்ச்சியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.அதாவது இந்த உலகத்தில் படிப்படியாக உயிரினங்கள் வளர்ந்த விதம்.

பரிணாம வளர்ச்சி என்றால் என்ன.?
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ...தகவமைப்பில்..வாழும் உயிரினங்கள் தங்கள் சூழ்நிலைகள் மாறும் போது அந்த மாற்றத்திற்கு ஏற்ப தனது உடலை தன தன்மையை தன சுபாவங்களை மாற்றி கொள்வது தான் பரிணாம வளர்ச்சி..

ஆனால் இது ஏதோ நாம் மாச கடைசியில் பொருளாதார சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் டீ காபி எல்லாம் கூட கம்மி பண்ணி கொள்வதை போன்ற உடனடி மாற்றம் அல்ல..
பரிணாம வளர்ச்சி எனபது நடக்க குறைந்த பட்சம் 10 லட்சம் ஆண்டுகளாவது ஆகும்..

காரணம் ஒரு குறிப்பிட்ட தாகவமைப்பில் வாழும் உயிரினம் எடுத்து காடாக முற்றிலும் நிலத்தில் வாழும் ஒரு உயிரினம் தனக்கு வாழ்ந்து பழக்க மில்லாத தண்ணீரில் வாழ முற்றிலும் பழகி அதற்கேற்றார் போல தனது உடலை மாற்றி கொள்ளும்.

உதாரணமாக திமிங்கலம் நீர் வாழ் உயிரினம் தான் அனால் அதன் ஆதி அந்தம் வரை பின்னோக்கி அதை பின்தொடர்ந்து பார்த்தால் பல லட்சம் வருடங்களுக்கு முன் அதன் மூதாதையர்கள் கடலில் வாழ்ந்தவர்கள் அல்ல மாறாக நிலத்தில் வாழ்ந்து உணவு தேவைக்காக நீரில் இறங்கியவை.. .
பின் அதன் பரம்பரை அடிக்கடி நீரில் இறங்க பின் அதற்கடுத்த பரம்பரை நீரிலே எப்போது பார்த்தாலும் கிடக்க ..பின் தலைமுறை தலைமுறை யாக கடந்து வந்து பார்த்தால் இத்தனை வருட பரிணாம வளர்ச்சியில் திமின்கலத்தின் உடல் நீரில் வாழ தன்னை தகவமைத்து கொண்டது தெரியும்.

என்றாலும் இன்றும் கூட திமின்கலதால் தண்ணீரில் மீன் போல வாழ முடியாது அவை அவ்வப்போது மூச்சு விட வெளியே வந்து தான் ஆக வேண்டும்.
அவைகள் மீன் போல முட்டை இடாது குட்டி தான் போடும்.

முட்டை கதை சொல்ல வந்து இதை எல்லாம் சொல்ல காரணம்.நீர்வாழ்விகள் போல நில வாழ்விகளில் ஊர்வன வகுப்பை சார்ந்த டைனோசர் போன்ற விலங்குகள் முட்டை தான் போட்டன.. அதை போன்ற பெரிய ஊர்வன விலங்குகள் பல தலைமுறையாக முட்டை போட்டு வந்தது...அந்த முட்டையில் எந்த மாறுதலும் இல்லை முட்டை முட்டை தான்.

ஆனால் அதை இடும் விலங்குகள் காலநிலை மாற்றத்தால் பல மாறுதலுக்கு உள்ளாகின ஊர்வன வகுப்பு கால போக்கில் கோழி போன்ற பறவை ஆயின (கோழி கழுத்து அமைப்பு அது பார்க்கும் விதம் தலையாட்டி நடக்கும் விதம் டைநோசரை ஒத்திருப்பதை கவனித்து இருக்கிறீர்களா)

எனவே திருமதி கோழி அவர்களின் முன்னோர்கள் கோழியாக இல்லாத போதே முட்டை போட்டார்கள்.

பரிணாமத்தில் கோழி பின்னால் தான் வந்தது எனவே முதலில் வந்தது 'முட்டை' தான்.

திரும்ப யாரவது முதல்ல வந்துச்சின்னு சொல்றீங்களே அந்த முட்டையை போட்டது கோழி தானே என்று மீண்டும் புரியாமல் கேட்டால்.... ஆமாம் கோழிதான்..ஆனால் அப்போது அது கோழியாக இருந்திருக்கவில்லை.

உங்கள் அன்பு நண்பன் அறிவியல் காதலன் ரா.பிரபு


Comments

  1. நான் இன்னும் கூடுதலாக எதிர்ப்பார்த்தேன் நண்பரே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"