#டீ_கடை_பெஞ்ச்(24.7.16) "மெய்ஞான விஞானம்"

#டீ_கடை_பெஞ்ச்(24.7.16)

        "மெய்ஞான விஞானம்"

(கருத்தும் ,கவிதையும் ரா.பிரபு)

இம்முறை ஒரு மாறுதலுக்கு கவிதை எழுதலாம் என இருக்கிறேன்.

உலகை உற்று பார்க்கும் போது விஞானமும்  மெய்ஞானமும் ஒரே புள்ளியில் சந்திப்பதாக நம்புகிறேன் அதை தான் கவிதை ஆக்கி இருக்கிறேன் .படித்து பார்த்து கருத்தை சொல்லவும்.

ஆனால் கவிதை ஆனாலும் காதல் ஆனாலும் எங்கள் பேஜ்கு வந்து விட்டால் அதை விஞ்சான முலாம் பூசி அனுப்புவது தான் எங்கள் வழக்கம் இனி கவிதை....

     "மெய்ஞான விஞானம்"

தேடி அலைகிறேன் அந்த புள்ளிகளை..

எங்கோ ஒன்றாய் சஞ்சரிகிறது,

சந்திக்காத இரு சந்தி முனைகள்.

கண்ணில் காண கிடைக்காத அணுவை போல் தான்,

"ஈர்த்து விலகி" இயங்குகிறது கண்ணில் காண அடங்காத அண்டசராசரமும்.

"இருக்கும் இருக்காது"...."உணர முடியும் பார்க்கமுடியாது" கடவுள் கொள்கை போல தான் உள்ளது குவாண்டம் கொள்கையும்.

ஆதி மூலத்தில் அடங்கிய சக்தி பரிமணித்து அவதரிப்பதை விளக்குகிறது ஆன்மீக கோட்பாடு.

வெறும் ஆற்றலை முழு பருபொருளாக பகுப்பதை விளக்குகிறது ஐன்ஸ்டைன் சமன்பாடு.

நவ கிரகங்கள் ஆலயத்தில்....

ஒன்பது கிரகங்கள்...ஆகாசத்தில்..

சூரியனுக்கு ஏழு வண்ண குதிரை முந்தய புராணத்தில்.

சூரியனில் ஏழு வண்ணம் இன்றைய முப்பட்டகத்தில்.

ஆன்மீக அறிவுகளை அணுகுகிறேன் விஞான விளக்கங்களோடு...

விஞான விந்தைகளை வியக்கிறேன்

ஆன்மீக அச்சர்யங்கலோடு.

தேடி அலைகிறேன்...

அந்த சந்தி புள்ளிகளை.

என் புரிதல் கோலங்களுக்கு

ஆச்சு புள்ளிகள் அவை.

Comments

  1. 👌👌👌இந்த கவிதைய படிச்சுப் பார்க்குற எல்லா கவிங்களும் சொல்றாங்க, இது சாதாரண கவி இல்லை; நாடி நரம்பு இரத்தம் எல்லாத்திலயும் விஞ்ஞானம் ஊறி போன ஒருத்தரால தான் இப்படி கவி படிக்க முடியும்னு சொல்றாங்க... சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க நீங்க காலேஜ் படிக்கும் போது என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க... சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க ...(பாட்ஷா தீம் ம்யுசிக் இசைங்க...)👍👍👍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"