''சார்பியல் எனும் சமுத்திரம் " (பாகம் 4)






சார்பியல்_எனும்_சமுத்திரம் (பாகம் 4)


"உங்களுடைய சார்பியல் தத்துவத்தை பற்றி மொத்தம் 3 பேருக்கு தான் தெரியுமாமே அது உண்மையா''என்று ஒரு நிருபர் ஒருமுறை ஐன்ஸ்டைனை கேட்டார்..
அதற்கு அவர் "இரண்டு பேர் இருக்கிறார்கள தெரியும் மூன்றாவது யார் ?" என்றார்.
அவர் கோட்பாடு சாதாரண மக்களின் புரிதற்கு அப்பாற்பட்டு இருந்தது...

ஒருமுறை சார்லிசாப்ளினை நமது தல சந்திக்க நேர்ந்தது .ஒருவர் சிரிப்பு சக்கரவர்த்தி இன்னொருவர் சிந்தனை சிற்பி..அப்போது தல சொன்ன ஒரு பஞ்ச் "மச்சி நான் இந்த உலகத்துக்கு இன்னானாமோ சொல்ல வரன் ...நெறய சொல்லறேன் ஒரு பயலுக்ககும் ஒன்னும் புரியல டா...அனா பாரு உன் படத்த பாத்திருக்கன் நீ ஒரு வார்த்த கூட பேசரதே இல்ல ஆனாலும் நீ இன்னா சொல்ல வரேன்னு மக்கள் கரெக்டா புரிஞ்சுகிறானுங்கோ "

 அவரது கண்டுபிடிப்புகள் அரம்பகாலகட்டத்தில் சந்தேகத்திற்கு உரியவையாக மட்டும் அல்ல பரிகாசத்துக்கும் ஆளாயின..என 'ஐன்ஸ்டைன் எனும் அப்பாடகர்' கட்டுரையில் சொல்லி இருந்தேன்...பல சில பேர் பரிகாசம் செய்தாலும் அவரை சீரியஸாக எடுத்து கொண்டு பல பேர் பல ஆண்டுகளாக பல ஆராய்ச்சியில் இறங்கினார்கள்
கிட்டதட்ட நூறு ஆண்டுகள் கழித்துவரை...எல்லா டெஸ்டில் நூற்றுக்கு நூறு எடுத்து பாஸ் செய்தார் அந்த அப்பாடகர்...இன்று வரை அவர் முடிவுகள் இம்மி பிசகவில்லை...(ஐன்ஸ்டைன் கருத்தை மிஞ்ச போகும்...அவர் கருத்தை பொய்யாக்க கூடிய ஒரு ஆராய்ச்சி சாத்திய கூறு இன்று உள்ளது அதை பற்றி இந்த தொடர் கட்டுரையின் கடைசி பகுதிகளில் .சொல்கிறேன்)

இப்போது அவர் சொன்ன கோட்பாடுகளில் ஈர்ப்பு அலை என்பதை பற்றி பார்க்கலாம் ..(gravitational wave)
ஒரு குளத்தில் நீங்கள் செய்து விட்ட காகித கப்பல் மிதக்கிறது..கொஞ்சம் ஓரமாய்..என வைத்து கொள்ளுங்கள் இப்போது குளத்தின் மையத்தில் ஒரு பெரிய கல்லை போட்டால் என்னாகும்? அதனால் ஏற்பட்ட அலையானது நகர்ந்து நகர்ந்து சென்று கப்பலை பலமாக உலுக்கும் அல்லவா...இதே ரீதியில் பிரபஞ்சத்தில் நடக்கும் சில கல்எறிதல் நிகழ்வுகளால் gravitational wave(ஈர்ப்பு அலைகள்) உருவாகிறது என்றார் ஐன்ஸ்டைன்.

அந்த கல் ஏறி நிகழ்வு எப்படி நடக்கிறது என்றால் ..பலமான ஈர்ப்பு விசை காரணமாய் இரண்டு நட்சத்திரங்கள் மோதி அழியும் போது நடக்கிறது..அல்லது இரண்டு கருமதுளைகள் ஒன்றோடு ஒன்று நெருங்கி ஒன்றினையும் போது நடக்கிறது அந்த நேரத்தில் உச்ச கட்டத்தை நெருங்கும் போது வேகம் அதிகரித்து அதிகரித்து ஒரு கட்டத்தில் அவைகள் ஒன்றோடு ஒன்று சுழலும் வேகம் கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் பாதியை எட்டுகிறது...பின் ஒன்றோடு ஒன்று மிக பலமாக மோதி கொண்டு இந்த ஒன்றிணைவு காரணமாக உடனடி குழந்தையாக நியூட்ரான் குண்டு என்ற ஆன் குழந்தையோ அல்லது கரும்த்துலைகள் என்னும் பெண்குழந்தையோ பிறக்கிறது..(கதை சார்பியலை விட்டு எங்கெங்கோ சொல்கிறதே என முனக வேண்டாம் திரும்பி வந்துவிடுகிறேன் பொறுங்கள்) இந்த நிகழ்வில் குளத்தில் கல் எரிந்தது போன்ற ஒரு அலை புறப்பட்டு அசால்டாக 100 கோடி ஆண்டுகள்கூட தாண்டி இந்த பிரபஞ்சத்தில் பயணம் செய்கிறது...என்று ஐன்ஸ்டைன் சொன்னதை நிரூபிக்க அவரது காலத்திற்கு கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கழித்து ஒரு ஆராய்ச்சி குழு முயன்றது.

லேசர் கருவியுடன் கூடிய ஒரு ஆய்வு குழாய்...அதில் லேசர் புறப்பட்டு போயி அடுத்த முனையில் உள்ள கன்னாடியில் பிரதிபலித்து திரும்பும் படி ஏற்பாடு அந்த சென்று வந்த வேகத்தை அளக்க ஒரு மிக நுட்பமான கருவி...இதே போல இரண்டு கருவிகள் செய்து இரண்டு வெவேறு இடத்தில வைத்து விட்டார்கள். அந்த குழாயின் நீளம் 4 கிலோமீட்டருக்கு இருந்தது. அந்த லேசர்  ஒளி வேகம் எதாலும் பாதிக்க படாது...ஐன்ஸ்டைன் சொன்ன ஈர்ப்பு அலையை தவிர ...குருவி பிடிக்க பொறி வைத்து விட்டு காத்திருப்பதை போல ..இந்த கருவியை செய்து வைத்து விட்டு காத்திருந்தார்கள்..
அந்த பொறியின் பெயர் interferometar..
அந்த ஆய்வகத்தின் பெயர் 'லைகோ' (LIGO - Laser Interferometer Gravitational wave Observatery)..
2002 இல் அமைக்க பட்ட இந்த பொறி 13 ஆண்டுகளாய் ஒரு குருவியும் பிடிக்கவில்லை ஆனால் 2015 இல் காத்திருந்துக்கு பலன் கிடைத்தது.
செப்டம்பர் 14 ஆம் நாள் 9.51மணிக்கு வாஷிங்டன் மற்றும் லூசியானா..இரண்டிலும் அமைக்க பட்ட கருவிகள் சிக்னளை கொடுத்தது...
ஐன்ஸ்டைன் சொன்ன ஈர்ப்பு அலைகள் இருப்பது சந்தேகம் இல்லாமல் நூறு ஆண்டுகள் கழித்து...சமீபமாக சில் வருடம் முன் நிரூபிக்க பட்டது...

1.3 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், ஒன்றையொன்று சுற்றிக்கொண்டிருந்த இரண்டு கருந்துளைகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கருந்துளையாக மாறியபோது ஏற்பட்ட ஈர்ப்பலைகள் தான் அது அந்த இரண்டு கருந்துளைகளும்,கிட்டத்தட்ட 30 சூரியனின் அளவையுடயனவாக இருந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் 150 கிலோமீட்டர்கள் குறுக்களவுள்ளவையாக இருந்திருகின்றன.
ஐன்ஸ்டைனை நாமும் ஒருமுறை பாராட்டிவிட்டு நமது சமுத்திரதுக்கு திரும்புவோம்..

இப்போது general theory of relativity...யை பற்றி கொஞ்சம் பாப்போம்.

ஸ்பெஷல் தியரி இல் காலம் சாசுவதமானது என்ற நியூட்டனின் கருத்தை மறுத்த அவர் இம்முறை general theory of relativity இல் நியூட்டன் கண்டு பிடித்த ஈர்ப்பு விசையை கேள்விக்கு அளாக்கினார்...சர் ஐசக் நியூட்டன் கூற்று படி...பூமி சூரியன் போன்றவை பொருட்களை தன்னை நோக்கி இழுக்க காரணம் அதற்குள் இருக்கும் ஆக்ரஷ்ன சக்தி...காந்தம் போல...இருப்பதனால் தான்...ஆனால் ஐன்ஸ்டைன் ஈர்ப்பு சக்திகு வேறு விதமான விளக்கம் கொடுத்தார்....அந்த விளக்கத்தை பார்க்கும் முன்...
உங்ளால் இரும்பை வளைக்க முடியும்..மரத்தை உடைக்கமுடியும்...ரப்பரை இழுக்க முடியும் ...துணியை சுருட்ட முடியும்...
ஆனால் வெட்ட வெளியில் கொண்டுபோய் விட்டு வெளியை கொஞ்சம் சுருட்டி வைப்பா என்றால் முறைப்பீர்கள் ..
சரி சுருட்ட முடிலனா கொஞ்சம் வளைத்தாவது வைப்பா என்றால் அடிப்பீர்கள்..

ஆனால் ஐன்ஸ்டைன் கூற்று படி வெறும் வெளியை நாம் வானம் என்று சொல்லும் அந்த சூனியத்தை...வளைக்க சுருட்ட விரிக்க முடியும்....என்ன அதை செய்வதற்கு...பெரிய நட்சத்திரம் அல்லது கிரகங்களின் வலிமை தேவைப்படும்...அவர் கூற்று படி பிரபஞ்சத்தில் உள்ள அணைத்து பொருளும் தனது நிறைக்கேற்ப தன்னை சுற்றி உள்ள வெளியை கொஞ்சம் வளைத்து வைத்துள்ளது ...அந்த வளைவு காரணமாக அந்த வளைவு எல்லைக்கு உட்படும் எல்லா பொருளும் வளைவில் விளைவால் அந்த பொருளை நோக்கி வட்ட பாதையில் ஓடும் அதற்கு பெயர்தான் ஈர்ப்பு விசை என்று gravitation கு புது விளக்கம் கொடுத்தார்.
 ஒரு அறையில் நான்கு பேர் ஒரு பெட்ஷீட்டை விரித்து பிடித்து கொள்ளுங்கள்..இது தான் வானம்.... வெளி ...என்று வைத்து கொள்ளுங்கள்...இப்போது அதன் நடுவில் ஒரு பெரிய இரும்பு குண்டை வைத்தால் (சூரியன்) பெட்ஷீட் கீழ் நோக்கி வளைந்து தொங்கும் அல்லவா அப்படி தான் வானம் நட்சத்திரங்களின் வலிமையால் வளைந்து இருக்கிறது என்றார் ஐன்ஸ்டைன்..மேலும் அந்த பெட்ஷீட்டில் ஒரு ஓரமாய் ஒரு எலுமிச்ச பழதை உருட்டிவிட்டால் அது மையத்தை நோக்கி நேரே ஓடாமல் சுற்றுவட்ட பாதையில் சுற்றி சுற்றி அந்த இரும்பு குண்டை நெருங்கும் அது போல தான் கிரகங்கள் வானத்தின் அந்த வளைவுகளில் சூரியனை சுற்றி வருகின்றன...

 1905 இல் தனது ஸ்பெஷல் தியரியை வெளியிட்ட பின்...எக்ஸாமில் தெரிந்த கேள்வியை எழுதாமல் விட்டு விட்டு வந்த மாணவனை போல ச்சை அதை எழுதாம விட்டுடோமே இத இன்னும் டெவலப் பண்ணி இருக்கலாமே என புலம்பிகொண்டு இருந்துதார் .

விளைவாக அவரது general theory யை 1915 இல் வெளியிட்டார்..அவர் கோட்பாடுகளை கேட்டவர்கள் கேட்ட கேள்வி" இதை எப்படி நிறுப்பிபீர்கள்..என்ன ஆதாரம்.."
ஐன்ஸ்டைன் சிரித்து விட்டு "இன்னும் எத்ன பேரு டா இதே கேள்விய கேப்பீங்க" என்றார் சிவாஜி ரஜினி போல..போங்க போங்க போயி ஆராய்ச்சி பண்ணி பார்த்துக்கங்க..என்றார்
அது மட்டும் அல்ல பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் தங்கள் ஆக்ரஷ்ன சக்திக்கு ஏற்றார் போல வெளியை மட்டும் அல்லாமல் ஒளியையும் ஏன் காலத்தையும் வளைக்க வல்லது என்று இன்னொரு போடு போட்டார்...
அவர் சொல்வதை சரி பார்க்க ஆய்வு கூடம் உதவாது.... இந்த பிரபஞ்சத்தையே ஆய்வு கூடமாக மாற்றினால் தான் அவர் சொன்னதை ஆராய முடியும்...
அப்படியும் செய்யத்தான் செய்தார்கள்..
அவருடைய கோட்பாடு படி  பெரிய நட்சத்திர மண்டலங்களில் இருந்து வரும் ஒளியானது..நமது சூரியனை கடந்து வரும் போது அதை சுற்றி வளைந்து..வருகிறது..(ஒரு ஆற்றின் நடுவில் ஒரு பாறை நீட்டிகொண்டு இருந்தால் தண்ணீர் அதை சுற்றி கொண்டு போவதை போல..)

இதை பார்க்க வேண்டும் என்றால் சாதாரண நேரத்தில் சூரியனை பார்த்து கண்டு பிடிக்க முடியாது...சூரிய கிராகணத்தின் போது தான் அது முடியும்...நல்ல வேலையாக அவர் கோட்படு வெளியிட்ட 2 வருடத்தில் ஒரு சூரிய கிரகணம் வந்தது..ஆராய்ச்சியாளர்கள் ஆர்வமானார்கள் சூரிய கிராகணத்தின் போது உற்று கவனித்தார்கள்...theory of bending off light ....நட்சத்திர மண்டல் ஒளி சூரியனை சுற்றிக்கொண்டு...வட்டப்பதையில் பிரயாணம் செய்து வந்து சேர்ந்தது...அப்படி ஒளி வளைந்து வருவதை gravitational lense..(ஈர்ப்பு வில்லை)என அழைத்தார்கள்.
ஐன்ஸ்டைன் கூற்று சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் நிரூபிக்க பட்டது....

              ஐன்ஸ்டைனிடம் ஒரு பிரச்னை உள்ளது அவர் கோட்பாடு ஒன்றை நீங்கள் ஆம் என ஏற்று கொண்டால்..domino effect போல அல்லது சைக்கிள் ஸ்டாண்டில் ஒரு சைக்கிளை தள்ளிவிட்டார் போல வரிசையாக பல விஷயங்களை ஒத்து கொள்ள வேண்டி வரும் அது எல்லாமே நமது அறிவுக்கு ஒவ்வாத நமது அன்றாட physics கு அப்பாற்பட்டு இருக்கும்...

குறிப்பிட்ட இடத்தில வெளி சுருங்கி சுருட்டி வைத்தால் என்னாகும் தெரியுமா...நீங்கள் மைலாப்பூரில் அந்த சுருங்கிய வெளி புள்ளியில் உங்கள் தலையை விட்டால் மாயாஜால படத்தில் வருவதை போல நேரே திருநெல்வேலியில் எட்டி பார்ப்பீர்கள்...(அந்த சந்திப்பு புள்ளிக்கு பெயர் தான் worm hole அதை பற்றி இன்னொரு கட்டுரையில் விரிவாக எழுத இருக்கிறேன்) இப்போதைக்கு மயிலாப்பூரில் அந்த இடம் இல்லை ஆனால் பிரபஞ்சத்தில் நிறைய உண்டு...

இப்படி தூரத்தை கடந்தால் நாம் கூடவே வேற ஒன்றையும் கடந்து செல்வோம் அது தான் காலம் ஐன்ஸ்டைன் கூற்று படி காலம் வெளி இரண்டும் வேறு வேறு அல்ல ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்த space-time கால வெளி...
Worm hole பயன்படுத்தி பல ஓளி யாண்டு தொலைவை கடக்கும் போது நேரத்தையும் கடந்தே செல்கிறோம்.

    ' இந்த சார்பியல் எனும் சமுத்திரம்' கட்டுரை தொடரின் இறுதி பாகத்தின் இருதிபகுதிக்கு வந்துவிட்டோம் ஐன்ஸ்டைன் என்னும் மாமேதை சொல்லி விட்டு போனதை வைத்து கொண்டு இன்றளவும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன...வான்வெளியை ஆராயனுமா இல்ல அணுவை ஆராயனுமா இல்லை குவாண்டம் பிஸிக்ஸ் ஆ ...இல்லை டைம் டிராவலா...
அல்லது அணுகுண்டு தொழில்நுட்டம்மா அங்கே ஐன்ஸ்டைன் என்னும் அற்புதம் இல்லாமல் இருக்க முடியாது...அந்த அளவு அறிவியலை ஆட்டி பார்த்த அப்பாடகர் தான் ஐன்ஸ்டைன்..என்பதால் தான் நான் அவரை பற்றி அவர் கண்டுபிடிப்புகளை பற்றி எளிய முறையில் எழுத விரும்பினேன்.. ..எனது சிறு வயதில் சார்பியல் கோட்பாடுகளை படித்த போது மிகுந்த ஆர்வம் கொண்டேன் அரைகுறையாய் புரிகிறதே யாராவது புரியும் படி விளக்கினால் நல்லா இருக்குமே என தவித்தேன்...அந்த தவிப்பு     இன்ரைக்கும் உள்ளவர்களை இலக்காக வைத்து தான் இப்போது நான் ஐன்ஸ்டைன் என்னும் அப்பாடக்கர் தொடங்கி இந்த கட்டுரையை எழுதினேன் எனது முதல் கட்டுரையில் நான் குறிப்பிட்டதை போல சுத்தமா ஒன்னும் தெரியாதவனை மனதில் கொண்டு தான் இதை படைத்திருக்கிறேன்...இது எந்தளவு சிறப்பாய் வந்துள்ளது என்பதை நீங்கள் தான் படித்து விட்டு சொல்ல வேண்டும்..

என்ன தான் ஐன்ஸ்டைன் ஒரு அப்பாடக்கர் என்றாலும் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு...இப்போது சமிபகாலமாய் பேச்சு வாக்கில் அடிபடும் நியூட்ரிநோ ஆய்வு என்ன தெரியுமா....நியூட்ரிநோ என்னும் துகளால் ஒளி வேகத்தில் மிஞ்ச முடியும் என்பது தான் அது...அது நிரூபிக்க பட்டால் நியுடனை ஐன்ஸ்டைன் upgrade செய்ததை போல அவர் கருத்துகள் upgrade செய்ய படலாம் என்றாலும் இன்றளவும் தீர்க்கமாய் அவரை மிஞ்சியவர் எவரும் இல்லை....
இந்த தொடரை ரசித்து படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்
கட்டுரை முடிய போகுதே என வருத்தம் உங்களுக்கு இருந்தால் வருத்த பட வேண்டாம்(அதானே பார்த்தேன்) இத்தொடரில் விடுபட்ட ஒன்று இன்னும் விளக்க படாமலேயே உள்ளது அது தான்  E=MC 2...
அதை இத்தொடரின் கடைசி இறுதி பகுதியாக எழுத இருக்கிறேன்...


தொடரும்...............

Comments

  1. அருமை! இதை இதைதான் நான் இவ்ளோ காலம் தேடிட்டிருந்தேன். நன்றி. இதை வாசிக்கும் எங்களோடு முடிந்து போவதில்லை. எங்கள் குழந்தைகளுக்கும் ஈஸியா அழகு தமிழில் விளக்கி சொல்லி அறிவு பெருக்கம் அடைய ஏதுவாயிருக்கும். தாங்கள் எவ்வளவு பெரிய பனியினை செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பது தங்களுக்கு தெரியாது. ஈஸியா அறுவடை செய்து பலனை அனுபவிக்கும் எங்களுக்குதான் தெரியும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நானும் வழி மொழிகிறேன் நண்பரே....

      Delete
  2. Awesome, you have done a great job. Please keep write...

    ReplyDelete
  3. உங்களின் இலக்குகளில் நானும் ஒருவன்... நன்றிகள் நண்பரே.....

    ReplyDelete
  4. ஐன்ஸ்டைன் எனும் அப்பாடகர் கட்டுரையின் லிங்க் அனுப்புங்களேன் நட்பே....(உங்களின் சார்பியல் எனும் சமுத்திரம் கட்டுரையை இரண்டாவது முறையாக படிக்கின்றேன்.)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"