" பென்ஹர் ஒரு அதிசய திரைப்படம்"



    பென்ஹர் - ஒரு அதிசய திரைப்படம்

(கருத்தும் எழுத்தும் : ரா.பிரபு)

இந்த பிரமிட்...தாஜ்மஹால் ....தஞ்சை பெரிய கோவில் இதை எல்லாம் அந்த காலத்தில் எப்படி கட்டினார்கள் என நாம் அச்சர்யப்படுவதை போல ...
திரை துறையில் " எப்படி எடுக்கப்பட்டது"என இன்றளவும் வியப்படைய செய்யும் ஒரு வரலாற்று படம் தான் பென்ஹர்....

1959 இல் வெளியான அந்த படம் மொத்தம் குவித்த ஆஸ்கார் அவார்ட் களின் எண்ணிக்கை 11 .படம் வெளிவந்து 60 ஆண்டுகள் ஆகி விட்டது இன்று வரை அந்த சாதனையை எந்த படமும் மிஞ்ச முடியவில்லை...(titainc படம் கூட 11 ஆஸ்கர் வாங்கி அந்த சாதனையை சமன் தான் செய்து உள்ளது...)

அப்படி என்ன தான் இருக்கு பென்ஹர்ல...
பென்ஹர் இல் பிரமாண்ட அரங்கம் ..துரத்தும் ரத காட்சி...மெய்சிலிற்கவைக்கும் சண்டை காட்சிகளெலாம் ஹெலிகாப்டர் ஷாட் . ....
அகேளா கிரேன் ஷாட் எல்லாம் இருக்கிறது...ஆனால் அந்த காலத்தில் ஹெலிகாப்டரை பயன்படுத்தி படம் எடுக்கும் தொழில் நுட்பமே இல்லை...அகேளா கிரென் கண்டுபிடிக்கப்படவே இல்லை இது எப்படி இருக்கு?

பென்ஹருக்காக ராட்சத சாரங்கள் ஊர் முழுக்க போட பட்டு அதில் தொங்கி கொண்டு படம் எடுத்தார்கள்....
பிரமாண்ட அரங்கங்கள் அமைக்க டன் கணக்கில் மணல்கள் கடற்கரையில் இருந்து கொண்டு வந்து கொட்டபட்டது
அந்த படத்தின் உயிர்நாடியாக சொல்ல படுவது ரத காட்சிகள்....
ரதங்கள் உருளுவது தூக்கி ஏறிய படுவது குதிரை கால்களுக்கு இடையில் சிக்கி புரள்வது போன்ற காட்சிகள் அவ்வளவு தத்ரூபம்....

ஸ்பாட் எடிட்டிங் ...கம்பியூட்டர் கிராபிக்ஸ் எதுவும் இல்லாமல் எடுக்க பட்ட ஒரு படம் இன்றைய கால கட்டம் வரை சவால் விடுகிறது...

கதை..
தனது நண்பனால் வஞ்சிக்க பட்டு குற்றம் சுமத்த பட்டு சிறையில் அடைக்க பட்டு அடிமையாக நடத்த படும் ஹூடாஸ் பென்ஹர் திரும்பி வந்து பழி வாங்கு கிறான்.... இதுதான் முழு கதையே என்று நினைத்து விடாமல் ஒருமுறை படத்தை பாருங்கள்...
மேலும் படத்தில் காட்ட பட்டுள்ள ஒரு முக்கிய கதாபாத்திரம் இயேசு கிறிஸ்து...சில முறை இயேசுவை சந்திக்கிறான் பென்ஹர்...படத்தின் இறுதி காட்சியில் தொழு நோயால் ஒதுக்கி வைக்க பட்ட பென்ஹரின் அம்மா தங்கை இயேசுவால் குணமாக்க படுவது காட்ட படுகிறது
திரை விமர்சனம் எழுதுவதில் ஆர்வம் இல்லை....அது ஒரு ஆச்சரியமான பார்க்க வேண்டிய படம் என்பதாலேயே இதை பற்றி எழுதுகிறேன் என்பதால் ...கதை பற்றி அதிகம் சொல்ல போவது இல்லை....
Lew wallace என்பவர் எழுதிய benhur the tale of crist என்ற நாவலை தழுவி இந்த படம் எடுக்க பட்டது...

அடடா அப்பவே அப்படினா இப்ப அந்த பென்ஹர் படத்த இன்றைய டெக்நாலஜி ல எடுத்தா எப்படி இருக்கும் என தோன்றுகிறதா கவலை வேண்டாம் அடுத்த மாதம்(ஆகஸ்ட்) வருகிறது பென்ஹர் 2016 ...பார்த்து ரசியுங்கள்...

படம் வாங்கிய விருதுகளை பற்றிய தகவல்களை கீழே விக்கியிலிருந்து சுட்டு ஒட்டி இருக்கின்றேன் பாருங்கள்..

வென்ற விருது: சிறந்த திரைப்படம் — சாம் ஷிம்வாலிஸ்ட்
வென்ற விருது: சிறந்த நடிகர் — சார்ல்ட்டொன் ஹெஸ்டொன்
வென்ற விருது: சிறந்த துணை நடிகர் — கியூக் கிரிபித்
வென்ற விருது: சிறந்த இயக்குனர் — வில்லியம் வைலர்
வென்ற விருது: சிறந்த திரை அலங்காரம் — எட்வார்ட் சி.கார்பாக்னோ,வில்லியம் அ.ஹர்னிங்,மற்றூம் ஹியூக் ஹண்ட்
வென்ற விருது: சிறந்த ஒளிப்பதிவு — ரோபேர்ட் சேர்டீஸ்
வென்ற விருது: சிறந்த உடை அலங்காரம் — எலிஷபெத் ஹாபெண்டன்
வென்ற விருது: சிறந்த தந்திரக் காட்சி — அ. ஆர்னோல்ட் கிலெஸ்பி(ஒளி), மிலொ பி.லோரி (ஒலி),மற்றும் ரோபேர்ட் மக்டோனல்ட்
வென்ற விருது: சிறந்த பதிப்பு — ஜான் டி.டன்னிங் மற்றும் ரால்ப் இ.விண்டர்ஸ்
வென்ற விருது சிறந்த இசையமைப்பு — மைக்லோஸ் ரோசா
வென்ற விருது : சிறந்த ஒலிப்பதிவு — பிராங்க்லின் மில்டன்
பரிந்துரைக்கப்பட்டது: சிறந்த எழுத்தாக்கம் — கார்ல் துன்பேர்க்
கோல்டன் குலோப் விருது தொகு
வென்ற விருது: சிறந்த திரைப்படம் - சாம் ஷிம்பலிஸ்ட்,த்யாரிப்பாளர்
வென்ற விருது: சிறந்த இயக்குனர் - வில்லியம் வைலர்
வென்ற விருது: சிறந்த துணை நடிகர் - ஸ்டீபன் போய்ட்
வென்ற விருது: சிறப்பு விருந்து ஆண்ட்ரூ மார்ட்டன் குதிரை சவாரிக் காட்சிகளை இயக்கியதற்காக
பரிந்துரைக்கப்பட்டது: சிறந்த நடிகர் - சார்ல்ட்டொன் ஹெஸ்டொன்
வாப்டா விருது தொகு
வென்ற விருது: சிறந்த திரைப்படம் - வில்லியம் வைலர்,இயக்குனர்
என்.வை.எப்.சி.சி.விருது தொகு
வென்ற விருது: சிறந்த திரைப்படம் -சாம் ஷிம்பலிஸ்ட்,தயாரிப்பாளர்
டி.ஜி.எ விருது தொகு
வென்ற விருது': சிறந்த இயக்குனர் - வில்லியம் வைலர்
கிராமி விருது தொகு
பரிந்துரைக்கப்பட்டது: சிறந்த இசையமைப்பு - மைக்லோஸ் ரோசா


Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"