சைத்தானின் ஓவியம்

 




#சைத்தானின்_ஓவியம் 

#ரா_பிரபு

அது ஒரு புகழ் பெற்ற ஓவிய பள்ளியின் கொஞ்சம் பெரிய சைஸ் ஹால்.
அங்கே குழுமி இருந்த மாணவர்கள் பேசி கொண்டிருந்த 1000 கணக்கான பேச்சுகள் காற்றில் மோதி மோதி ஒரு புரியாத பேர் இரைச்சல் ஐ மழை போல் அந்த ஹாலில் பொழிந்து கொண்டு இருந்தது. 
ஆனால் சில நிமிடங்கள் கழித்து  தீடீரென அந்த மழை நின்று பேர் அமைதி தாக்கியது அதற்கு காரணம் அந்த வல்லமை பொருந்திய தலைமை ஆசிரியரின் வருகை.. 

சண்முக நாதன் நடையில் ஒரு ஆளுமை இருந்தது வெள்ளை வேட்டி சட்டையில் ஒரு நடமாடும் மேகம் போல நடந்து வந்து மைக் முன்னாள் நின்றார்.

" மாணவர்களே வர போகும் மாநில அளவிலான ஓவிய போட்டிக்கு நம் பள்ளியில் இருந்து இரு ஓவியர்களை நான் தேர்ந்தெடுத்து இருந்தேன். ஒருவன் ரவி இனொருவன் பிஜு.
அவர்களுக்கு நான் இறுதி சோதனையாக கடந்த வெள்ளி அன்று ஆளுக்கு ஒரு தலைப்பு கொடுத்திருந்தேன் ரவிக்கு செல்ஃப் போர்ட்ரைட் எனப்படும் தன்னை தானே வரையும் போட்டி மற்றும் பிஜுவிற்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சைத்தானின் உருவத்தை அவன் கற்பனை பண்ணும் விதத்தில் வரைய சொல்லி இருந்தேன் இப்பொழுது அவர்கள் வரைந்த அந்த இரு ஓவியத்தை உங்கள் முன்னால் காட்ட இருக்கிறேன் முதலில் ரவி மேடைக்கு வரட்டும் "

அது 1990 ஆம் ஆண்டு வாத்தியார்கள் சர்வ வல்லமை பொருந்தியவர்கள் மாணவர்களிடம் சண்முக நாதன் ஒரு வித கண்டிப்பும் பயத்தையும் உண்டாக்கி வைத்து இருந்தார்.
ரவியின் நடையிலேயே அது வெளி பட்டது. அந்த மேடை இன்னும் கட்ட படாமல் சிமெண்ட் அரை குறை பூச்சுகளுடன் கம்பிகள் நீட்டிக் கொண்டு தெரிந்தது ரவி சற்றே தடுமாற்றத்துடன் ஏறி நடந்து மேடைக்கு செல்ல

"பாத்து வா பா வழியில் மைக் ஓயர்கள்... " என்றார் சண்முக நாதன்..

ரவி மேடை ஏறி தான் கொண்டு வந்திருந்த பெரிய சைஸ் சதுரமான பார்சலை பிரித்து அந்த ஓவியத்தை எடுத்து மாணவர்கள் முன் காட்டினான் அச்சு அசல் அப்படியே ரவி தன்னைத்தானே வரைந்து இருந்ததால் மாணவர்கள் கரகோஷம் ஹாலில் பேரிச்சல் சில்லறையை இறைத்தது.

" ரொம்ப அட்டகாசமாக வரைந்து இருக்கிற ரவி நான் எதிர்பார்த்ததை விடவும் மிகவும்  தத்ரூபமாக இருக்கிறது மிகவும் அருமை" என்று கைதடியது அந்த வெண்மேகம்.

 சண்முக நாதனிடம் பாராட்டு என்பது வசிஷ்டர் கையில் இருந்து பிரமரிஷி பட்டம் பெறுவது போல ரவி பயங்கர புளங்காகிதத்துடன்  இறங்கி சென்றான். 

"இப்போது பிஜு தன் படைப்பை காட்டடும்."

மாணவர்களுக்கும் கூடியிருந்த ஆசிரியர்களுக்கும் இப்பொழுது எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே கூடி இருந்தது காரணம் சைத்தான்  ஓவியம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க அனைவருக்கும் ஒரு ஆர்வம்.

பிஜு மேடை ஏறும் போது இன்னும் பயங்கர தயக்கம் கொண்டான் கண்களில் என்ன அது பயமா தயக்கமா... 

'சார் நீங்க சொன்ன தலைப்பு ..வந்து எனக்கு கொடுத்தது.....அது... " 

'' என்னப்பா உனக்கு கொடுத்த தலைப்புக்கு என்ன.. ? சைத்தான் உருவம் உன் கற்பனையில் வரைய சொல்லி இருந்தேன் அவளோ தானே.. "

பிஜு தனது ஓவியத்தை பிரித்து காட்டிய போது சண்முக நாதன் முகம் கோவத்தில் கொதித்தது.

" ஏண்டா யாருக்கு என்ன தலைப்பு கொடுத்தேன் னு ஒழுங்கா கவனிக்களையா... "

பிஜு காட்டிய ஓவியத்தில் அவனும் தன்னை தானே தான் வரைந்து கொண்டு வந்து இருந்தான்.

இப்பொழுது தலைமையாசிரியர் அது ஒரு ஹால் என்பதை மறந்தார் தனது வழக்கமான சர்வாதிகாரத்தனத்திற்குள் புகுந்தார்.

" உன்ன மாதிரி மட சாம்பிராணியை   வச்சுட்டு மாநில அளவில் எங்கடா ஜெயிக்கிறது... தீனி பண்டாரம் தீனி பண்டாரம்..."

அவனை அங்கேயே அடிக்க பாய்ந்தார்.. மாணவர்கள் இப்போது பிஜுவை பார்த்து கேலி சிரிப்பு சிரிக்க ...பிஜு கண்ணில் என்ன அது கோவமா பாவமா...மீண்டும் குழப்பம்..

அப்போது தான் அது நடந்தது.....

சண்முக நாதன் பிஜு நோக்கி பாய்ந்த போது..கீழே கருப்பு பாம்பாய் சுருண்டு கிடந்த மைக் வயர் காலை தடுக்க ... திடீரென அறுபட்ட வாழை மரம் போல மேடையில் இருந்து.. குறிப்பிட்ட கோணத்தில் தடுமாறி சுழன்று கீழே விழ அந்த புதிய சிமெண்ட் மேடையில் நீட்டி  கொண்டிருந்த இரும்பு கம்பிகள்.. 3 இடத்தில் சண்முக நாதன் உடலை கிழித்து ஊடுருவ.. அவர் உடலின் முக்கிய பாகங்களை துளைத்து கொண்டு நுழைந்த கருப்பு கம்பிகள்.. பின்னாடி சிகப்பு நிறத்தில் வெளி பட்டது... சண்முக நாதன் ஹாஆக்... என்று ஒரு பெருமூச்சு விட ஒரு முறை ஸ்லோ மோஷனில் அவர் உடல் துடித்து விட்டு உயிரை விட்டது.  2 வினாடி அமைதிக்கு பின்.. அந்த மொத்த ஹாலும் திடீரென கூச்சலில் வெடித்து சிதறியது.... பிஜு அப்படியே மயங்கி சரிந்தான்.

       👹    👹    👹   👹

கண்விழித்த பொழுது பிஜு அந்த ஹாஸ்பிடலில் இருந்தான்.அறை நடுவே தலைக்கு மேலே ஒரு பழைய ஃபேன் தனக்குத் தெரிந்த ஒரே ராகத்தில்  டடக் டக் டடக் டக் என்று ஆடிய படி சுற்றிக் கொண்டிருந்தது. 

கண் விழித்து போது அப்பா கதிர்வேல் இருக்க கண்டான்..

"அய்யோ எண்ணப்பா ஆச்சு உனக்கு இப்போ எப்படி பா இருக்கு ...'' என அப்பா அழுது  கொண்டு ஓடி..வந்து...அவனை... அரவணைத்து...என...இப்படி எதிர்பார்த்து இருந்த பிஜுக்கு ஏமாற்றம் ..

"சனியனே.. எல்லாம் உன்னால தான் சொல்றதை ஒழுங்கா காது கொடுத்து கேட்க கூட மாட்டியா... இப்போ உன்னால ஒரு ஆசிரியர் உயிரே போயிடிச்சி தெரியுமா  " என கோவதில் கத்த தொடங்கி இருந்தார் கதிர் வேலன்...

பிஜு உடலில் பொறுத்த பட்டு இருந்த இதய துடிப்பு கண்காணிப்பு கருவி திடீர் வேகம் எடுத்தது.
இப்போ பிஜு அந்த மயான அமைதிக்கு சென்றான். கண்ணை மூடினான் டிக் டிக் டிக் டிக் நான்கு வினாடிகளுக்கு பின் மெல்ல கண்ணை திறந்தான் மேலே சுழன்று கொன்டு இருந்த மின் விசிரியை உற்று பார்த்தான்..

டடக்...டடக்... டடக்...

உற்று பார்த்தான்..

டடக் ட..டக்.. டக்... விசிறி அப்படியே வீடியோ வை பாஸ் போட்டது போல திடீரென நின்றது..பின் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் கழன்று கதிர்வேல் மண்டையில் சொத் என விழ மண்டைக்குள் இருந்து வேள்ளை மூளை ரத்தத்துடன் கலந்து ஒரு சைடாக ஒழுக... கொடூரமாக பிளந்த மண்டையுடன் சரிந்தார் கதிர்வேல்..

பிஜுவின் கண்களில் என்ன அது கோவமா பாவமா.. இல்லை இல்லை உற்று பார்த்தால் கொடூரம் என்பது புரிந்தது..
இப்போது அவன் கண்கள் அமானுஸ்யமாக மெல்லிய நீல நிறத்தில் மின்னியது.. உதட்டில் மெதுவாக அந்த குரூர புன்னகை பிறக்க ..வாய்க்குள் மெல்ல உச்சரித்தான்..

" நான் சரியா தான் வரைந்து இருந்தேன் உங்களுக்கு புரியலைனா நான் என்ன பண்றது அற்ப மனிதர்களே...."

  முற்றும்.👹







Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"