பாவு பஜ்ஜி
"பாவு பஜ்ஜி "
(சிறு கதை )
ரா.பிரபு
அந்த fz பைக் பள்ளிக்கரணை' ஜயச்சந்திரா ' வை கடந்து டிராபிக் இல் நுழைந்த போது ..
"ஏய் சஞ்சனா "என்று அழைத்தான் பைக் ஓட்டி கொண்டு இருந்த தர்ஷன் .
. கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல அவன் குரல் ஹெல்மட்டுக்குள் இருந்து அமுங்கி கேட்டது.
பின்னால் அமர்ந்து இருந்த அந்த அழகிய சஞ்சனா ''என்னடா ''என்றாள் பைக் கண்ணாடியில் அவன் முகத்தை நோக்கிக்கொண்டு
"அங்கே பாரேன் "
அவன் காட்டிய இடத்தில் ஒரு பெரியவர் பிளாட்பாரத்தில் கடை விரித்து இருந்தார்..வண்ண வண்ணமான பல வடிவ செருப்புகள்...
"செருப்பு பழசு ஆயிடுச்சி வேற எடுக்கணும் னு சொன்னியே நிறுத்தவா... " என்றான் தர்ஸன்.
அவன் கேட்டு 10 வினாடிகள் ஆகியும் அவன் காதலியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. 'காதில் விழ வில்லையோ ஒரு வேளை '
தர்ஸன் அந்த கேள்வியை மீண்டும் சத்தமாக தொடர்ந்தான்..
"சஞ்சனா உன் செருப்பு பழசு ஆயிடுச்சி வேற எடுக்.........."
"ஒன்னும் வேணாம் கிளம்புங்கள் '' என்றாள் பாதியில் சஞ்சனா...
அவள் தானே கேட்டால் இப்போ வாங்கி தரேன் என்றால் ஏன் இப்படி வெடுக்கென.....
தர்சன் புரியாமல் fz ஐ முருக்கினான்.
வண்டி ஆயில் மில் ஸ்டாப்பிங் தாண்டி.. இடது புறம் காமாட்சி ஹாஸ்ப்பிட்டல் வேடிக்கை பார்த்து கொண்டு பள்ளிக்கரணை பாலம் ஏறி இறங்கி இப்போது இடது புறம் 1லட்சம் லிட்டர் பிரமாண்ட அந்த டேங்க் ஐ வேடிக்கை பார்த்து கொண்டு வண்டியை செலுத்தினான் .
.வேளசேரி நெருங்கி கொண்டு இருக்க வலது புறம் வரிசையாக தெரிந்த வழியோர கடைகளில் ஒன்றை கவனித்தான்..
"ஏய் சஞ்சனா ட்ரெஸ் எடுக்கணும் னு சொன்னியே அங்கே நிறுத்தவா...."
சொல்லி விட்டு கண்ணாடியில் பின்னாடி தெரிந்த அவள் முகம் பார்க்க அதில் கோவம் பிரதிபலிப்பதை கண்டான்...
"ஏண்டா எனக்கு எல்லா பொருளும் பிளாட்பாரத்தில் தான் வாங்கி தருவியா..."
"ஓ இதான் உன் திடீர் கோவதுக்கு காரணமா செல்லம்.. ஹா ஹா "
"என்னடா சிரிக்கிற... ஏன் போற வழி ல தானே வேளச்சேரி ல கிராண்ட் மால் இருக்கு... ஏன் இன்னும் கொஞ்சம் தூரத்துல பீனிக்ஸ் மால் இருக்கு அங்கே எல்லாம் போலாம் இல்ல இங்க பிளாட்பாரம் தான் உன் கண்ணுக்கு தெரியுதா " என்றாள்
"ஏய் அதுக்கு இல்லடி இங்க பொருல்லாம் சீப் அண்ட் பெஸ்ட் ஆ கிடைக்கும் அதான் சொன்னேன் " தர்ஸன் சொல்ல
"கடுப்பு ஏத்தாதடா எனக்கு னு ஒரு டீசன்சி இருக்கு எனக்கு னு ஒரு வேல்யூ இருக்கு இங்க எல்லாம் என்னால பொருள் வாங்க முடியாது ஓகே.வா ஒழுங்கா பீனிக்ஸ் மால் ல நிறுத்து...போ..."
ஓகே ஓகே பேபி ...எதுக்கு சண்டை விடு "என்று தர்ஸன் வெள்ளை கொடி க்கு மாறினான் ..
வண்டி வேளச்சேரி பாலம் தாண்டி வரிசையாக கஜானா ..ஜாய் அலுகாஸ் மலபார் கோலடு..GRT.. தனிஸ்க் எல்லாம் கடந்து... (அடே எப்பா நகை கடை மட்டும் 7..8 இருக்கே.. வேளச்சேரில என நினைத்து கொண்டே...) இடது புறம் குளம் தாண்டி... குருநானக் காலேஜ் அருகே டிராபிக் சிக்னலில் இடது புறம் திருப்பினான் இப்போது சாலையில் இடது புறம்.... பீனிக்ஸ் மால் கண்ணுக்கு தெரிய தொடங்கியது..
தர்ஸன் வண்டியை அதன் பார்க்கிங் நோக்கி திருப்ப பார்க்க...
"ஏய்...ஏய் ஏய்... ஒரு நிமிஷம் டா நேரா போயென்... " என்றாள் சஞ்சனா.. பள்ளி முடிந்து வரும் போது அழைத்து செல்ல வரும் அம்மாவை பார்த்த சிறு பிள்ளையின் சந்தோசம் தெரிந்தது அவள் குரலில்...
"அங்கே... அங்கே நிறுத்தேன். "
அவள் காட்டிய இடத்தில் ஒரு தள்ளுவண்டி கடையில் சுண்டல் மற்றும் இதர ஸ்னாக்ஸ் வகைகள் இருந்தது...
ஏற்கனவே இவளை போல நவநாகரிக மங்கைகள் ஒரு 3 பேர் ஓரமாய் நின்று தட்டை கையில் ஏந்தி தலா ஒரு பாய் பிரண்டோடு புல் கட்டு கட்டி கொண்டு இருந்தார்கள்.
" அன்னைக்கு நானும் என் பிரண்டு... மாலினியும் இங்க தான் பாவு பஜ்ஜி சாப்பிட்டோம் செம டேஸ்ட் டா.. அப்புறம் பேல் பூரியும் குறை சொல்ல முடியாது.. காளான் மசாலா பாத்தாவே நாக்கு ஊறுது பாரேன்.. இன்னைக்கு மசாலா கார்ன் வாங்கி கொடேன் உனக்கு சனா மசாலா சொல்லட்டா...இல்ல வெறும் சமோசா ஓகே வா...வாட் அபவுட் பஜ்ஜி.........."
அவள் பேசி கொண்டே போக அவள் காட்டிய கடையில் சாலையின் அனைத்து தூசும் அழுகும் காற்றில் பறந்து வந்து அகல பாத்திரத்தில் ஆவி பறந்து கொண்டு இருந்த சனாவின் ஐக்கியம் ஆகி கொண்டு இருந்தது. மட்டமான மாவில் செய்யய பட்டு மிக மட்டமான எண்ணெயில் பொறிக்க பட்ட பஜ்ஜிகள் சிகப்பாக பளபளத்தது.
கடைக்காரர் வியர்வை ஊறிய தன் இடுப்பை சொரிந்து விட்டு அந்த கையால் அடுத்த ரவுண்ட் போண்டா போட தயாராகி கொண்டு இருந்தார்..
தர்ஸன் உள்ளுக்குள் சிரித்து கொண்டு அவளை பார்க்க ...காற்றில் அவள் அணிந்து இருந்த துப்பட்டா பறந்து கொண்டு இருந்தது..
கூடவே சேர்ந்து...
அவள் சொன்ன டீசன்சியும்.....
Comments
Post a Comment