"தஞ்சை பெரிய கோவில்.. ஒரு அசாத்திய கட்டிடம்."




தஞ்சை பெரிய கோவில்

ஒரு அசாத்திய கட்டிடம்.

(கருத்தும் எழுத்தும்:  ரா. பிரபு )

தஞ்சை பெரிய கோவில் பற்றி... அதன் அதிசயங்கள் ஆச்சரியங்கள் பற்றி நாம் அனைவரும் பெரும்பாலும் அறிந்தது தான் என்றாலும் சில நுணுக்கமான உண்மைகளை வரலாற்றை எத்தனை முறை படித்தாலும் சலிக்காமல் பிரமிக்க தோன்றுகிறது..

'பொன்னியின் செல்வன் 'நாவலின் கதாநாயகன் அருள்மொழி சோழன்.... அதாவது நம்ம ராஜராஜ சோழன்....கிபி 1010 இல் காவேரி சமவெளி பகுதிகளில் அந்த அதிசயத்தை கட்டிய போது அந்த காலகட்டத்தில் மக்கள் இது போன்ற ஒன்றை கண்டிருக்கவில்லை...
அக்காலத்தில் கோவில்கள் 2 அல்லது மூன்று தளத்தை மட்டுமே கொண்டிருந்த போது ராஜ ராஜ சோழன் யாரும் பார்த்திராத வகையில் 15 தளங்களை கொண்டு இதை கட்டி அசத்தினான்.

முதன்மை கோபுரத்தில் பல உயரமான கோபுரம் பார்த்திருக்கலாம் ஆனால் விமான கோபுரம் இவ்வளவு உயரமாக கட்ட பட்டதை முதன் முதலாக மக்கள் பார்த்து ரசித்து அதிசயித்தார்கள்.

அந்த காலகட்டத்தில் கட்டப்பட்ட மற்ற கோவில்களை காட்டிலும் கிட்ட தட்ட 40 மடங்கு பெரியதாக இருந்தது தஞ்சை பெரிய கோவில்.

முதல் முதலில் ராஜராஜன் அதற்கு வைத்த பெயர் "ராஜராஜேஸ்ஸரம்..."
அது ப்ரஹதீஸ்வரர் கோவில் என அழைக்க பட்டது பிற்பாடு தான்.

உள்ளே நுழையும் போது முதலில் ஒரு வித்தியாசமான விஷயத்தை நாம் கவனிக்க முடியும் அதாவது அங்கே வியாபித்து இருக்கும் பிரமாண்டம்.
அதாவது அங்கே உள்ள துவரபலகர் சிலை ஆகட்டும் சுவர் அமைப்பு தூண் அமைப்பு ... மற்ற சில சிலைகள் உள்ளே லிங்கம் எல்லாமே சாதாரண அளவுகளில் இருந்து மாறுபட்டு பிராமாண்ட வடிவில் இருப்பதை பார்க்கலாம் .
ஒரு கற்பனைக்கு நாமெல்லாம் ஒரு 10 அல்லது 13 அடி மனிதர்களாக இருந்து  நமக்கு வசதியாக ஒரு கோவில் கட்டினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் அதன் வடிவமைப்பு.

உள்ளே போகும் முன் நம்மை வரவேற்கும் நந்தியே ஒரு பிரமாண்டம் ...மொத்தம் 16 அடி நீளம் 13 அடி உயரம்..மற்றும் ஒரே கல்லால் செதுக்க பட்டது.

இதன் கோபுர வடிவமைப்பு மற்ற சாதாரண கோபுர அமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
சுட்ட செங்கலோ சுண்ணாம்பு கல்லோ மரமோ கோபுர கட்டுமானத்தில் ராஜராஜ சோழன் பயன்படுத்தி இருக்க வில்லை .
முழுக்க முழுக்க நீலம் பாய்ந்த ஒரு வகை சிகப்பு நிற கருங்கல் மட்டுமே பயன்படுத்தினான்.
அந்த கற்கலை ஒன்றோடு ஒன்று இணைக்க இணைப்பு பசை ஏதும் பயன்படுத்த வில்லை என்பது கூடுதல் ஆச்சர்யம்.
(பின்னால் வந்து ஆட்சி செய்த நாயக்கர் மராதாகள் காலகட்டத்தில் சில சிலைகள் சேர்க்கப்பட்டன அதில் காரை வேலை உண்டு )

216 அடி உயரம் கொண்ட இதன் விமான கோபுரம் இந்தியாவின் மிக பெரிய கோவில் களில் ஒன்றாகவும் உலகில் மிக பெரிய கோபுரங்களில் ஒன்றாகவும் இக்கோவிலை மாற்றுகிறது.

முழுக்க முழுக்க கற்களால் ஆனது என்பதால் இதன் எடை எவ்வளவு இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்யலாம்.. இதில் ஒரு கண அடிக்கு கல்லின் எடை சுமார் 70 கிலோ.. மொத்த கோபுரத்தின் எடை 1 லட்சம் டன் ஐ நெருங்குகிறது.

அவ்வளவு எடையை இதன் அடித்தளம் எப்படி தாங்கும்?

இதற்காக குறிப்பிட்ட உயரம் வரை கல்மேடை போன்ற அமைப்பை செய்து பின் அதன் மேல் கோபுரத்தை நிறுத்தினான் மன்னன்.

மேலும் இதன் அடித்தளத்தில் பிரமாண்ட கல் தொட்டி அமைப்பு செய்து அதில் மணல் நிறப்பி  அதன் மேல் கோபுரத்தை நிர்மானிதான்.
மேலே சொன்ன இதன் கல் தொட்டி அடித்தளம் ஒரு தொழில் நுட்பம்....
அதாவது பூகம்பம் வரும் போது கொஞ்சம் அசைந்து கொடுத்து எந்த பாதிபிற்க்கும் ஆளாகமல் தப்பிக்கும் ஒரு அற்புத யுக்தி.

இது கட்ட பட்டு 1000 ஆண்டு கடந்த நிலையில் மொத்தம் 6 பூகம்பங்களை எந்த பாதிப்பும் இல்லாமல் இது சந்தித்திருக்கிறது என்பது இதன் தொழில் நுட்பதை பறைசாற்றும் வெற்றி வரலாறு.

இதன் மேலே என்முக வடிவ தண்டு மற்றும் கலசம் எல்லாம் இருப்பதை பார்க்கலாம்.
அந்த எண்கோண வடிவ அமைப்பு ஒரே கல்லா அல்லது ஒட்ட பட்டதா என்பதில் சர்ச்சை உள்ளது ஆனால் அதன் எடை மட்டும் ஆச்சர்ய படுத்தும் வகையில் கிட்ட தட்ட 81 டன் .
அதாவது அந்த கோபுர உச்சியில் ஒரே நேரத்தில் மொத்தம் 13 ஆப்ரிக்க யானைகள் ஒன்று சேர்ந்து ஏறி நிற்பதற்கு சமம்.

அந்த கல்லை மேலே கொண்டு போய் நிர்மாணிக்க தூரத்தில் சாரபள்ளம் என்ற இடத்தில் இருந்து மண்ணை தோண்டி கொட்டி வந்து சரிவு உண்டு பண்ணி அதில் யானைகளை கொண்டு இதை இழுத்து வந்து சாதித்த வரலாறு நாம் அனைவரும் அறிந்ததே.

உள்ளே நடுவே உள்ள கருவறை 11 அடி கனமான சுவர் நம்மை மீண்டும் ஆச்சார்ய படுத்துகிறது ..
(அணுக்கதிர் போன்ற கதிர்வீச்சு சக்தி  கையாள படும் இடங்களில் மட்டும் தான் இப்படி கனமான சுவர்களை காண முடியும் )
நடுவே உள்ள சிவ லிங்கம் 13ஆடி உயரம்...மீண்டும் பிரமாண்டம்.

படையெடுக்கும் யாளி சிலைகள்...
உள்சுவரில் 108 நடன வகைகளை குறிக்கும் சிற்பம்..பற்றி...
கோபுரத்தில் பயன்படுத்த பட்ட கற்கள் அந்த சமவெளியில் கிடைக்க கூடியது அல்ல அதை எங்கே இருந்து கொண்டுவந்தான் அவ்வளவு எடையை எப்படி நகர்த்தி இடம்பெயர்தான் என்பதை பற்றி.....
என்று இதன் சிறப்புகளை இன்னும் நுணுக்கமாக நிறைய சொல்லி கொண்டே போகலாம்.

இந்த மொத்த அதிசயத்தை வெறும் ஏழு ஆண்டுகளில் கட்டி முடித்தான் என்பது அடுத்த அதிசயம்.

அந்த கோவிலிலேயே கிட்டத்தட்ட 85 கல்வெட்டுகள் நமக்கு கிடைத்துள்ளது அதை கொண்டு பல தகவல்களை நாம் அறிய முடிகிறது . கோவிலில் 50 கும் மேற்பட்ட இசை களைஞர்கள் இருந்தது...
400 ஆடல் அழகிகள் அவர்களது விலாசங்கள் ... இப்படி நிறைய தகவல்கள்......

பொறியியளின் கட்டுமான குறைபாட்டால் சாய்ந்து கொண்டு வரும் ஒரு கோபுரத்தை உலக அதிசயம் என்கிறோம். ஆயிரம் ஆண்டுகளாக நிமிர்ந்து நிற்பது தானே உண்மையான அதிசயம். வெளிநாட்டு ஆய்வாளர்கள் (நல்லவேளை ) இன்னும் போதிய கவனத்தை இந்த கோவில் மேல் செலுத்த வில்லை இல்லை என்றால் இன்னும் ஒரு ஏலியன் கதை உண்டாக்க பட்டிருக்கும்.
ரசவாத கலை முதல் கூடு விட்டு கூடு பாயும் கலை வரை..
கட்டிட கலை முதல் கணித சாத்திரம் வரை புகுந்து விளையாடியவர்கள் நமது
முன்னோர்கள் .

தஞ்சை கோவிலின் கட்டிட ரகசியம் பரம்பரை பரம்பரை வழியாக ரகசியமாக சிலரிடம் வந்த ஒன்று என்று சொல்ல படுகிறது.
இக்கட்டிடம் யாரால் கட்ட பட்டது என்ற சந்தேகத்திற்கு இடமில்லாமல்
இக்கட்டிடத்தை வடிவமைத்த கட்டிட நிபுணர்களின் பெயர்களை ராஜராஜன் பதிவு செய்து வைத்திருக்கிறான்.
அவர்கள் ...
குஞ்சர மல்லன், ராஜராஜப் பெருந்தச்சன் என்ற இருவர்....

ராஜ ராஜன் தனது காலத்தில் இலங்கை மட்டும் அல்லாமல் வடக்கிலும் பல இடங்களை கைப்பற்றியவன் பல பயணம் சென்றவன் அப்படி வடக்கே  சில கோபுரத்தை பார்த்தவன் அதை விட  அட்டகாசமாக ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று தான் இப்படி ஒன்றை கட்டினானாம்.
தீவிர சிவ பக்தனான அவனுக்கு இன்னொரு பெயர் சிவபாதம்.
சோழர்காலத்தில் கட்ட பட்ட பல கோட்டைகளை நாம் தவற விட்டு விட்ட சூழ்நிலையில் இன்றளவும் நம் இடையே இந்த கோவில் இருப்பதில் ராஜ ராஜ சோழன் பங்கு மிக பெரிது காரணம் இதை கட்டியதோடு இல்லாமல்  அதை தொடர்ந்து பராமரிக்கவும் ஒரு பெருந்தொகையை ஒதுக்கினான் அவன்.

செப்டம்பர் 2010 இல் 1000 ஆண்டு பூர்தியாவதை கொண்டாட போஸ்ட் ஸ்டாம்பில் இந்த கோபுரம் இடம் பெற்றது. ஆனால் அதற்கு நீண்ட நாள் முன்பே 1954 இல் ரிசர்வ் பேங்க் 1000 ரூபாய் தாளில் இதை வெளியிட்டது.
(இபோதைய 1000 மற்றும் 500 தாள்களுக்கு ஏற்பட்ட டீமானிட்ரேஷன் சூழல் போல இந்திரா காந்தி காலத்தில் ஏற்பட்ட டீமானிட்ரெஷனின் போது அவைகள் செல்லாமல் போயின)
கூடிய விரைவில் வரவிருக்கும் 1000 ரூபாய் நாணயத்தில் இந்த கோபுரம் இடம் பெற்று அசத்த போகிறது என்பது கூடுதல் தகவல்..

பின் குறிப்பு:

ராஜ ராஜன் தனது கால கட்டத்தில் உலகில் மூன்றாவது பெரும் படையையும்... உலகில் முதலாவது பெரிய யானை படையையும் கொண்டிருந்தானாம்.
நினைத்து பார்த்தாலே நம்மை ஆச்சர்ய படுத்தி பெருமை கொள்ள செய்யும் ராஜ ராஜனின் கல்லறையின் புகை படத்தை இணையதளத்தில் மறக்காமல் தேடி பாருங்கள் ..
ஒரு மாமன்னனுக்கு நாம் கொடுத்துள்ள மரியாதை புரியும்.


ரா.பிரபு

Comments

  1. 👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"