"எல்லோரா கைலாயநாதர் கோவில் ஒரு சாத்தியம் அற்ற படைப்பு"






எல்லோரா கைலாயநாதர் கோவில்
ஒரு சாத்தியம் அற்ற படைப்பு

(அறிவியல் காதலன் )

கருத்தும் எழுத்தும் : (ரா.பிரபு)

உலகின் பல அதிசயங்களை நாம் வியந்து நோக்கினாலும் நம் அருகே உள்ள அசாத்திய அதிசயங்கள் பலவற்றை இன்னும் நான் உற்று பார்க்க வில்லை என்பதே உண்மை.

அப்படி ஒரு அசாத்திய கட்டிடம் தான் எல்லோரா கைலாஷ் நாதர் கோவில்..

மகாராஷ்டிராவில் அவுரங்காபாத் மாவட்டத்தில் இல் உள்ள எல்லோரா வின் உலக புகழ் பெற்ற குகை கோவில்கள் மொத்தம் 34.
அதில் 16 ஆவது குகை கோவில் இந்த கைலாச நாதர் கோவில்.
இது 8 ஆம் நூற்றாண்டில் முதலாவது கிருஷ்ணா மன்னனால் கட்டப்பட்டது.

ஒரு முழு மலைபாறையை  அப்படியே குடைந்து முழு கோவிலும் செதுக்க பட்ட ஒரு அற்புத கோவில் இது.
வழக்கமான சிற்ப வேலைகள் போல முன் புறமாக இல்லாமல் மலை உச்சி தொடங்கி தலையிலிருந்து குடைந்து குடைந்து முழு கோவில் வெட்ட பட்டுள்ளது.

ஒரு சிக்கலான அமைப்பை ஒரே கல்லில் செதுக்கி இருந்தால் நாம் எவ்வளவு ஆச்சர்ய படுவோம். இவ்வளவு பெரிய ஒரு கட்டிட அமைப்பு..
சுற்றி பிரகாரம்...
 தூண்கள்....
சுவற்றில் சிற்ப வேலைபாடு...
ஒரு இணைப்பு பாலம் ...
அங்கங்கே பால்கனி அமைப்பு...
படிக்கட்டுகள் ....
பல நுணுக்கமான சிற்பங்கள்...
நடுவில் லிங்கம்....
அடியில் பல குகைகள்......
இதை எல்லாம் கொண்ட ஒரு மொத்த கோவிலை ஒரே பாறையில் மேலெ இருந்து குடைந்து உருவாக்குவது என்பது எவ்வளவு ஆச்சர்யமான அசாத்தியமான விஷயம்?

ஆயிரம் வருடத்திற்கு முன் நம்மிடம் இருந்த கருவிகள் உளி ..சுத்தி ... கோடாலி .. இப்படி தான். இதை வைத்து ஒரு மலையில் ஒரு கோவிலை வார்த்து எடுத்தவன் எவ்வளவு பெரிய உழைப்பளியாக இருப்பான் .

அதை செதுகியவன் எவ்வளவு  திறமை வாய்ந்த சிற்பியாக இருப்பான்.

அதை மேற்பார்வை இட்டு திட்டமிட்டு வடிவமைத்த பொறியாளனின் அறிவு கூர்மை எப்படி பட்டது?
எப்படி பட்ட திறமை வாய்ந்த மனிதர்கள் இந்த நாட்டில் நடை போட்டு இருப்பார்கள் என்பதை எண்ணி பெருமை யுடன் கூடிய ஆச்சர்யம் அடையலாம்.

சரி, ஏதோ மிக நல்ல திறமை வாய்ந்தவர்களை கொண்டு இப்படி பட்ட கட்டிடங்களை வடிவமித்து இருப்பார்கள் போல என ஒரு வழியாக நாம் ஆறுதல் அடையலாம் .

ஆனால்........

கொஞ்சமும் சாத்தியம் அற்ற பல சாத்திய கூறை எல்லோராவின் கைலாஷ் நாத் கோவில் கொண்டிருப்பது தான் நமது புருவத்தை உயர்த்தி நம்மை ஆச்சர்யதில் ஆழ்த்துகிறது.

அதை செய்தவர்கள் மொத்தம் 18 வருடத்தில் இதை செய்திருக்கிறார்கள் அன்றைய தொழில் நுட்பத்தை கொண்டு.
கோவிலை ஆராய்ந்து பார்த்த ஆய்வாளர்கள் கருத்து படி இன்றைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதை செய்வது என்றால் கூட அப்படி பட்ட ஒரு கோவிலை முழுமையாக மலையில் வெட்டி உண்டாக்குவதற்கு கிட்ட தட்ட ஒரு நூற்றாண்டு ஆகும் என்கிறார்கள்.
இதை அக்கால மனிதன் 1000 வருடத்திற்கு முன் உளி ,சுத்தி வெட்டு கருவியை கொண்டு வெறும் 18 ஆண்டுகளில் சாதித்தது எப்படி?
ஆய்வாளர்களிடையே யூகமாக கூட பதில் இல்லை.

அந்த மொத்த மலையின் பரப்பு ... அதில் அந்த கோவிலின் பருமனை கழித்து விட்டு மீதி இடத்தை கணக்கிட்ட ஆய்வாளர்கள் அந்த கோவிலை செய்து முடிக்க மொத்தம் 4 லட்சம் டன் பாறையை வெட்டி அப்புற படுத்தி இருப்பதாக கணக்கிட்டு இருக்கிறார்கள்.

ஒரு கணக்கு படி மொத்த தொழிலாளர்களும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் இடையில் இடைவேளை இன்றி வெட்டி எடுத்தாலும் கணக்கு படி ஒரு நாளைக்கு கிட்ட தட்ட 60....65 டன் பாறைகளை தொடர்ந்து அப்புற படுத்தி இருக்க வேண்டும்.
இது அக்கால மனிதர்களுக்கு சாத்திய பட்டது எவ்வாறு??

அடுத்த ஆச்சர்யம் வெளியேற்ற பட்ட அந்த மொத்தம் 4லட்சம் டன் பாறைகள் எங்கே...?
சுற்று வட்டாரத்தில் அதை எங்கேயும் கொட்டி இருப்பதற்கோ அல்லது வேறு விதமாக வேறு கட்டிடம் கட்ட பயன்படுத்தி இருப்பதற்காகவோ எந்த அறிகுறியும் இல்லை..
அவ்வளவு பாறைகளை முற்றிலும் தடயம் தெரியாமல் மாயமாக்கியது  எப்படி?

ஒரு யூக அடிப்படையில் ஆய்வாளர்கள் இதற்கு விடை வைத்திருக்கிறார்கள்.
பஹ்மாஷ்திரம் என்ற ஒரு கருவியை பற்றி வேதத்தில் குறிப்பு இருப்பது அவர்கள் கவனத்தை ஈர்த்தது .
மலைகளை பாறைகளை ஆவியாக்கும் வலிமை அந்த அஷ்த்திரத்துக்கு இருப்பதாக வர்ணிக்க பட்டுள்ளது.
அப்படி ஏதாவது கருவி இருந்தால் அதை கொண்டு மட்டும் தான் இவ்வளவு பாறை களை ஆவி ஆக்கி இருக்க முடியும் என நம்புகிறார்கள் ஆய்வாளர்கள்.

அந்த கோவிலில் அடியில் உள்ள விடை தெரியாத பல மர்ம சுரங்கள் ஏன் எதற்கு வெட்ட பட்டன என்ற சந்தேகம் இன்னும் நம்மை குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
ஆய்வாளர் சிலர் கருத்து படி இது வெற்றுகிரக வாசி களின் பதுங்கும் இடமாக இருந்திருக்கலாம் என்கிறார்கள்.

மற்ற குகை கோவிலில் இருந்து மாறு பட்டு இது வானில் இருந்து பார்த்தால் தெரியும் படி வடிவமைக்க பட்டது...ஏன்?
அதில் ஒரு சிற்ப அமைப்பை மேலே இருந்து பார்த்தால் x குறியீடு தெரிவது இதெல்லாம் தற்செயலானதா அல்லது காரணக்காரியம் உடையதா அதை அவர்கள் அப்படி  செய்தது ஏன்? என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

மேலும் அந்த கட்டிடத்தை உற்று நோக்கிய சில ஆய்வாளர்கள் அதில் சில அமைப்பை (உதாரணம் அந்த இணைப்பு பாலம் அதற்கு கீழே உள்ள தூண் சிற்பங்கள் ) உற்று நோக்கும் போது அதை முதலில் மேலே இருந்து செதுக்கி பின் கீழே உள்ள வற்றை செதுக்கி இருக்க முடியாது .
இதை மொத்தமாக கீழ் இருந்து மேல் நோக்கி செதுக்கி கொண்டு போனால் தான் அது சாத்தியம் என்கிறார்கள்.
இந்த கட்டிட அமைப்பே கண்டிப்பாக மனித சக்தியால் படைக்க பட்டதாக இருக்க முடியாது என்று அடித்து சொல்லிகிறார்கள்.

இப்படி அந்த கோவில் குறித்த ஆச்சரியங்கள் இன்னும் நிறைய நிறைய தொடர்கிறது.

பல மர்மங்களை தாங்கி அமைதியாக அருள் பாலிக்கிறார் எல்லோரா கைலாய நாதர் கோவிலில் .... சிவன் எனும் வேற்று கிரக வாசி(?!)

_அறிவியல் காதலன் : ரா.பிரபு_

Comments

  1. 👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"