"டாவின்சியின் விசித்திர கண்டுபிடிப்புகள்''



 ''டாவின்சியின் விசித்திர கண்டுபிடிப்புகள்."

⚛ அறிவியல்.காதலன்
     ரா.பிரபு ⚛

மோனாலிஸாவின் மோகன புன்னகையை உலகத்திற்கு வழங்கிய லியரண்டோ டாவின்சியை நமக்கு ஒரு ஓவியர் என்கிற வகையில் தான் அதிகம் தெரியும் ஆனால் அவர் ஒரு பன்முக திறமையும் பல துறைகளில் ஆர்வமும் கொண்ட ஒரு மனிதர்.

அவர் ஒரு கட்டிட கலை நிபுணர் கூடவே பொறியியளில் அதிகம் ஆர்வம் கொண்டவர்,கூடவே சிற்பக்கலை கட்டிட கலை, ஓவியம் போன்றவற்றில் திறமை வாய்ந்தவர்.
அறிவியல் ,இசை,கணிதம்,இலக்கியம்,புவியியல்,வானசாஸ்திரம்,தாவரவியல் வரலாறு போன்றவைகளில் ஈர்ப்பு உண்டு. அவர் ஒரு எழுத்தாளர் கூட..
இவைகளை தாண்டி பல கண்டுபிடிப்புகளை கொடுத்த விஞ்ஞானியும் கூட..
எதிரிநாட்டு வீரர்களை வீழ்த்த தனது பொறியியல் அறிவை பயன்படுத்தியவர். அவருடைய குறிப்பேடுகளில் நிறைய அநாடமி பற்றிய ஓவியங்களும் குறிப்புகளும் பல பொறியியல் குறிப்புகளும் காண கிடைக்கின்றன.

ஒரு கதை சொல்வார்கள் . அதாவது எதிரிநாட்டு கப்பல் தங்கள் நாட்டை நெருங்கும் போது டாவின்சி தன் நாட்டுக்கு ஒரு கண்டுபிடிப்பை கொடுத்தாராம். அதன்படி எதிரிக்கப்பல் நெருங்கி வர அதை இந்த நாட்டு ரெண்டு சிறு படகுகள் பக்க வாட்டில் இருபுறமும் ஒரே நேரத்தில் நெருங்குமாம்.
 மூன்றும் நேர் கோட்டில் வந்தவுடன் ஒரு மேஜிக் நடக்கும் நடுவில் உள்ள எதிரி கப்பல் சடாரென ஏதோ ராட்சத மீனால் கடித்து இழுக்க பட்டத்தை போல நடுவில் நொறுக்க பட்டு கடலில் உள்ளிழுக்க படுமாம்.
இரு புறமும் உள்ள படகுகள் அடியில் கடலில் தொங்கி கொண்டு வரும் ஒரு மெகாணிசத்தை கொண்டிருக்கும். சரியாக பக்க வாட்டில் நேர்கோட்டில் வந்து இருப்படகுகளும் ஒரு விசையை இயக்கினால் நடுவே உள்ள கருவி விடுபட்டு மேல் நோக்கி பாய்ந்து வந்து அடியில் இருந்து ஒரு ராட்சத சுத்தியை வைத்து தாக்கியதை போல தாக்கி கப்பலை மூழ்கடிக்குமாம்.

இந்த கதை எந்தளவு உண்மை தெரியாது. ஆனால் டவின்சியின் பல விச்சித்திர கண்டுபிடிப்புகளை பற்றி படிக்கும் போது நிச்சயம் அவர் இதை செய்திருக்க கூடியவர் தான் என்றே தோன்றுகிறது.
மோனாலிஸா வின் ஓவியராக மட்டுமே அதிகம் தெரிந்தவர் கண்டுபிடித்த அப்படி பட்ட சில விச்சித்திர  கண்டு பிடிப்புகளை பற்றி வரிசையாக பார்கலாமா?

 ☸ Anemometer : காற்றின் வேகத்தை அளக்கும் கருவி. இதை நாம் நிறைய இடத்தில பார்த்து இருப்போம்.  பக்கவாட்டில் திரும்பிய 4 கிண்ணங்களை எதிரெதிராக பொறுத்த பட்ட ஒரு சுழலும் அமைப்பு தான் காற்றுமானி.
இக்கால அனிமோ மீட்டர்கள் சுழலும் போது அதனுடன் சேர்ந்து சுழலும் படி டைனமோ அமைப்பு இருக்கும். காற்றின் வேகத்திற்கு ஏற்ப்ப மின்சாரம் உற்பத்தி மாறுபடுவதை வைத்து காற்று வீசும் வேகத்தை அளக்க முடியும். இக்காலத்தில் சரிதான் ஆனால் டைனமோ கண்டுபிடிக்க படாத அந்த காலத்தில் (14 ஆம் நூற்றாண்டு ) அவர் இதை வைத்து எப்படி கண்டுபிடித்தார் தெரியுமா ?

சுழலும் வேகத்திற்கேற்றாற்போல அந்த கருவி மேலெழும்பும் படி அமைக்க பட்டிருக்கும். அது மேலே உயரும் இடத்தில ஒரு ஸ்கேல் அமைப்பு பொறிக்க பட்டு இருக்கும் அதில் எவ்வளவு உயர்ந்து உள்ளது என்பதை வைத்து காற்று வீசும் வேகத்தை அறிய முடியும்.

☸  flying machine : பறக்கும் கருவியை இக்காலத்து ஹெலிகாப்டருக்கு முன்பே வடிவமைத்தவர் டாவின்சி. அவருடைய
பறக்கும் வண்டியின் பெயர் "ornithopter"
தனது இந்த கண்டுபிடிப்பு வௌவால் மற்றும் பறவைகளை பார்த்து உண்டாகியதாக அவருடைய நோட்டு குறிப்புகளில் உண்டு.
இந்த கருவியில் ஒரு பெடல் அமைப்பு இருக்கும் விமானி அதை பெடல் செய்ய செய்ய இருபுறமும் 33 அடிக்கு நீண்டு இருக்கும் பட்டுதுணியால் போர்த்த பட்ட ரக்கைகள் பட பட வென அடிக்க தொடங்கும். இந்த அமைப்பு பறந்ததா ?
உயரமான இடத்தில் இருந்து தரை இறங்க இது வெற்றி பெற்றாலும் .. டாவின்சி திட்டமிட்டதை போல தரையில் இருந்து பெடல் பண்ணி வானில் எழுந்து பறக்க முடியவில்லை என்பதால் இந்த திட்டம் 100 சதம் வெற்றி என்று சொல்ல முடியாது.

☸ Aerial screw : இது ஒன்றும் இல்லை இக்கால ஹெலிகாப்டரின் முன்னோடித்தான். ஹெலிகாப்டரின் அதே தொழில் நுட்பத்தை உள்வாங்கி கிட்ட தட்ட அதே தத்துவத்தில் இயங்கும் வண்டி ஒன்றை செய்திருந்தார் டாவின்சி. அதை குறித்து அவர் வர்ணனையில் காற்றை சுழற்றி சுழற்றி மேலெழும்பும் அமைப்பு என்று எழுதி இருப்பது இக்கால ஹெலிகாப்டரை குறிப்பதை போலவே இருபத்து வியப்பு.

இக்கருவி 15 அடி அகலம் கொண்டிருந்தது நடுவில் நாலு பேர் சேர்ந்து ஷாப்ட்டை சுற்ற சுற்ற... மேலே ஒரு காற்றாடி சுற்றும் அதனால் மேல் நோக்கு விசை கிடைக்க பெற்று வண்டி மேலே எழும்பும் இதான் திட்டம். ஆனால் 4 பேர் சேர்ந்து இயக்க வேண்டி இருந்ததால் எடை அதிகமாகி மேலே எழும்பாமல் போனது. ஆனால் பறப்பதற்கு அவர் யோசித்து இருந்த தத்துவம் சரியானது தான் என்பதை நாம் மறக்க கூடாது.

☸ Parachute : பாராசூட்டை 1783 இல் கண்டுபிடித்தவர் sebastien Lenormand என்பவர் ஆனால் அதற்க்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே தனது குறிப்பில் பாரசூட்டை வர்ணித்து விட்டு  இப்படி ஒரு அமைப்பை வைத்து ஒருவன் உயரமான இடத்தில் இருந்து எந்த காயமும் இன்றி குதிக்க முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

☸  33-barreled organ : அகாலத்தில் பயன்படுத்த பட்டு வந்த பீரங்கிகளில் ஒரு மிக பெரிய குறைபாடு இருந்ததை கண்டார் டாவின்சி. அதாவது அது ஒவ்வொரு முறையும் லோட் ஆக எடுத்து கொள்ளும் நேரம். அதை தனது தொழிற்நுட்ப அறிவால் சரி செய்தார். 11 துப்பாக்கி அமைப்பை கொண்ட 3 வரிசையை உண்டாகி வட்டமாக சுழலும் அமைப்பில் பொறுத்தினார் ஒவொரு வரிசையிலும் 11 துப்பாக்கி மொத்தம் 33 துப்பாக்கிகள் ஒரு வரிசை சுட்டு முடித்து லோட் பண்ணும் போது மற்ற வரிசை தொடர்ந்து சுட தொடங்கும். இதன்மூலம் தடை இன்றி தொடர்ச்சியாக சுட முடிந்தது.

☸   armored car  : பீரங்கிகளை சுமந்து செல்லும் இக்காலத்து டேங்க் அமைப்பை போன்ற ஆயுதங்களை தாங்கிய வண்டி ஒன்றை டாவின்சி வடிவமைத்து இருந்தார்.
360 டிகிரி சுழல கூடிய பிளாட்பார அமைப்பில் வரிசையாக பீரங்கிகளை வைத்து கட்டினார். நடுவே கண்காணிக்கும் சேம்பர் கூட இருந்தது.
அந்த வண்டி இயங்க விசை உள்ளே இருக்கும் 8 பேரால் கொடுக்க  பட்டது. அவர்கள் ஷாப்ட்டை சுற்ற சுற்ற
வண்டி இயங்கும்.

☸  giant crossbow : போர் ஆயுதங்களை பொறுத்தவரை டவின்சியின் ஆயுதங்கள் எதிரியை மனோரீதியாக அச்சத்தை ஊடுவதாக அமைந்து இருந்ததாக சொல்வார்கள் அப்படி ஒரு அமைப்புதான்  "giant crossbow. " இது ஒரு ராட்சத வில் இரு பக்கமும் ஆறு ஆறு சக்கரங்கள் பொருத்தப்பட்ட நகரும் அமைப்பின் மேல் பொறுத்த பட்ட ராட்சத வில் அமைப்பு இதை விசையை கூட்ட ஒருவர் அதன் பல்சக்கர அமைப்பை சுற்ற வேண்டும் வில் பின்னோக்கி இழுக்க படும் அதில் பறக்கும் நெருப்பு உருண்டைகளை கூட வைத்து அனுப்பலாம். அம்பு விடுபட விசையை இழுத்து பிடித்து நிறுத்தி வைத்திருக்கும் ஒரு பின் ஐ சுத்தியால் தட்ட வேண்டும்.
போர்க்களத்தில் நிஜமாகவே மிரட்டிய ஒரு கண்டுபிடிப்பு இது.

☸   triple barrel canon :  அந்நாட்டின் மிலிட்டரி என்ஜினீராக இருந்தவர் டாவின்சி ராணுவத்தில் இடப்பெயர்ச்சி என்பது மிக அவசியம் என்று கருத்தை கொண்டிருந்தார். அக்கால பீரங்கிகள் ஒரே இடத்தில் நிலையாக நிலை நிறுத்த பட்டவை மேலும் லோட் செய்ய சிரமமானவை .டாவின்சி இரண்டு குறைகளையும் போக்கினார். பீரங்கிகளை சக்கரம் கொண்ட வண்டிகளாக மாற்றியதோடு இல்லாமல் லோடு செய்வதை எளிமையாக்கினார். அக்காலத்தில் வெடிமருந்து கண்டுபிடிக்க பட்டு இருந்தாலும் அதன்பயன்பாடு மக்கள் அவ்வளவாக அறிந்திருக்க வில்லை. ஆனால் எதிர்காலத்தில் இது தான் அனைவராலும் பயன்படுத்த பட போகிறது என்று அறிந்தவர் போல டாவின்சி தொடர்ந்து வெடிமருந்துகளை தான் பயன்படுத்தினார்.

☸  Clock : கடிகாரத்தை கண்டுபிடித்தவர் டாவின்சி அல்ல ஆனால் அவர் அதை துல்லியமான கடிகாரமாக மாற்றினார். மணிக்கு தனியே நிமிடத்திற்கு தனியே மெகாணிசம் செய்தார். மேலும் அவர் கடிகாரத்தில் அன்ன்னைக்கு உள்ள நிலவின் அமைப்பு காட்டும் அமைப்பும் இருந்தது. ஸ்பிரிங் ஐ இணைத்து கடிகாரத்தின் எடையை குறைத்தார். மேலும் உராய்வு உள்ள பகுதிகளில் விரைவில் தேயாமல் இருக்க மெட்டல் களுக்கு பதிலாக வைரம் போன்ற எளிதில் தேயாத கற்களை பயன்படுத்தினார். இன்றும் தரமான கடிகாரங்களிலில் இதை பின் தொடர்கிறார்கள். நீங்கள் உங்கள் கைகடிகாரங்களில் 12 ஜுவல் 15 ஜுவல் என்றெல்லாம் எழுதி இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அவைகள் எல்லாம் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்களின் எண்ணிக்கை தான்.

☸  Colossus : இது bronze ஆல் செய்ய பட்ட உலோக குதிரை. (Bronze என்பது செம்பு மற்றும் நிக்கல் ,ஜிங்க், அலுமினியம் கலந்த கலவை) அந்நாட்டு அரசன் இந்த உலகத்திலேயே மிக பெரிய  உலோக குதிரை செய்ய பணித்து இருந்தார். எனவே டாவின்சி முதலில் களிமண் குதிரை தயாரித்தார் பிறகு 80 ஆயிரம் கிலோ bronze உலோகம் சேகரித்து வைத்தார். ஆனால் தலைவிதி கொஞ்சம் விளையாடியதில் கடைசியில் அந்த உலோகம் பிரான்ஸ் நாட்டுக்கு பீரங்கி செய்ய தான் பயன்பட்டது.
அந்த பிராஜக்ட் 1977 யில் ஒரு பைலட்டால் மீண்டும் தொடங்க பட்டு 17 ஆண்டுகள் தயாரிக்க பட்டு டாவின்சி வாழ்ந்த இத்தாலியின் மிலன் என்ற ஊர் மக்களுக்கு பரிசளிக்க பட்டது.

☸ Ideal city : டவின்சியின் பன்முக திறமைகள் எல்லாமே ஒரே திட்டத்தில் காட்டினால் எப்படி இருக்கும் அப்படி அவருடைய கட்டிட கலை சிற்ப திறமை கலை அறிவு பொறியியல் அறிவு எல்லாம் சேர்ந்து அவர் செய்த ப்ராஜெக்ட் தான் ideal city .
அவர் வாழ்ந்த மிலன் நகரை பிளேக் நோய் ருத்ர தாண்டவம் ஆடி மூன்றில் ஒரு பங்கு ஆட்களை கொன்று குவித்து இருந்தது அதை தொடர்ந்து இதைவிட மேம்பட்ட நகரத்தை உண்டாக்க எண்ணினார் டாவின்சி .அவர் தீட்டி படி உருவான நகரம் கழிவு நீர் கால்வாய் தொடங்கி கட்டிடங்கள் வரை பல வகைகளில் மேம்பட்டு இருந்தது. பிளேக் தொற்றுக்கு மிலன் நகரின் நெருக்கமான தெருக்கள் முக்கிய காரணம் என உணர்ந்த டாவின்சி இம்முறை அகலமான தெருக்களை வைத்தார். முக்கியமாக குதிரைகள் பராமரிக்க அவர் நகரத்தில் தனி இடம் ஒதுக்க பட்டிருந்தது.

☸ Robotic Knight : பொதுவாக டாவின்சி தயாரிப்புகள் பல புல்லி , சக்கர அமைப்பு, களை கொண்ட ஒரு தானியங்கி தன்மையுடன் திகழ்ந்ததால் அவைகளை ரோபோகளின் முன்னோடிகள் என சொல்வார்கள். ஆனால் அவர் குறிப்பேடுகளில் நிஜமாவே ரோபோ அமைப்பை குறித்து வைத்து இருந்தது ஆசார்யமானது. அதாவது போர் வீரன் உடை அணிந்த சிலை போன்ற அமைப்பு ஒன்று உள்ளுக்குள் ரோப் கள் புல்லி கள் சக்கரங்கள் கொண்டு தானியங்கி தன்மை கொண்டிருந்தது. இந்த மனித அமைப்பு நடக்க நிற்க எட்டி பார்த்து கண்காணிக்க உட்கார கூடியதாக இருந்திருக்கும் என்கிறார்கள்.

☸  self-propelled cart : குதிரைகளை வைத்து வண்டியை இழுத்து கொண்டிருந்த கால கட்டத்தில் குதிரைகள் இல்லாத தானே ஓட கூடிய வண்டியை வடிவமைத்தார். இன்றைய விளையாட்டு பொம்மை காரில் ஸ்பிரிங் வைத்து நாம் ஓட்டுவதை போல தான் அந்த வண்டி ஸ்பிரிங் ஆல் இயங்கக்கூடியதாக இருந்தது. கூடவே ஸ்டியரிங் மற்றும் பிரேக் அமைப்பும் இருந்தது தனி சிறப்பு.

☸ scuba gear : வெனிஸ் இல் வேலை செய்த போது டாவின்சி எதிரி கப்பல்களை நீர் மூழ்கி வீரர்கள் தண்ணீருக்கு அடியில் இருந்து தாக்க சிறப்பு உடையை வடிவமைத்தார். இக்காலத்தில் ஆக்சிஜன் உருளை பொருத்த படுவது போல அக்காலத்தில் அவர் ஒரு டியூபை மிதக்க விட்டார் அது நீரின் மேல் தளம் வரை வந்து அங்கு மிதந்து கொண்டிருக்கும் மணி போன்ற அமைப்புடன் இனைந்து இருக்கும் காற்று மேலே இருந்து டியூப் வழியாக உள்ளே சென்று சேரும்.
மேலும் அந்த உடையில் வால்வு மூலம் கட்டுப்படுத்த கூடிய பலூன் அமைப்பு ஒன்று இருந்தது அது எவ்வளவு ஆழத்தில் மூழ்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் தொழில் நுட்பம். அதில் உள்ள காற்றை வெளியேற்றுவதன்  மூலம் உள்ளே மூழ்க வெளியே வர முடியும்.

☸  Revolving bridge : நீர்நிலைகளில் ஆறுகளில் ராணுவ வீரர்கள் கடந்து செல்ல தளவாடங்களை கொண்டு செல்ல தற்காலிக பாலம் ஒன்றை வடிவமைத்தார் டாவின்சி... அது தேவைப்பட்டால் சுருட்டி கொள்ள கூடிய தேவையான இடத்தில வைத்து பயன்படுத்தி கொள்ள கூடிய தற்காலிக பாலம் .இவைகளும் வழக்கம் போல தான் புல்லிகளும் ரோப்புகளும் கொண்டிருந்தன.

டாவின்சி இருக்கும் திறமைகள் போதாதென்று உடல் கூறு அனாடமியும் பயின்றார். 30 உடற்கூறு பிரேத பரிசோதனியில் கலந்து கொண்டார். வலது கை போலவே இடது கையில் படம் வரைய ...எழுத தெரிந்த விசித்திர மனிதன் இவர். டாவின்சியின் கண்டுபிடிப்புகள் பல அவர் முளையிலேயே தங்கி விட்டு இருக்கலாம். பல அவர் குறிப்பேடுகளில் இன்னும் கருத்து வடிவத்தில் உள்ளது. பலது ஆராய்ச்சிக்கு உட்படுத்த பட்டுள்ளது. தான் குடியேறிய மிலன் நகரத்தின் வளர்ச்சிக்கு டாவின்சி மிக முக்கிய பங்காற்றினார். இத்தாலி அவரை நினைத்து பெருமை கொள்கிறது.

கிட்ட தட்ட இதே போல்..........

மெக்கானிக்கல் , எலக்ட்ரிக்கல், தாவரவியல், இன்ஜினியரிங், கண்டுபிடிப்பாளன் , பிஸ்னஸ்மேன் என்று பல துறையில் பன் முக திறமை கொண்ட மனிதர் நம் ஊரில் ஒருவர் வாழ்ந்தார் அவர் பெயர் ஜி.டி.நாயடு.
நமது நாட்டிற்கு அவரும் பல கண்டுபிடிப்புகளை வழங்கினார். ஆனால் இத்தாலியின் டாவின்சி அளவிற்கு அவருக்கு அங்கீகாரம் அளிக்க பட வில்லை . சரியான இடத்தில் ஜி.டி. நாயடு பிறந்து இருந்தால் உலகம் முழுக்க அவரை பற்றி படித்து கொண்டிருக்கும். அவ்வளவு திறமையும் அறிவு கொண்டவர் ஜி.டி நாயடு அவருடைய அதிசய கண்டுபிடிப்புகள் பற்றி வேறு கட்டுரையில் விரிவாக சொல்கிறேன்.

Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"