இனி இதான் வழி


 #இனி_இதான்_வழி


(சிறுகதை)


#ரா_பிரபு


ஆதி தன் பண்ணை வீட்டின் மாடியில் இருந்து தூர அந்த பெண் செல்வதைப் பார்த்தான் . போதையில் இருந்ததால் பார்வை சற்று மங்கலாக தெரிந்தது.


'பெண் தானே.. அட பெண் தான்.. அதுவும் சின்ன பெண்..' அவன் முகம் ஓநாய் போல மாறியது 'இன்னைக்கு நம்ம போதைக்கு ஊறுகாய் கிடைத்தது விட்டது.'


ஆதி ஒரு பணக்கார வீட்டு பையன் பண்ணை வீடு குடி.. போதை..அவன் பொழுது போக்கு.


ஆதி வீட்டை விட்டு இறங்கி அந்த சிறுமி இருந்த இடத்தை அடைந்த போது வெய்யில் மண்டையை சுட்டது. யாருக்கோ சாப்பாடு கொண்டு போறாள் போல.. இப்போ எனக்கு இவ தான் சாப்பாடு..


"ஏ பாப்பா உன் பெயர் என்ன " ? 


"பா...பாரதி " என்றாள் தயங்கி..


"பாரதி பாப்பா..எந்த வீடு மா...நீ ?" போதை வாசத்துடன் வார்த்தை துப்பினான். அவளை கண்களால் அளவு எடுத்தான்.


அவள் விபரம் சொன்னதும் ..


"ஓ அந்த ஜாதி பொண்ணா நீ...." என்றான் இளகாரமாய்..


"சரி சரி இங்க வா...ம்.. அதோ அந்த பண்ணை வீட்டுக்கு வந்துட்டு போ..."


" அய்யோ நான் சாப்பாடு கொண்டு  போகணும் அண்ணா என்ன விட்டுடுங்க " என்று பயந்த குரலில் சொன்னவள் விறு விறு என நடக்க தொடங்கினாள்.


"ஏய்.....! " என்று காடு அதிரும் படி கத்தினான் ஆதி..


"நான் யார் தெரியுமா... உண்ண இங்கேயே அடிச்சி போட்டா கூட என்ன யாரும் கேட்க முடியாது. சொல்விட்டே இருக்கேன் போயிட்டே இருக்க..நாயே நில்லுடி அந்த வீட்டுக்கு வர போறியா இல்லையா ..." என்று நரம்பு புடைத்தான் .


அவள் நிற்காமல் மேலும் வேகத்தை கூட்டி நடக்க,கண்கள் சிவந்தவன்

ஓடி சென்று அவள் சுமந்து இருந்த சாப்பாடு பாத்திரத்தை தட்டி விட்டான். அவள் காலை தன் முரட்டு காலால் ஒரு இடறு இடறினான்.. அவள் அறுந்த மலர் மாலை போல மண்ணில் துவண்டு விழுந்தாள்.


அவன் அசிங்கமாக பல்லை காட்டி இளித்தான்.


"வீட்டுக்கு கூப்பிட்டா வர மாட்டடியா ரைட் அப்போ அங்கேயே......."


என்று வெறி தனமாக அவள் மேல் பாய்ந்தான்..


அவள் "டே இங்க பாரு... நான் போலீஸ் ல கம்பலயின்ட் கொடுத்து உன்னை கம்பி என்ன வச்சிடுவேன்.." என்றாள்.


ஒரு கணம் திகைத்த ஆதி மதுபோதை, அதிகார போது ஆணவ போதை ,உயர் ஜாதி போதை என்று பல போதையால் மூளை இழந்து இருந்தான்.


"ஓ அவ்ளோ கொழுப்பா டி உனக்கு "


அவன் ஆல்கஹால் ரத்தம் எஸ்ட்ரா வேகம் எடுத்து சூடானது.


 உன்னை உயிரோடு போக விட்டா தானே சொல்லுவ..வேலை முடிஞ்சதும் உண்ண இங்கேயே பிணம் ஆக்கி பிச்சி போடறேன் பாரு. உன் உடம்பை போலீஸே பார்த்து நடுங்கனும் அப்படி பண்றேன் பாரு. உன் ரத்தத்தை பார்த்தா தான் உன் ஜாதி ஆளுங்களுக்கு பயம் வரும். "


எலும்பு துண்டின் மேல் பாயும் வெறி நாய் போல அவள் மேல் பாய்ந்தான் ஆதி.


                ✳️         ✳️         ✳️


போலீஸ் அந்த இடத்தை அடைந்த போது முதலில் கண்ணில் பட்டது மண்ணில் ஊறி இருக்கும் சிகப்பு ரத்தம். அப்புறம் அந்த உடல்..

அதை புரட்டி போட்ட போலீஸ் 

ப்பா... பார்க்கவே ரொம்ப கொடுமையா இருக்கு சார் " என்றார் 

"யாரு சார் இவ்வளவு கொடூரம் பண்ணி இருப்பாங்க.. கண்ணை ரெண்டையும் தோண்டி எடுத்து இருக்காங்க சார்... " என்றார் ஆச்சர்யம் மாறாமல்.


குனிந்து பார்த்த இன்ஸ்பெக்டர்.. 


"யோவ்.. மூச்சி இருக்கு ...இன்னும்...உயிர் இருக்குயா.. உடனே பக்கத்து ஊர் ஆஸ்ப்பிடல் கூட்டி போகணும் க்விக்..." என்று பதட்டமானார்கள்.


                ✳️         ✳️         ✳️


கிட்ட தட்ட சரியாக இதே நேரத்தில்..சம்பவ இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளி பக்கத்தில் ஊரில் ஒரு வீட்டில்...


"உனக்கு பயமா இல்லையாடி செல்லம் "என்று கேட்டு கொண்டு இருந்தாள் அந்த தாய்.


"எதுக்கு மா பயம்..." என்றாள் பாரதி..


" நீ தானே சொல்லி கொடுத்த இந்த மாதிரி சூழ் நிலை வந்தா பயப்பட கூடாது , நம்மை காப்பாற்ற சட்டமோ போலீஸோ அங்கே வராது.. வேற யாரும் வர மாட்டாங்க ..நாம தான் நம்மை காப்பாற்றிகனும் னு சொன்னது நீ தானே? 

நம்மை பாம்பு கடிக்க வந்தா அதை அடிபத்தில் தவறு இல்லை பாம்புக்கு பாவம் பாக்க கூடாது னு நீ தானேமா சொல்லி கொடுத்த . இந்த மாதிரி பாம்பை எப்படி நேக்கா அடிக்கனும் னு பயிற்சி கொடுத்ததும் நீ தானே..."


அல்லி மலர் போல அழகாய் சிரித்தாள் பாரதி..


"நீ சொன்ன மாதிரியே பயந்த மாதிரி அடங்கி போற மாதிரி நடித்தேன். அவன் அசரும் நேரம் பார்த்து அவன் உயிர் நிலை பகுதியில் ஓங்கி மிதித்தேன். வலியால் தடுமாறும் போது.. அவன் முகத்தை சட்டென்று பிடித்து..இதோ இந்த ரெண்டு கட்டை விரல் கூர் நகங்களை அப்படியே கண்ணில் விட்டு நொங்கு நோண்டுவது போல நோண்டி எடுத்தேன். " என்றாள் அவள் முகத்தில் வேட்டை புலியின் ஆவேசம் இருந்தது. 


            ✳️         ✳️         ✳️


பக்கத்து ஊர் ஆஸ்ப்பிடல்


போலீஸ் இடம் டாக்டர் சொல்லி கொண்டு இருந்தார்.


"இன்னும் மயக்கம் தெளியல.. உயிரை காப்பாற்றி விட்டோம் சார்

ஆனா அவரால் இனி பார்க்க முடியாது...அப்புறம் முக்கியமா அவர் உயிர் நிலை பகுதியை யாரோ சிதைத்து இருக்காங்க.. அதனால் அவருக்கு இனிமே ஆண்மை இருக்காது....


முற்றும்.




குறிப்பு : இனி இதான் வழி





Comments

  1. ரணமான நிகழ்வுகளுக்கு மருந்து போன்று ஒரு கிளைமாக்ஸ் திருப்பம்.

    ReplyDelete
  2. இப்போது தான் வந்துள்ளேன். உங்களைப் போலவே நானும் அறிவியல் ஆர்வம் உள்ளவன். படித்து விட்டு கருத்து எழுதுகிறேன்.நனறி. வெல்க உங்கள் நோக்கம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"