ஜெட் வேக கதை 1 :

.

 ஜெட் வேக கதை 1 : 


#ஓவர்_டேக்


#ரா_பிரபு


பாலா தன் புல்லட் மிர்ரரில் மீண்டும் பார்த்தான்.. 

'அந்த பிளாட்டினா வண்டி காரன் என்னை முந்தாமல் விட மாட்டான் போலவே.. ஓட்டை வண்டியை வச்சிக்கிட்டு எவ்ளோ வேகமா பின்னாடியே வரான்...

காடறேன் ..டா.. புல்லட் 350 cc பவர் என்னனு காடறேன் .என்னையே முந்த பாக்கரியா நீயெல்லாம் என்ன ஓவர் டேக் பண்ணா அது என் ஒன்றரை  லட்ச ரூபாய் வண்டிக்கே கேவலம்

பாலா மேல் ஈகோ சவாரி செய்ய.. புல்லட் மேல் பாலா பேய் சவாரி செய்தான். ஆக்சிலேட்டர் காதை பிடித்து அதன் எல்லை வரை திருகி 350 cc யை கதற வைத்தான்...

டுபு .டுபு..டுபு.... புல்லட் ஹை பிட்சில் ட்ரம் வாசிக்க.. மீண்டும் கண்ணாடியில் பார்த்தவனுக்கு அதிர்ச்சி. அந்த பிளாட்டினா மர்ம மனிதன் கடும் பிரயத்தன பட்டு இவனை இன்னும் பின் தொடர்ந்து கொண்டே இருந்தான்...


இந்த கண்ணாமூச்சி அடுத்த 20 நிமிடம் தொடர பாலா சோர்ந்து போய்' முந்தி போய் தொலையட்டும் போ.நாய் கு என்ன அவசரமோ... ' என வேகம் குறைந்தான்.. பிளாட்டினா ஓவர் டேக் பண்ண வழி விட்டான்...


கொஞ்சம் கொஞ்சமாய் பக்கம் நெருங்கிய பிளாட்டினா ஆசாமி..


"சார் சார்... எவ்ளோ நேரமா சார் துரத்தி வரது... ஸ்டேண்ட் எடுக்காம ஓட்டிட்டு இருக்கீங்க பாருங்க ஸ்டேண்ட் எடுங்க சார் " என்றான்..


பாலாவின் 350 cc பவர் கொண்ட ஈகோ குடை சாய்ந்தது...



Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"சின்ன சின்ன பேய் கதைகள்"