Posts

Showing posts from 2025

பாவு பஜ்ஜி

Image
  "பாவு பஜ்ஜி " (சிறு கதை ) ரா.பிரபு  அந்த fz பைக் பள்ளிக்கரணை' ஜயச்சந்திரா ' வை கடந்து டிராபிக் இல் நுழைந்த போது ..  "ஏய் சஞ்சனா "என்று அழைத்தான் பைக் ஓட்டி கொண்டு இருந்த தர்ஷன் . . கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல அவன் குரல் ஹெல்மட்டுக்குள் இருந்து அமுங்கி கேட்டது.  பின்னால் அமர்ந்து இருந்த அந்த அழகிய சஞ்சனா ''என்னடா ''என்றாள் பைக் கண்ணாடியில் அவன் முகத்தை நோக்கிக்கொண்டு  "அங்கே பாரேன் " அவன் காட்டிய இடத்தில் ஒரு பெரியவர் பிளாட்பாரத்தில் கடை விரித்து இருந்தார்..வண்ண வண்ணமான பல வடிவ செருப்புகள்... "செருப்பு பழசு ஆயிடுச்சி வேற எடுக்கணும் னு சொன்னியே நிறுத்தவா... " என்றான் தர்ஸன்.  அவன் கேட்டு 10 வினாடிகள் ஆகியும் அவன் காதலியிடம் இருந்து  எந்த பதிலும் இல்லை. 'காதில் விழ வில்லையோ ஒரு வேளை ' தர்ஸன் அந்த கேள்வியை மீண்டும் சத்தமாக தொடர்ந்தான்.. "சஞ்சனா உன் செருப்பு பழசு ஆயிடுச்சி வேற எடுக்.........." "ஒன்னும் வேணாம் கிளம்புங்கள் '' என்றாள் பாதியில் சஞ்சனா... அவள் தானே கேட்டால் இப்போ வாங்கி தரேன் ...