Posts

"கருந்துளை மின்நிலையம் "

Image
"கருந்துளை மின்நிலையம் " அறிவியல் காதலன் : ரா.பிரபு பிரபஞ்சத்தின் மிக சக்திவாய்ந்த பொருட்களில் black hole களுக்கு முக்கிய இடம் உண்டு.  அண்டத்தில் ஆங்காங்கே சுற்றிதிரிந்து கொண்டு எதையும் உறிஞ்சி குடித்து தள்ளும் மகா அரக்கர்கள் அவை. அவைகளின் மகா சக்தியை நாம் பயன் படுத்தி கொள்ள முடியுமா ? அது வெளியிடும் ஆற்றலை பயன் படுத்தி மின்சாரம் எடுக்க ஏதும் வாய்ப்புகள் உண்டா ? நிச்சயம் அப்படி ஒரு வாய்ப்பு இல்லை. காரணம் பார்க்கவே முடியாத அளவு,  ஒளியை கூட தப்பி போக விடாமல் தனக்குள் இழுத்து சுருட்டிக்கொள்ளும் அளவு (அதாவது பூமியின் எஸ்கேப் வேலாசிட்டி 11.2 என்பதை போல அதன் எஸ்கேப் வெலாசிட்டி 3 லட்சம் கி. மி / வினாடியை விட கூட அதிகம் என்பதால் அதன் ஈர்ப்பை மீறி ஒளி கூட வெளி வருவது இல்லை ) இந்தளவு ஆற்றலை கொண்ட அரக்கனிடம் நெருங்கி அதன் ஆற்றலை கடன் வாங்குவது என்பது சற்றும் வாய்ப்பு இல்லாத ஒரு யோசனை. ஆனால் அதில் ஒரு சின்ன எதிர்கால சாத்தியம் இருக்கிறது. அதாவது உசைன் போல்டை ஓட்ட பந்தயத்தில் ஒரு 5 வயது சிறுவன் ஜெயிக்க முடியுமா ?? விடை : நிச்சயம் முடியாது . மைக் டைசனை 10 வயது பய்யன் அடித்த...

"அன்புடன் அறிவியல் "

Image
" அன்புடன் அறிவியல் " அறிவியல் காதலன் - ரா. பிரபு நண்பர்களுக்கு வணக்கம் ! பல வகை தலைப்புகளில் அவ்வபோது பல கட்டுரைகள் நான் எழுதி இருந்தாலும் அறிவியல் கட்டுரைகள் தான் எப்போதும் எனது அபிமானம் எனது அடையாளம் என்று நினைக்கிறேன். அப்படி அவ்வபோது பல இடங்களில்  நான் எழுதிய அறிவியல் கட்டுரைகளில் நெடுங்கட்டுரைகள் தவிர்த்து விட்டு சிறு கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த "அன்புடன் அறிவியல்" .(இது 2016 முதல் 2017 வரை எழுதிய சிறு கட்டுரைகளின் தொகுப்பு )படித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் நன்றி. 1. "சூரியன் எனும் சூரன்" நமது சூரிய குடும்பத்தின் 'தலை'யான சூரியன் எனும் சூரனை பற்றியும் அது வேலை செய்யும் விதம் பற்றியும் சில தகவல்களை தான் நாம் இன்று பார்க்க போகிறோம். முதலில் இந்த பூமியின் மொத்த ஆற்றல்காண ஆற்றல் மூலம் சூரியன் தான் என்று நாம் கேள்வி பட்டு இருந்தாலும் அது எப்படி என்பதை இன்னும் பல பேர் முழுதாக புரிந்து கொள்வதில்லை. அதாவது நாம் அன்றாடம் பல செயல்கள் செய்கிறோம் படிக்கிறோம் எழுதுகிறோம் ஒடுகிறோம்.. பேசுகிறோம் பாடுகிறோம் இது எல்லாவற்றிற்கும் ஆ...