Posts

"நியூட்டனின் நிதர்சன விதிகள் "

Image
" நியூட்டனின் நிதர்சன விதிகள் " ⚛அறிவியல் காதலன்⚛     ரா.பிரபு கி.மு 300 களில் வாழ்ந்த அரிஸ்டாட்டில் அக்காலத்தில் மக்கள் அறிந்த ஒரு மாபெரும் சிந்தனையாளர். ஒரு முறை அவர் பொருட்களின் இயக்கம் பற்றி சில கருத்துக்களை சொன்னார் அதாவது ஒரு பந்தை உருட்டி விட்டால் ஏன் அது கொஞ்ச தூரம் சென்ற பின் நின்று விடுகிறது?? அதற்கு அவர் சொன்ன காரணம் "ஏனென்றால் அது களைப்படைகிறது " பொருட்கள் ஏன் பூமியை நோக்கி வருகிறது? "ஏன் என்றால் அது பூமியுடன் ஒன்றிணைய ஆசை படுகிறது" இந்த கருத்தை மாற்றி அமைக்க உலகம் நீண்ட நாள் காத்திருக்க வேண்டி இருந்தது. இந்த கருத்தை சொன்ன பின் கிட்ட தட்ட 2000 ஆண்டுகள் தாண்டி பிறந்த நியூட்டன் பொருட்களின் இயக்கம் பற்றி மிக சிறப்பான மிக தெளிவான ஆதார பூர்வ உண்மைகளை சில கோட்பாடுகளின் வாயிலாக உலகத்திற்கு கொடுத்தார். ஆயிர கணக்கான விஞ்ஞானிகள் வரலாற்றில் வந்தாலும் உலகின் பார்வையை மொத்தமாக தனக்கு பின் மாற்றிவிடும் விஞ்ஞானிகள் மிக அரிதாக தோன்றுவது உண்டு. அறிவியலில் நியூட்டனின் பங்களிப்பு அந்த மாதிரியான ஒன்று தான். அவரது கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு அதன...

"ஆர்கிமிடிஸ் அறிந்து கொண்டது என்ன ?"

Image
ஆர்கிமிடிஸ் அறிந்து கொண்டது என்ன ? அறிவியல் காதலன் ⚛ ரா.பிரபு ⚛ ஆர்கிமிடிஸ் தண்ணீர் தொட்டியில் இருந்து 'பப்பி ஷேம் ' கெட்டப் இல் "யூரேக்கா " என கத்தி கொண்டு ஓடியதும் அதை தொடர்ந்து அவர் நமக்கு கொடுத்த சென்ற" ஆர்கிமிடிஸ் கோட்பாடுகளும் " நாம் அறிந்த கதைகள் தான். ஆனால் அன்று அவர் அதை எப்படி கண்டு கொண்டார் ஆர்கிமிடிஸின் மிதக்கும் விதிகள் எப்படி பிறந்தன அவைகள் என்ன சொல்கின்றன என்பதை கொஞ்சம் விளக்கமாக இன்று பார்க்கலாம். முதலில் அந்த "யூரேக்கா " கதை... ஆர்கிமிடிஸ் தனது பல புத்தகங்களில் தனது அறிவை எழுத்துக்களால் நமக்கு விட்டு சென்றுள்ளார் .ஆனால் அதில் எவற்றிலும் அவரது இந்த தண்ணீர் தொட்டி கதை இடம் பெற வில்லை. இன்று வரை மற்றவர்கள் தான் அதை பற்றி எழுதி இருக்கிறார்கள் அவர் ஒரு வார்த்தை கூட எழுத வில்லை. (ஒரு வேலை தான் உடை இல்லாமல் வீதியில் ஓடியதை எழுத அவருக்கு தயக்கமாக இருந்ததோ என்னமோ ) சரி கதைக்கு போவோம். Syracuse என்று ஒரு நகரம் (இன்று  syracuse என்ற பெயரில் ஒரு நகரம் நியூயார்க்கில் இருக்கிறது அதை குழப்பி கொள்ள வேண்டாம் நாம் இப்போது பேசுவது க...

" பூமியின் சுழற்சியும் கோரியொலிஸ் விளைவும் "

Image
"பூமியின் சுழற்சியும் கோரியொலிஸ் விளைவும்" அறிவியல் காதலன் ரா.பிரபு Coriolis effect என்கிற ஒன்றை பற்றி... அது பூமியில் சூறாவளி போன்றவற்றில் எப்படி பங்கேற்கிறது என்கிற சுவாரஷ்யமான சில விஷயங்களை பற்றி தான் பார்க்கபோகிறோம் என்றாலும் அதற்கு முன் உங்களுக்கு சில கேள்விகள்... சில தகவல்கள்..... முதலில் ஒரு குழந்தை தனமான கேள்வி.. எப்போதாவது உங்களுக்கு இந்த அபத்தமான யோசனை வந்தது உண்டா ? அதாவது நம்ம பூமி கிட்ட தட்ட ஒரு மணிநேரத்திற்கு 1670 கி. மி தூரம் சுழலுகிறது என்று நமக்கு தெரியும். அப்படியானால் ஒரு ஹெலிகாப்டரில் ஏறி கொண்டு வானத்தில் பறந்து ஒரே இடத்தில் நிலையாக அப்படியே ஒரு மணிநேரம் நின்று விட்டு கீழே இறங்கினால் நாம் 1670 கிலோ மீட்டர் பயணித்து இருக்க வேண்டும் அல்லவா ? ஆனால் அப்படி நடப்பது இல்லையே ஏன்? மேலே ஹெலிகாப்டர் தனியாக அந்தரத்தில் தானே நிற்கிறது அதை விட்டு விட்டு கீழே பூமி 1670 கி. மி சுழன்று இருக்க வேண்டுமே. அவ்வளவு ஏன் ஒரு மாடியில் இருந்து பந்தை கீழே போட்டால் கூட பூமி ஒரு வினாடிக்கு கிட்ட தட்ட 70 கி. மி சுற்றுவதால் அந்த பந்து 70 கி. மி தள்ளி போய் வேறு கட்டிட...

"மர்மங்கள் முடிவதில்லை"

Image
" மர்மங்கள் முடிவதில்லை" (மயக்கும் மர்ம நிகழ்வுகளின் தொகுப்பு ) ரா.பிரபு  (பாகம்1 : மரண மலை ) இந்த உலகம் பல வகை மர்மங்களை மர்ம நிகழ்வுகளை மர்ம இடங்களை மர்ம மனிதர்களை கொண்டது. சொல்ல போனால் இந்த பூமியே ஒரு மர்ம கிரகம் தான் . யோசித்து பாருங்கள் "Observable univerce " என்று நாம் சொல்ல கூடிய அதாவது இன்று வரை வானத்தில் நாம் அண்டத்தின் அளவை எட்டி பார்த்து அளக்க முடிந்த தொலைவாகிய இந்த அண்டத்தின் அளவு 9300 கோடி ஒளி ஆண்டுகள். இவ்வளவு பெரிய பரந்து விரிந்த பரப்பில் இந்த தம்மாந்துண்டு பூமியில் இருப்பதை போன்ற காற்று தண்ணீர் மற்றும் உயிரினத்தை இது வரை ஆதார பூர்வமாக நம்மால் எங்கும் கண்டு பிடிக்க முடியவில்லை.. இது மிக பெரிய மர்மமாக  தெரியவில்லையா ? இவ்ளோ பெரிய அண்டம் அதில் நாம் மட்டும் தான் தனியா இருக்கோம் இது மிக பெரிய ஆச்சர்யமாக இல்லையா ?இவ்வளவு பெரிய அண்டசராசரத்தில் நாம் மட்டும் தனியாக என்ன செய்து கொண்டிருக்கின்றோம் ? அண்டத்தின் நமது இருப்பை பற்றி ஒரு விஞ்ஞானி ஒரு முறை இப்படி சொன்னார் , " இரண்டே உண்மைகள் தான் சாத்தியம் ஒன்று இவ்ளோ பெரிய மகா பிரபஞ்சத்தில் ...