" தங்கம் "
"தங்கம் "
(அறிவியல் சிறுகதை )
ரா.பிரபு
அன்று விடியல் சூரியனின் ரத்த சிகப்பில் 'அபாயம்'குறியீடு இருந்தது.
ரீடிங்குகளை பார்த்த டாக்டர் பெஞ்சமின் ரியோ ,தான் ஒரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி என்பதை மறந்து ஓரு சிறுவனை போல அந்த காரிடாரில் ஓடினார்.
"டாக்டர் எனி பிராப்ளம் " ?? எதிர் பட்ட உதவியாளர்கள் பதட்டத்தை இவரிடம் பற்ற வைத்து கொண்டார்கள்.
"எஸ் எஸ் வெரி மச் .." பெஞ்சமின் நெற்றியை சொரிந்து கொண்டார் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தார். சிகரெட் பாதி உடல் இளைப்பதற்குள் நசுக்கி கொன்று தூக்கி போட்டார்.
"அவசர கூட்டம் ஏற்பாடு பண்ணுங்க அனைத்து நாட்டு விஞ்ஞானிகள் கூட்டம்..
அதுங்க திரும்ப வருதுங்க.. உலகத்தை அழிக்க "
▪️▪️▪️
அந்த அறையின் பிரமாண்டத்தில் புட் பால் ஆடலாம். ஆனால் இப்போது வெறும் மின்னணு 3D ஒலி/ஒளி சூழ பட்டு பூராம் டிஜிட்டல் உருவங்கள் நின்றிருந்தது. 2042 ஆம் ஆண்டின் தொழில் நுட்ப சக்தி காரணமாக அவர்கள் விர்சுவல் என்பதை அறியாத அளவு நேரில் பிரசன்னமாக இருந்தார்கள்.
"இன்டர்நேஷனல் ஏலியன் ரிசர்ச் சென்டர் சார்பாக அனைவருக்கும் பேட் மார்னிங் சொல்லுவதற்காக வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்... " என்று ஆரம்பித்தார் பெஞ்சமின்.
"ஜிர்கோனியன்ஸ் திரும்ப வர போறதா நேத்து ராத்திரி ல இருந்து நம்ம கருவிகள் கதறி கொண்டு உள்ளது.." என்றார் சோகமாக
"யார் அந்த பண்ணி மூஞ்சி வாயன் களா... " கூட்டத்தில் சலசலப்பு..
"போன படையெடுப்பில் அவர்களை விரட்டவே தாவு தீர்ந்துடிச்சே டாக்டர்.."
"போன முறை வந்தது வெறும் வேவு டீம் என்பதை நினைவில் வையுங்கள் அந்த குட்டி டீமை விரட்ட தான் அந்த போராட்டம்... ஆனா இப்போ வர்ற போறது மொத்த படை... "
"என்ன தான் பிரச்சனையாம் அவங்களுக்கு பேச்சு வார்த்தை என்ன ஆச்சு.." கேட்டார் இந்திய விஞ்ஞானி ஈஸ்வர்.
"அது போன தடவையே முடிஞ்சிடிச்சி.. தோல்வில.. அவங்களுக்கு கிரகம் வேணுமாம் நாம ரொம்ப கெடுத்து வச்சிட்டோமாம்.. அவங்க இயற்கையை மீட்டெடுத்து குடியேற போறாங்களாம்.. இந்த பூமி முழுக்க செதில் உடம்பும் பண்ணி மூஞ்சியும் உலாவரதை என்னால் பார்க்க முடியாது...ஜீஸஸ் அதுக்குள்ள என்னை கொன்னுடு... " பெஞ்சமின் தனக்குள் புலம்பினார்.
"நம்ம பூமி நாம கெடுப்போம் இவங்க யாரு கேட்க.. ? என்ன இப்போ பெருசா கெட்டு போச்சு.. காசு கொடுத்தா குட்டி குட்டி தெரு ல கூட ஆக்சிஜன் கிடைக்குது.. ஆன்லைன் ல ஆர்டர் பண்ணா ஒரு நிமிடத்தில் ஓரு கிளாஸ் தண்ணீர் ட்ரோன் மூலமா ஸ்பாட் டெலிவரி நடக்குது. வேற என்ன வேணுமாம்.. " (இது இங்லாந்து விஞ்ஞானி.)
"அட எங்க நாட்டுல இலவச காற்றுனு தேர்தல் அறிக்கை கொடுத்து இருக்காங்க பா... " (மீண்டும் ஈஸ்வர் )
"இது இப்போ அரசியல் பேசற நேரம் இல்லங்க. ஆக வேண்டியதை பேசுங்க.. " ஈஸ்வர் சிவந்த முகம் மேலும் சிவந்தார்.
"உலக நாடுகள் ஒன்னு கூடி உண்டு பண்ணோமே... அந்த டீகோடிங் ராட்சசன் பென்ட்ரா..அது என்ன சொல்லுது.. சும்மா பூமியை ரவுண்ட் அடிச்சிட்டு இருக்கா.. என்ன..? " ( ரஷ்ய விஞ்ஞானி)
"சிக்னல்களை விழுங்கி கொண்டுள்ளது.. இன்னும் கொஞ்சம் நேரத்தில் அலசி ஆராய்ந்து.. அவங்க நோக்கம் என்ன எப்போ வராங்க என்ன பண்ண போறாங்க எல்லாவற்றையும் சொல்லிடும்.
"பெருசு என்ன சொல்லுது... " என்றார் ஜப்பான் ஆசாமி அவர் குறிப்பிட்ட 'பெருசு ' அமெரிக்க பிரஸிடெண்ட்.
"இன்னும் தகவல் சொல்லல காலைலயே வெள்ளை மாளிகையை கருப்பு ஆக்க வேணாமே னு பார்த்தேன். இதோ கட் பண்ணிட்டு அடுத்து அங்க தான் பேசணும்.. "
"சரி பென்ட்ரா முடிவுகள் வரட்டும் என்ன பண்ணலாம் னு யோசிக்கலாம் பல் விளக்கிட்டு தயாரா இருங்க மீண்டும் கூப்பிடறேன். பாய்.." பொத்தானை அமுத்தியதும் அனைவரும் ஒளி புள்ளியாகி மறைந்து போனார்கள்.
"டபுள் ஸ்ட்ராங் டீ அப்புறம் ஒரு தலைவலி மாத்திரை ப்ளீஸ் " என்று தன் உதவியாளரை பார்த்து கத்தினார் பெஞ்சமின்.
▪️▪️▪️
அதே அறை.. அதே கூட்டம் 1 மணி நேரம் இடைவெளிக்கு பின்...
"வெல்கம் பேக் " என்றார் பெஞ்சமின் ஏதோ கேம் ஷோ போல. கொஞ்சம் தெளிவாக இருந்தார்.
"பென்டரா..ஜிர்கோனியன்ஸ் கம்யூனிகேஷனை பக்காவா ஒட்டு கேட்டு லட்டு போல சில தகவல் அனுப்பி இருக்கு.. "என்றார். நேராக விஷயத்துக்கு வந்தவராய்..
"ஜிர்கோனியன்ஸ் ஒரு ஒட்டுனி னு நமக்கு தெரியும் அதாவது உடல்களை கடன் வாங்கும் திறன் கொண்டவை. மனிதருக்குள் எளிதாக புகுந்து வாசம் பண்ண கூடியவை. கடந்த இன்வேஷன் ல ஒரு ஜூவல்லரி ஷாப் ஊழியன் உடல் ல புகுந்ததை கண்டெடுத்தோம் நியாபகம் இருக்கா ?
மேலும் அவைகள் மின் காந்த ரூபத்தில் உருமாற கூடியவை என்பதால் எளிதில் தப்பி ஓடிவிடுகின்றன.
இம்முறை அவர்கள் திட்டம் அது தான். இம்முறை பூமியின் ஒவ்வொரு மனிதனையும் டார்கெட் பண்ணி ஒவ்வொரு ஜிர்கோனி புக போறான். நம்ம உருவதில் பண்ணி மூஞ்சுடன் இனி நீயும் ஜிர்கோனி நானும் ஜிர்கோனி..யோசித்து பாருங்க.. ஹா ஹா.. " என்றார் சத்தமாக சிரித்தார்.
மற்ற யாரும் அந்த ஜோக்கை ரசித்ததாக தெரியவில்லை..
பயத்தில் மூளை கீலை பாதித்து விட்டதா இவனுக்கு இவ்ளோ கூலா சொல்றானே.
"ஆனா பாருங்க கவலை பட தேவை இல்லை நாம " என தொடர்ந்தார்.
"அவனுங்க பேச்சை மொத்தமா ஒட்டு கேட்டுட்டோம் நாம. தேங்க்ஸ் டூ பென்ட்ரா... கிடைத்த தகவல் படி.... அவனுங்க நம்ம உடல் ல நேரடியா புக முடியாது அதற்கு ஒரு ஊடகம் தேவை.. அது மூலமாக தான் புக முடியும். இதான் நாம இப்போ கண்டு பிடித்து இருக்கும் உண்மை.
அவங்க புக தேவை படும் ஊடகம் 'தங்கம் ' .
அதனால் தான் கடந்த முறை நகை கடை ஊழியன் ஒருவன் உடலில் ஒரு ஜிர்கோனி புகுந்தது. அதாவது அவர்கள் நம் உடலில் புக மின்காந்த வடிவில் நம்மை நெருங்கி சூழ்ந்து கொண்டாலும் நமது உடலில் பிரவேசிக்க நம் உடலில் தங்கம் தொட்டு கொண்டிருக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் 5 அடி தூரத்தில் சிறிதேனும் தங்கம் இருக்க வேண்டும் அப்போ தான் ஜிர்கோனிகள் கூடு விட்டு கூடு பாய முடியும். இதான் அவங்க வீக்னெஸ்.
உலகத்தில் எத்தனை பேர் தங்கம் தொட்டு கொண்டு இருக்க போறோம் ? அவைகள் வரும் தேதி நேரம் எல்லாம் தெளிவா சொல்லிடிச்சி பென்ட்ரா. அன்னைக்கு மட்டும் யாரும் தங்கத்தை தொடாமல் நெருங்காமல் இருந்தால் போதும் அவைகள் அலைகளாக அலைந்து விட்டு அழிந்து விடும். ஆம் ஒரு முறை அவைகள் சொந்த உடலை விட்டு அலைகளாக வெளி வந்தால் பின் மீண்டும் சொந்த உடலில் புக முடியாது. கொஞ்ச நேரத்துக்கு அலைகளாக அலைந்து விட்டு கூடு கிடைக்க வில்லை எனில் அழிந்து போகும். அவைகள் வரும் தேதி.. வர்ற 13.."
"ஆனா உலகம் பூரா அந்த தங்க எச்சரிக்கை பண்ணணுமே.. " என்றார் சைனா தன் இடுங்கிய கண்ணை சிமிட்டி..
"டோன்ட் வோரி அதை நான் பாதுக்கறேன் னு சொல்லிட்டார் பெருசு... "
"ரைட் கூட்டத்தை கலைக்கிறேன் 13 ஆம் தேதி தங்கத்தை விட்டு தள்ளி இருங்க..."
▪️▪️▪️
13....
டீ கடையில் தொங்கும் எண்ணெய் காகிதத்தை சூழந்த ஈ கள் போல. பூமியை ஜிர்கோனி வாகன டிராபிக் சூழ்ந்து இருந்தது.
"ஹை..ஹய்.. ஹுய் குய் ஜிய்.. " என்று ஒட்டு மொத்தமாக ஜிர்கோணிகள் உற்சாக குரலுக்கு
'பூமி நமதே ' என்று மொழியாக்கம் செய்தது பென்ட்ரா
அதில் தலைவன் போல இருந்தவன் தன் வாகன மூக்கை பென்ட்ரா பக்கம் திருப்பி பொத்தானை அழுத்தி ரிப்பன் கட் பண்ணி வைத்தான். பாய்ந்த கதிர் குண்டு வீச்சில் பென்ட்ரா தன் துடிப்பை இழந்து சுற்றுவட்டம் நழுவி.. சுட பட்ட குருவி போல்.. பசிபிக் நோக்கி வால் நெருப்பு கக்கி கொண்டு பாய்ந்தது.
"ஜியா..பில்..தியா... " என்பதை இப்போது மொழி பெயர்க்க ஆள் இல்லை.. 'தாக்குங்கள்' என்று இருக்கலாம்.. அவர்கள் நீல பந்து நோக்கி நேர் கோட்டில் பாய்ந்தார்கள். வளிமண்டல பிரவேசம் நடந்ததும் க்விக்.. என்று..உடலை விட்டு ஆவி பிரிந்தார்கள். அலைவடிவில் அலைமோதினார்கள்.
பூமி.....
தனக்கு வேண்டியவர்கள் சொந்த காரர்களுக்கு அனைவரும் தங்கத்தை விட்டு தூர இருக்க வற்புறுத்தினார்கள். சமூக ஊடகம் memes கள் வாயிலாக விழிப்புணர்வு செய்தார்கள். 13 அன்று அனைவரும் தங்கத்தை அரசு வங்கியிடம் கொடுத்து அடுத்த நாள் பெற்று கொள்ளும் படி சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது அரசாங்கம்.
பெஞ்சமின் பெரிய திரையில் நடப்பை பார்த்து கொண்டு சான்ட்விச் முழுங்கி கொண்டு இருந்தார்.
ஜிர்கோனியன் செத்தான் டா என்றார் சப்தமாக...
அப்போது.......
முக்கிய நகரம் ஒன்றை லைவ்.. டெலிகாஸ்ட் பண்ணி கொண்டிருந்த வீடியோவில் அதை கண்டார்.. மனிதர்கள் முகத்தை கிழித்து கொண்டு .. பண்ணி போன்ற முகங்கள் வெளி வந்து கொண்டு இருந்தன.. நடை பாதை நடபவன் தெரு ஒரம் படுத்து இருபவன். காய்கறி விற்பவன்.. ஜாகிங் போறவன்.. வாக்கிங் போறவன்.. கார் ஓட்டுறவன்.......
"மை காட் என்ன நடக்குது இங்க இது எப்படி சாத்தியம்...? பீட்டர்... " என்றார் சத்தமாக..
ஓடி வந்த பீட்டர் "ஜீரிக்கி புக்கு" என்றான் பண்ணி வாயை திறந்து..
"ஓ ..ஜீஸஸ்..... " பெஞ்சமின் புரியாமல் கதவை சாத்தி ஓடி தன் செல் போன் எடுத்து நம்பர் தட்ட பார்க்க.....
உடலுக்குள் ஒரு மின்சார வெட்டு.. எதுவோ ஒன்னு உடலில் சூடாக பரவியது உணர்ந்தார்.. தன் முகத்தை கண்ணாடியில் ஓடி சென்று பார்த்தார்..கடைசி நினைவாக.. முகம் கூம்பு வடிவில் பண்ணி மூஞ்சி பெற்று கொண்டிருந்தது...
என்ன நடந்தது என்று புரியாமல்
கையில் இருந்த செல்லை தவற விட அது கீழே விழுந்து வாயை பிளந்து உள்ளே இருந்து சிம் வெளியே வந்து தெறிக்க......
இவரை பார்த்து சிரித்தது.. ..
'சிம் கார்டில் இருந்த தங்கம்....'
முற்றும்.
(குறிப்பு..US Geological Survey ஒன்றின் படி ஒவ்வொரு செல்போனிலும் 0.034 grams தங்கம் உள்ளது... )
🌏ரா.பிரபு ✍️
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteபுதிதாக அறிவியல் கட்டுரை போடுங்கள். கதை வேண்டாம்
ReplyDeleteVery nice. முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeletesuper bro
ReplyDelete