Posts

"கருந்துளை ஏன் இப்படி இருக்கிறது ?

Image
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 "கருந்துளை ஏன் இப்படி இருக்கிறது ? (M 87 வடிவத்தின் விளக்கம்  ) 🎯 அறிவியல் காதலன் ரா.பிரபு ✍ 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 ஏப்ரல் 10 ஆம் தேதி நமக்கு கிடைத்த கருந்துளையின் படத்தை பார்த்தவர்கள் மங்கலான ஒரு சுமாரான படத்தை கண்டு இருப்பார்கள். சிலருக்கு அந்த படம் ஏமாற்றத்தை கூட கொடுத்து இருக்கலாம்... ஆனால் அந்த வடிவத்தில் நாம் காண்பது என்ன என்பதை அறிந்தால் ஆச்சர்யப்படுவார்கள் . அந்த படத்தை எப்படி புரிந்து கொள்வது என்று தான் இப்போது சொல்ல போகிறேன். ஆனால் அதை விட ஆச்சரியம் ஒன்று இருக்கிறது. அது ஐன்ஸ்டைனிடம் இருந்த ஆச்சரியம். நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஐன்ஸ்டீனிடம் யாராவது சில கலர் பென்சில்களை கொடுத்துவிட்டு நீங்க ஏதோ' க்ராவிடி ல ஸ்பேஸ் வளையும் 'னு சொல்றிங்களே..அப்போ பயங்கர க்ராவிட்டி கொண்ட  பிளாக் ஹோல் ஒரு வேளை எதிர்காலத்தில் 100 ஆண்டுகள் கழித்து புகைப்படம் எடுக்கப் பட்டால் அது பார்க்க எப்படி இருக்கும் என்று வரைந்து காட்டுங்கள் பார்ப்போம் என்று கேட்டு இருந்தால்.. மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இன்று நமக்குக் கிடைத்துள்ள புகைப்படத்தை அவர் அன்றே  அச்சுப் பிச...

பிளாக் ஹோல் M87 கரும் பூதத்தின் முதல் படம்

Image
பிளாக் ஹோல் M87 கரும் பூதத்தின் முதல் படம் அறிவியல் காதலன் ரா.பிரபு நீண்ட நாளாக வெறும் கோட்பாடு அளவில் கருத்தாக இருந்த விண்வெளி கரும் பூதம் பிளாக் ஹோல் இன்று ஆதார பூர்வமாக ..புகை பட ஆதாரத்தோடு நிருபிக்க பட்டுள்ளது. (பிளாக் ஹோல் படத்தை முதலில் பார்த்த மனிதர்கள் நாம் தான் என்று பெருமையாக சொல்லி கொள்ளலாம்.) இந்த பூதத்தை விஞ்ஞானிகள் படம் பிடித்தது எப்படி என்று பார்க்கலாம்... ஏதோ உளுத்தம் வடையை out of focus இல் எடுத்தது போல் இருக்கும் அந்த புகை படத்தை விஞ்ஞானிகள் ஏன் அவ்வளவு கொண்டாடுகிறார்கள் என்றால் பிளாக் ஹோல் ஐ படம் பிடிப்பது என்பது ஒரு நிஜமான பூதத்தை படம் பிடிப்பதை விடவும் அதிக கடினமான ஒன்று. காரணம் பிளாக் ஹோலின் எஸ்கேப் வெலாசிட்டி 3 லட்சம் கிமி / வினாடி யை விட அதிகம் என்பதால் அதிலிருந்து ஒளியும் கூட தப்பி வெளியே வருவது இல்லை. ஒளி பட்டு திரும்பாத அல்லது ஒளிராத ஒன்றை எப்படி பார்க்க முடியும் அல்லது படம் எடுக்க முடியும் ? இதை சாதிக்க தான் கடின உழைப்பு தேவை பட்டது. பிளாக் ஹோல் எனும் டார்கெட் உண்மையில் மிக பிரமாண்டமாக இருந்தாலும் அதை படம் எடுக்க முனையும் போது அது இருக்கும் த...

தேடல் கேள்விகள் ரா.பிரபு ✴ கேள்வி 7

Image
"தேடல் கேள்விகள்" ரா.பிரபு ✴ கேள்வி 7 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🎯 கேள்வி : ரத்தத்தில் பல வகை சொல்கிறார்களே.. அவற்றை எப்படி இது இந்த குரூப் என வகை படுத்துகிறார்கள்.? - செந்தில் - 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 📝 பதில் : முதலில் ஒரு விஷயம் சொல்லி விடுகிறேன்.. ரத்தத்தில் பார்ப்பதற்கு ஏதோ நிறைய வகை இருப்பது போல தோன்றினாலும்.. உண்மையில் அப்படி இல்லை. ரத்தம் மொத்தமே 4 வகை தான். 1.A வகை 2. B வகை 3. AB வகை மற்றும் 4. O வகை இவற்றை தான் ABO பிரிவுகள் என்கிறோம். இந்த நான்கிலும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் உண்டு என்பதால்.. மொத்தம் 8 வகையாக பிரித்து வைத்து இருக்கின்றோம். அதாவது.. (A + , A -, B+, B -, AB+ ,AB - ,O +,O - ) சரி இப்போ இவற்றை எந்த அடிப்படையில் பிரிக்கிறார்கள் என்று பார்க்கலாம். ரத்தத்தில் கலந்துள்ள ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து தான் இந்த 'வகை பிரிப்பு ' நடக்கிறது. அந்த பொருளின் பெயர் antigens (ஆன்டிஜென் னா வேற ஒன்னும் இல்ல  சர்க்கரை மற்றும் புரதத்தின் ஒரு வகை ) இந்த ஆன்டிஜென் எங்கே இருக்கும் என்றால் ரத்த சிகப்பணுக்களில் இருக்கும்... அப்புறம் antibodies களில் இர...

"ஆவியின் புகை படம் "

Image
" ஆவியின் புகைபடம் " (சிறுகதை ) ரா.பிரபு "என்ன சார் பயமா இருக்கா ?" விக்டர் முகத்தில் சிறு புன்னகை உடன் கேட்டான்.. சதீஸ் அவனை பதிலுக்கு சிரிப்பு இல்லாமல் பார்த்தான். ஊரை விட்டு ஆள் நடமாட்டம் விட்டு பல கிலோமீட்டர் தள்ளி.. இந்த இரவு நேரத்தில் .. இந்த சுடுகாட்டு பகுதியில்.. தனிமையில்... இருப்பவனை பார்த்து கேக்கிற கேள்வியா இது.. "இன்னும் எவ்ளோ தூரம் போகணும் விக்டர் " ?? குளிர் காலம் என்பதால் பணி மூட்டம் "ஹா " என ஊதிய கண்ணாடி போல மங்கலாக காட்சியை மறைத்து இருந்தது.. அந்த காட்சிக்கு ஊடாக மெலிதாக ஒரு காம்பவுண்ட் சுவர் தெரிந்தது. "அதான் சார் சுடுகாடு காம்பவுண்ட் . கேட் இப்ப மூடி இருக்கும் . நாம சுவர் ஏறி தான் போகணும் "  சதீஸ் கொஞ்சம் பதட்டமானவன் போல தெரிந்தான் . அதை சரி செய்ய தான்  ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தது போல் தெரிந்தது அந்த சுடுகாட்டில் அது கொள்ளி வாய் பிசாசு போல ஒற்றை கண்னை சிமிட்டி சிகப்பாக எரிந்தது.. " அதுங்க எப்ப வரும் ??"  "சார் நாம ஒன்னும் உயிரோடு இருக்கிறவனை படம் ப...

போர் விமானம் ஒரு பார்வை

Image
போர் விமானம் ஒரு பார்வை  ரா.பிரபு (Mig 21 V/S  F-16 ) ஒருவன் கையில் பழைய ரிவால்வரை வைத்து கொண்டு தனக்கு முன்னால் AK 47 வைத்து இருக்கும் எதிரியை சுட்டு வீழ்த்தினால் எப்படி இருக்கும் அப்படி ஒரு செயல் தான்... தீரன் அபினந்தன் வர்தமான் , Mig 21 விமானத்தை வைத்து F-16 ஐ வீழ்த்திய சம்பவம். (உலகில் F 16 யை சுட்டு வீழ்த்திய முதல் F 16 ஷூட்டர் விங் கமாண்டர் அபினந்தன் தான்.) இது ஏன் அவ்வளவு பெரிய சாகசம் ?? காரனம் அபினந்தன்  ஓட்டி சென்ற மிக்21 என்பது அரத பழசான .. ஆயுள் முடிந்த 2 ஆம் மற்றும் 3 ஆம் தலை முறை விமானம் . இதில் விபத்து வாய்ப்பு மற்றும் கோளாறு வாய்ப்பு அதிகம் என்பதால் இதை" flying coffin "என்று அழைக்கிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஆனால் எதிரி ஓட்டி வந்த F 16 சக்தியில் அட்வான்ஸ் தொழில் நுட்பத்தில் ... ஆற்றலில் முற்றிலும் மேம்பட்ட 4 ஆம் தலை முறை விமானம். இதை எதிர்க்க சரியான ஆள் நம்மிடம் உள்ள miraj 2000 மட்டுமே..(முதல் நாள் தீவிர வாதிகள் முகாமில் பாம் போட்டது இது தான் ) ஆனால் அதை அனுப்பாமல் இதை அனுப்பிய காரணம் என்ன என்று கேட்டால் அவர்கள் சொல்வது.. அந்த நே...

"நான் இனி சாக மாட்டேன் "

Image
"நான் இனி சாக மாட்டேன் " (சிறுகதை ) ரா.பிரபு (கதை எழுதி ரொம்ப நாள் ஆச்சி என்பதால் இன்று ஒரு சிறுகதை .....) அந்த சிறுவன் மிக விசித்திரமாக இருந்தான் உடல் முழுக்க சுருண்டு சுருண்டு கூன் விழுந்ததை போல. அவனை அந்த பிறந்த நாள் கூட்டத்தில் அனைவரும் விசித்திரமாக பார்த்தார்கள். இந்த விழாவிற்கு திடீரென எங்கே இருந்து வந்தான் இவன்... யார் இவன்..?? என்று ஆச்சரியம் கலந்து இருந்தது அவர்கள் கண்களில். அந்த பணக்கார பங்களாவின் மாடியில் அந்த பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது. வந்தவர்கள் அனைவர் முகத்திலும் பணக்கார தனம் ஒட்டி இருந்தது. முகத்தில் சிரிப்பை மறைக்கும் அளவு அலங்காரம் செய்திருந்த பெண்கள் தனி கும்பலாக சேர்ந்து அரட்டை துவங்கி இருந்தார்கள்.  விழா ஆரம்பிக்க இன்னும் சில நிமிடங்கள் இருந்தது. அப்போது....தான். அந்த கூட்டத்திற்கு பொருந்தாத ஒன்றாக அந்த சிறுவன் அந்த கூட்டத்தில் நுழைந்திருந்தான். அந்த சிறுவனிடம் ஏதோ விசித்திரம் இருந்தது. அனைவரிடமும் ஏதோ சொல்ல துடித்தது ஆனால் தொண்டையில் வார்த்தை வர வில்லை என்பதை போல சைகை காட்டியது. கைகால் களை வேகமாக ஆட்டி எதையோ சொல்ல ...

"தேடல்_கேள்விகள் " (கேள்வி : 6 )

Image
" தேடல் கேள்விகள்  " (கேள்வி : 6 ) #ரா_பிரபு 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🎯கேள்வி : அதென்ன ட்ரிபில் பாயிண்ட் நீர் ஒரு குறிப்பிட்ட நிலையில் திட திரவ வாயு னு மூன்று நிலையையும் அடையும் இந்த ட்ரிபில் பாயிண்ட் ல னு படிச்சேன் அது எப்படி ஆச்ரயமா இருக்கு அது பற்றி விளக்கம் சொல்ல முடியுமா உங்க ஸ்டைல்ல ... இது நாம் சாதாரணமா பார்க்க முடியாதா. -Selvimani smpvaishnava - 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 📝 பதில் : முதலில் இந்த triple point என்பது வெறும் நீருடன் பொருத்தி பார்க்காதீர்கள் அது திட திரவ வாயு வாக மாறும் கிட்ட தட்ட அனைத்து பொருளுக்கும் இது பொருந்தும். (ஹீலியத்திற்கு ட்ரிபில் பாயிண்ட் இல்லை. ) ஜேம்ஸ் தாம்சன் என்பவர் முதல் முதலில் 1873 இல் இந்த வார்த்தையை பயன் படுத்தினார். அதாவது குறிப்பிட்ட வெப்ப நிலையில் குறிப்பிட்ட அழுத்தத்தில் ஒரு substance திட திரவ வாயு எனும் மூன்று நிலையிலும் இருக்கும் (.உதாரணம் நீரின் ட்ரிபில் பாயிண்ட் 0.01° Celsius at 4.56 mm Hg.) சரி என்ன இந்த ட்ரிபில் பாயிண்ட் என்று பார்க்கலாம். யாராவது உங்களிடம் ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு மாற்ற சொன்னால் (உதா...