Posts

தங்கம் 2

Image
  "தங்கம் 2" (அறிவியல் சிறுகதை )  #ரா_பிரபு தங்கம் சிறுகதை ஒரு பாகம் தான். ஆனால் நண்பர்கள் சிலர் சொன்னதற்கு இணங்க யோசித்து ஓரு பார்ட் 2 எழுதி இருக்கிறேன். பார்ட் 2.. "கியாபுக் கியா.  கிர்.. " என்றார் உருமாறிய பெஞ்சமின்.. தன் புதிய பன்றி மூஞ்சி அழகை கண்ணாடியில் ரசித்தார். ச்சை மனிதர்கள் முகம் தான் எவ்ளோ கேவலமா இருக்கு.. இந்த கூம்பு வடிவ முகம் தான் என்ன அழகு.  இதை ஏதோ ஒரு பூமியின் அருவெறுப்பான பிராணியுடன் ஒப்பிட்டு பேசுகிறாராகள் அந்த பிராணியை ஒரு முறை பார்க்க வேண்டும். கதவை தடவி தடவி திறந்த உதவியாளர் பீட்டர்" கியாரிக்.. கியப்பிக்கி... " என்றான். (நமக்கு ஜிர்கோனி தெரியாததால் இனி மொழி பெயர்க்க வேண்டியது கடமை ) "மரண வெற்றி பாஸ்.ம் " "மனித உடல்ல பாக்க ரொம்ப அழகா இருக்க ஹி ஹி " "பூமி வெற்றிகரமா கைப்பற்ற பட்டது .வாழ்க ஜிர்கோனி.." " நான் யார் உடல்ல இருக்கேன் பாரு.  உலகத்துல இருக்கிற விஞ்ஞானிகள்ல இவர் தான் பெரிய உஸ்தாதாம்.. "  "உலக முதன்மை விஞ்ஞானியையே பிடிச்சிடீங்க தலைவரே.. நீங்க கீர்த்தி மிக்கவர்..." அந்த தலைவன் கொ...

" தங்கம் "

Image
  "தங்கம் " (அறிவியல் சிறுகதை ) ரா.பிரபு அன்று விடியல் சூரியனின் ரத்த சிகப்பில் 'அபாயம்'குறியீடு இருந்தது. ரீடிங்குகளை பார்த்த டாக்டர் பெஞ்சமின் ரியோ ,தான் ஒரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி என்பதை மறந்து ஓரு சிறுவனை போல அந்த காரிடாரில் ஓடினார்.  "டாக்டர் எனி பிராப்ளம் " ?? எதிர் பட்ட உதவியாளர்கள் பதட்டத்தை இவரிடம் பற்ற வைத்து கொண்டார்கள்.  "எஸ் எஸ் வெரி மச் .." பெஞ்சமின் நெற்றியை சொரிந்து கொண்டார் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தார். சிகரெட் பாதி உடல் இளைப்பதற்குள் நசுக்கி கொன்று தூக்கி போட்டார். "அவசர கூட்டம் ஏற்பாடு பண்ணுங்க அனைத்து நாட்டு விஞ்ஞானிகள் கூட்டம்..  அதுங்க திரும்ப வருதுங்க.. உலகத்தை அழிக்க " ▪️▪️▪️ அந்த அறையின் பிரமாண்டத்தில் புட் பால் ஆடலாம். ஆனால் இப்போது வெறும் மின்னணு 3D ஒலி/ஒளி  சூழ பட்டு பூராம் டிஜிட்டல் உருவங்கள் நின்றிருந்தது. 2042 ஆம் ஆண்டின் தொழில் நுட்ப சக்தி காரணமாக அவர்கள் விர்சுவல் என்பதை அறியாத அளவு நேரில் பிரசன்னமாக இருந்தார்கள்.  "இன்டர்நேஷனல் ஏலியன் ரிசர்ச் சென்டர் சார்பாக அனைவருக்கும் பேட் மார்னிங் சொல்லுவதற்கா...

ஜெட் வேக கதை 4

Image
 " ஜெட் வேக கதை "4 ரா.பிரபு செல்வராஜ் தனது பள்ளி படிக்கும் மகனும் பக்கத்து வீட்டு சிறுவனும் பேசிக்கொள்வதை தூர இருந்து அசுவாரசியமாக கவனித்துக் கொண்டிருந்தார். "டே உனக்கு உங்க அம்மாவை பிடிக்குமா டா.. " "ஆமாம் டா ரொம்ப பிடிக்கும் " "இல்ல நீ பொய் சொல்ற " என்றான் பக்கத்து வீட்டு பையன் "நான் ஏண்டா பொய் சொல்றேன் எங்க அம்மானா எனக்கு உயிர். " என்றான் செல்வராஜ் மகன். "அப்படியா.. அது உண்மைனா எங்க எனக்கு ஒரு 20 ரூபாய் கொடு பார்ப்போம். அப்போ தான் நம்புவேன் " என்று அவன் கூறியதும் மகன் உடனே அவனுக்கு பாக்கெட் மனிக்கு கொடுக்க பட்ட பணத்தில் 20 ரூ கொடுப்பதை பார்த்து செல்வராஜ் அதிர்ந்தார்.. "டே இங்க வாடா முட்டாள் பயலே " என்று கத்தினார். அவன் பயந்து அப்பாவிடம் வர.. அந்த உஷார் சிறுவன் ஓடி ஒளிந்து இருந்தான் " ஏண்டா உனக்கு அறிவு இல்ல அவன் உன் அம்மா பாசத்தை பயன்படுத்தி உண்ண ஏமாற்ற பார்க்கிறான்.. உனக்கு புரியலையா..." "அவன் அம்மா பாசத்தை சொன்னான் பா அம்மாவை விட்டு கொடுக்க முடியுமா...பா.. அதான்.." என்று மகன் குறைந்த ஸ்தாயியி...

"க்ராபைன் உலகை மாற்றும் கார்பன்"

Image
  "க்ராபைன் உலகை மாற்றும் கார்பன்" "அறிவியல் காதலன் " -ரா.பிரபு- இன்று காலை உங்களுக்கு பிடித்த ஒரு சாக்லேட் ஐ வாங்கி சாப்பிட்டு விட்டு விளையாட்டாய் அதன் மேல் சுற்ற பட்ட ஒரு மெல்லிய பிளாஸ்டிக் பேப்பரை கிழிக்க முயல்கிறீர்கள்.  என்ன ஆச்சர்யம் உங்களால் அதை பிரம்மபிரயத்தன பட்டும் கிழிக்க முடியவில்லை. உங்கள் நண்பருக்கு அதை கொடுத்து முயல சொல்கிறீர்கள் ,அவரும் கிழித்து பார்த்து விழி பிதுங்குகிறார். ஒரு குண்டூசி எடுத்து அதில் ஓட்டையாவது போடலாம் என்று முயற்சி பண்ணி பார்கிறீர்கள் ஊசி ஊடுருவ மாட்டேன் என்கிறது.  அருகில் உள்ள ஓரு தொழிற்சாலை சென்று அந்த பேப்பர் மேல் கூரான ஊசி முனையை வைத்து அதில் ஒரு 2000 கிலோ அழுத்தம் கொடுத்த பின் தான் ஓட்டை போட முடிந்தது என்றால் உங்கள் ஆச்சர்யம்  எப்படி இருக்கும் ? அந்த பிளாஸ்டிக் பேப்பர் Graphene ஆல் செய்ய பட்டு இருந்தால் இதில் ஆச்சர்ய பட ஒன்னும் இல்லை. "Graphene " கிழியாத சாக்லேட் பேப்பர் தயாரிக்க அல்ல மாறாக உலகை மாற்றும் பல புதிய கண்டு பிடிப்புகளை செய்ய உதவ கூடியது. உதாரணமாக உங்கள் மொபைலை யாராவது 5 வினாடியில் 100 சதம் சார்ஜ் பண்ண முட...

இனி இதான் வழி

Image
 #இனி_இதான்_வழி (சிறுகதை) #ரா_பிரபு ஆதி தன் பண்ணை வீட்டின் மாடியில் இருந்து தூர அந்த பெண் செல்வதைப் பார்த்தான் . போதையில் இருந்ததால் பார்வை சற்று மங்கலாக தெரிந்தது. 'பெண் தானே.. அட பெண் தான்.. அதுவும் சின்ன பெண்..' அவன் முகம் ஓநாய் போல மாறியது 'இன்னைக்கு நம்ம போதைக்கு ஊறுகாய் கிடைத்தது விட்டது.' ஆதி ஒரு பணக்கார வீட்டு பையன் பண்ணை வீடு குடி.. போதை..அவன் பொழுது போக்கு. ஆதி வீட்டை விட்டு இறங்கி அந்த சிறுமி இருந்த இடத்தை அடைந்த போது வெய்யில் மண்டையை சுட்டது. யாருக்கோ சாப்பாடு கொண்டு போறாள் போல.. இப்போ எனக்கு இவ தான் சாப்பாடு.. "ஏ பாப்பா உன் பெயர் என்ன " ?  "பா...பாரதி " என்றாள் தயங்கி.. "பாரதி பாப்பா..எந்த வீடு மா...நீ ?" போதை வாசத்துடன் வார்த்தை துப்பினான். அவளை கண்களால் அளவு எடுத்தான். அவள் விபரம் சொன்னதும் .. "ஓ அந்த ஜாதி பொண்ணா நீ...." என்றான் இளகாரமாய்.. "சரி சரி இங்க வா...ம்.. அதோ அந்த பண்ணை வீட்டுக்கு வந்துட்டு போ..." " அய்யோ நான் சாப்பாடு கொண்டு  போகணும் அண்ணா என்ன விட்டுடுங்க " என்று பயந்த குரலில் சொன்னவள்...

ஜெட் வேக கதை 3

Image
  ஜெட் வேக கதை 3  #கருணை #ரா_பிரபு வர்ஷா பாய் கடையை அடைந்த போது கொஞ்சமாய் கூட்டம் இருந்தது.இவளை கவனித்த பாய் "வா மா வர்ஷா.. அங்க உட்கார் இதோ ஒரு 2 கஸ்டமர் தான் அனுப்பிட்டு வரேன் " என்றார்... வர்ஷா அமர்ந்து கொண்டு அசுவாரஸ்யமாய் கடையை பராக்கு பார்த்து கொண்டு இருந்த போது அதை கவனித்தாள்.. மேலே ஒரு பறவை கூண்டு அதில் லவ் பேர்ட்ஸ் கீச்சி கொண்டு இருந்தன .. "என்ன பாய் லவ் பேர்ட்ஸ் வாங்கி இருக்கீங்க " "ஆமாம் மா நேத்து தான் வாங்கினேன் சும்மா.. கடைக்கு நல்லா இருக்கும் இல்ல.....ஒரு டிபரண்டா இருக்குமே னு....." வர்ஷா கொஞ்சமாய் கோபம் கலந்த குரலில் "என்ன பாய் நீங்க அதுங்க லவ் பேர்ட்ஸ் சுதந்திரமாய் வானில் சுத்தி திரிய வேண்டியவைகள்...மொதல்ல அதை திறந்து விடுங்க சொல்றேன் " என்றாள் "அய்யோ என்னமா சொல்ற நேத்து தான் வாங்கினேன் 1800 ரூ மா.."பாய் தயங்க... "அட அந்த காசை நான் கொடுக்கிறேன் திறங்க னு சொல்றேன் இல்ல " என்றாள் பாய் கொஞ்சம் வேண்டா வெறுப்பாக அதை திறந்து பறக்க விட்டார்... 10 நிமிட கழிந்த பின்.. "வா மா வர்ஷா என்ன வேணும் சொல்லு.. ஆமாம் ...எப்ப...

ஜெட்_வேக_கதை 2

Image
 #ஜெட்_வேக_கதை 2 #உயிர்_விளையாட்டு  ரா_பிரபு அந்த சிம் கடையில் இருந்து புதிய சிம் வாங்கி கொண்டு சண்முகம் வெளியே வந்த போது தான் அந்த பதட்ட குரலை எதிர் கொண்டார்..  எதிரே நன்கு உடை அணிந்த ஒரு இளைஞன் நின்று இருந்தான். "சார் சார் உங்க பெயர் சண்முகம் தானே " "ஆமாம் பா.. என்ன விஷயம் " என்றார் முகத்தில் குழப்பம் சூழ "உங்க பையன் பெயர் ராஜ்குமாரா? " "ஆமாம் பா என்ன விஷயம் " இம்முறை பதட்டம் இவரிடம் டிரான்ஸ்பர் ஆகி இருந்தது. " சார் நான் உங்க பய்யனுடைய நண்பன் ..உங்க பைய்யன் ஒரு ஆக்சிடெண்ட் ஆகி 2 தெரு தள்ளி இருக்கிற ஆஸ்பிடல் ல அட்மிட் பண்ணி இருக்கோம் "  "அய்யோ என்னப்பா சொல்ற " சண்முகம் சடாரென நெஞ்சை பிடித்து கொள்ள.. "கொஞ்சம் அவசரம் சீக்கிறம் வாங்க ப்ளீஸ் " சண்முகம் உடல் நடுங்க போனை எடுத்து யாருக்கோ கால் செய்தார் வாய் ஏதோ முனு முனுத்தது. 'அய்யோ வீட்டு போன் நம்பர் கூட சரியா நியாபகம் இல்லையே இப்போ தான் புது சிம் வாங்கினேன் நம்பர் ஏதும் பதிவு வேற பண்ணலையே நான் என்ன பண்ணுவேன் ' தனது நினைவில் இருந்து எண்கள் தட்டி   எதிர் முனை ஹலோ ...